கிரீன்லாந்து உண்மையிலேயே ஆப்பிரிக்கா அளவுக்குப் பெரியதா? பெரும்பாலான வரைபடங்களில் அப்படித்தான் தெரிகிறது. உண்மையில், ஆப்பிரிக்கா சுமார் பதினான்கு மடங்கு பெரியது.
TrueWorld Maps துல்லியமான உலக வரைபடத்தில் நாடுகளின் உண்மையான அளவைக் காட்டுகிறது. ஒரு நாட்டை அழுத்திப் பிடித்து, எங்கு வேண்டுமானாலும் இழுத்துச் செல்லுங்கள்; அது நிலநடுக்கோட்டை நோக்கி நகரும்போதோ அதிலிருந்து விலகும்போதோ பெரிதாவதையும் சிறிதாவதையும் பாருங்கள். நாடுகளின் உண்மையான அளவையும், தட்டையான வரைபடம் எவ்வளவு தவறாகக் காட்டுகிறது என்பதையும் உடனே தெரிந்துகொள்வீர்கள்.
தட்டையான வரைபடங்கள் அளவுகளை ஏன் தவறாகக் காட்டுகின்றன
பூமி உருண்டையானது; எதையாவது நீட்டாமல் எந்தத் தட்டையான வரைபடத்தாலும் அதைக் காட்ட முடியாது. உலக உருண்டை மட்டுமே எல்லா அளவுகளையும் சரியாகக் காட்டும். பெரும்பாலான வரைபடங்களுக்கு அடிப்படையான மெர்கேட்டர் வீழல், நிலநடுக்கோட்டிலிருந்து தொலைவு கூடக் கூட நிலப்பரப்பை மேலும் மேலும் நீட்டுகிறது. அதனால் ரஷ்யா ஆப்பிரிக்காவை விடப் பெரியதாகத் தெரிகிறது; கனடா அமெரிக்கா, சீனா, பிரேசில் மூன்றும் சேர்ந்ததை விடப் பெரியதாகத் தெரிகிறது; கிரீன்லாந்து தென் அமெரிக்காவை விடப் பெரியதாகத் தெரிகிறது. செயலியில் அவற்றை அருகருகே வைத்துப் பாருங்கள், வேறுபாடு எவ்வளவு என்று தெரியும்.
நீங்கள் என்ன செய்யலாம்
• எந்த நாட்டையும் உலக வரைபடத்தின் குறுக்கே இழுத்துச் சென்று இன்னொரு நாட்டுடன் ஒப்பிடலாம்
• ஒரே நேரத்தில் பல நாடுகளை அருகருகே வைத்து ஒப்பிடலாம்
• பரப்பளவைச் சதுர கிலோமீட்டரிலோ சதுர மைலிலோ பார்க்கலாம்
• ஒவ்வொரு நாட்டின் பரப்பளவுடன் அதன் மக்கள்தொகையையும் பார்க்கலாம்
• உலகின் எல்லா நாடுகளையும், அவற்றுடன் தீவுகளையும் ஆட்சிப்பகுதிகளையும் ஆராயலாம்
• பெயரைக் கொண்டு தேடி நேராக அங்கே செல்லலாம்
• ஒவ்வொரு இடத்தின் கொடி, பரப்பளவு, மக்கள்தொகை ஆகியவற்றுடன் ஒரு சிறு குறிப்பைப் படிக்கலாம்
பள்ளிக்கு
ஆசிரியர்கள் வரைபட வீழலையும் அளவுகோலையும் விளக்க TrueWorld Maps செயலியைப் பயன்படுத்துகிறார்கள்; மாணவர்கள் வீட்டுப்பாடத்துக்கும் செயல்திட்டங்களுக்கும் இதைப் பயன்படுத்துகிறார்கள். நாடுகள் பற்றிய தகவல்களும் அளவு ஒப்பீடுகளும் இணைய இணைப்பு இல்லாமலே வேலை செய்யும்.
ஒப்பீடு எப்படிச் சரியாக இருக்கிறது
நீங்கள் ஒரு நாட்டை நகர்த்தும்போது, பூமியின் மேற்பரப்பில் அதன் புதிய இடத்துக்கு ஏற்ப செயலி அதன் வடிவத்தை மீண்டும் வரைகிறது. அதனால் அதை எங்கே வைத்தாலும் ஒப்பீடு சரியாக இருக்கும். பரப்பளவுகளும் மக்கள்தொகைகளும் பொதுவில் கிடைக்கும் ஆதாரத் தரவுகளிலிருந்து எடுக்கப்பட்டவை.
முயன்று பார்க்க வேண்டிய ஒப்பீடுகள்
பிரேசிலும் ஆஸ்திரேலியாவும் நீங்கள் நினைப்பதை விட அளவில் நெருக்கமானவை. இந்தியா கிரீன்லாந்தை விடச் சிறியதாகத் தெரிகிறது, ஆனால் உண்மையில் அது பெரியது. சீனா, அமெரிக்கா, இந்தியா, ஐரோப்பாவின் பெரும்பகுதி ஆகிய எல்லாம் சேர்ந்து ஆப்பிரிக்காவுக்குள் அடங்கிவிடும். ரஷ்யாவையும் ஆப்பிரிக்காவையும் ஒப்பிட்டுப் பாருங்கள், அல்லது உங்கள் நாட்டையும் அண்டை நாட்டையும் ஒப்பிடுங்கள். எந்த நாடுகளின் அளவு ஒப்பீட்டுக்கும் சில நொடிகளே ஆகும்.
இணையம் இல்லாமல்
இணைய இணைப்பு சிறிதும் இல்லாமலே ஆஃப்லைன் உலக வரைபடம் வேலை செய்யும்; உலக அளவிலும் கண்ட அளவிலும் பெரிதாக்கிப் பார்க்கலாம். இன்னும் மிக நெருக்கமாகப் பெரிதாக்கிப் பார்க்க உதவும் விரிவான இணையமில்லா வரைபடங்கள் Pro சந்தாவுடன் கிடைக்கும்.
TrueWorld Maps என்பது உலகின் உண்மையான அளவு வரைபடம், புவியியலில் ஆர்வமுள்ள எவருக்கும் ஏற்ற கையடக்க நிலப்படத் தொகுப்பு, தேவைப்படும்போது ஒரு நாட்டைப் பற்றிய தகவலை விரைவாகச் சரிபார்க்கும் வழி.
கேள்விகளோ யோசனைகளோ உள்ளனவா? info@trueworldmaps.com என்ற முகவரிக்கு எழுதுங்கள்.
அரசியல் மற்றும் சர்ச்சைக்குரிய பகுதிகள் பற்றிய பொறுப்புத் துறப்பு:
நாடுகளின் ஒப்பீட்டு அளவுகளைப் புரிந்துகொள்ள உதவுவதே இந்தச் செயலியின் முதன்மை நோக்கம். நாட்டு எல்லைகளையோ தற்போதைய அரசியல் நிலைகளையோ துல்லியமாகக் காட்டுவது இதன் நோக்கம் அல்ல. எல்லைகள் மாறுவதால் இப்போதோ எதிர்காலத்திலோ ஏற்படக்கூடிய அரசியல் சார்ந்த பிழைகளுக்கு வருந்துகிறோம்.
நாடுகளை இழுத்து அவற்றின் உண்மையான அளவைப் பாருங்கள். நீங்கள் வியப்படையலாம்!
புதுப்பிக்கப்பட்டது:
5 அக்., 2026