பிளான்டிக்ஸ் - உங்கள் பயிர் மருத்துவர்

அனைவருக்குமானது
46,698

நீங்கள் விவசாயியா அல்லது தோட்டக்கலையில் ஆர்வம் கொண்டு காய்கறிகள், கனிகள் அல்லது விளைநில பயிர்களைச் சாகுபடி செய்பவரா? உங்கள் பயிர்கள் ஆரோக்கியமற்று இருக்கின்றனவா; கடந்த அறுவடையின்போது இழப்புக்களை சந்தித்தீர்களா? அப்படியானால் மாற்றத்தை உருவாக்க வேண்டிய நேரம் இது! நாங்கள் பிளான்டிக்ஸ்.நாங்கள் விரைவாக இலவச உதவிகளை வழங்குகிறோம். நீங்கள் விளைவிப்பது தக்காளியோ, வாழையோ அல்லது நெற்பயிரோ, எதுவானாலும் சரி, பிளான்டிக்ஸ் உங்களது பயிர்களுடன் இடையறாத தொடர்பில் இருக்கும் மருத்துவராக இருக்கும். இதற்குத் தேவைப்படுபவையெல்லாம், கேமரா பொருத்தப்பட்டுள்ள இணையத் தொடர்பு கொண்ட திறன்பேசி மட்டுமே. பிரச்சினை எவ்விடத்தில் இருந்தாலும் சரி, திறன்பேசியிலிருந்து அனுப்பப்படும் புகைப்படம் போதுமானது, அது கிடைத்த சில நொடிகளில் நோய் கண்டறியப்பட்டு அதற்குரிய சிகிச்சை முறைகள், உதவிக் குறிப்புக்கள் உங்களை வந்து சேரும். உலகமெங்கும் காணப்படும் 15 முக்கிய பயிர்களுக்கு இந்த உறுதி நிச்சயம்.

இது எவ்வாறு செயல்படுகிறது? ஒவ்வொரு நோயும், நோய்ப்பூச்சியும், குறைப்பாடும் அவற்றுக்கே உரிய குறிப்பிட்ட வகை உருப்படிவங்களை தடம் பதிக்கின்றன. பிளான்டிக்ஸ் இந்த உருப்படிவங்களை அடையாளம் காண ஒரு புகைப்படம் போதும். உங்கள் பயிர் என்ன காரணத்திற்காகப் பாதிப்புக்கு உள்ளாகின்றது என்பதை நீங்கள் அறிந்து கொள்ள முடியும். எங்களது சமுக வளைத்தளத்தில் உங்களைப் போன்ற எண்ணங்கள் கொண்டவர்களுடன் நீங்கள் உங்கள் அனுபவங்களையும் தகவல்களையும் பரிமாறிக் கொள்ளலாம். உங்கள் பகுதிக்கு அருகில் இருப்பவர்களுடனும் சரி, சர்வதேச வல்லுனர்களுடனும் சரி, இதனை நீங்கள் பரிமாறிக்கொள்ளலாம். இந்த வகையில், குறைப்பாட்டு அறிகுறிகள், நோய்ப்பூச்சிகள் மற்றும் நோய்கள் ஆகியவை குறித்த உங்களது சந்தேகங்களுக்கு நடைமுறை தீர்வுகளையும், உதவிகரமான பதில்களையும் விரைவில் பெறுவீர்கள்.

இதன் மிகப் போற்றத் தக்க அம்சம் என்னவென்றால் ஒவ்வொரு புதிய பயன்பாட்டாளரின் வருகையினால் பிளான்டிக்ஸின் செயல்பாடுகள் மேலும் சிறப்புறும். எனவே பிளான்டிக்ஸ் சமூகத்தோடு ஒன்றிணையுங்கள்! ஒவ்வொரு புகைப்படமும், ஒவ்வொரு கருத்தும் உலகெங்கும் வாழும் மக்களுக்குப் பயனளிக்கும். அவர்களது பயிர்கள் ஆரோக்கியமாக வளரவும் அவர்களது அறுவடை சிறக்கவும் துணை புரியும். எனவே, புத்திசாலித்தனமாகப் பயிர் செய்யத் தொடங்குங்கள்!

இந்தக் கட்டுரையில் இடம் பெற்றிருக்கும் கருத்துக்கள் குறித்து நீங்கள் ஏதேனும் குறிப்பிட விரும்பினால் அல்லது உங்கள் கருத்துக்களை தெரிவிக்க விரும்பினால் எங்களைக் கீழ்கானும் மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளுங்கள்; contact@peat.ai


++பிற இணைப்புகள்+++

http://peat.ai

http://plantix.net

https://plantix.net/plant-disease/

+++ சமூக ஊடகம் +++

https://twitter.com/plantixapp

https://www.facebook.com/Plantix/
மேலும் படிக்க
சுருக்கு
4.3
46,698 (மொத்தம்)
5
4
3
2
1
ஏற்றுகிறது...

புதியவை

-்நிலைத்தன்மையும், செயல்பாடும் மேம்பட்டுள்ளன
மேலும் படிக்க
சுருக்கு

கூடுதல் தகவல்

புதுப்பிக்கப்பட்டது
19 மே, 2020
அளவு
8.1M
நிறுவல்கள்
10,000,000+
தற்போதைய பதிப்பு
3.2.0
Android தேவை
5.0 மற்றும் அதற்கடுத்த பதிப்புகள்
உள்ளடக்க மதிப்பீடு
அனைவருக்குமானது
ஊடாடத்தக்கவை
பயனர் தொடர்பு
வழங்குபவர்
PEAT GmbH
©2020 Googleதளத்தின் சேவை விதிமுறைகள்தனியுரிமைடெவெலப்பர்கள்கலைஞர்கள்Google - ஓர் அறிமுகம்|நாடு: அமெரிக்காமொழி: தமிழ்
இதை வாங்குவதன் மூலம், Google Paymentsஐப் பயன்படுத்திப் பரிவர்த்தனையை மேற்கொள்வதோடு, Google Payments இன் சேவை விதிமுறைகள் மற்றும் தனியுரிமை அறிக்கை ஆகியவற்றை ஏற்கிறீர்கள்.