சங்கத்தமிழ்க் கவிதைகளைத் தேடியபொழுது பாட்டிலக்கண முறைப்படி ஓசையொழுங்குடன் கூடிய மூலக் கவிதையினையும், பின்பு சிறிதளவு தமிழறிந்தோரும் படித்து எளிதாகப் பொருள் புரியும் வண்ணம் அவ்வரிகளைப் பிரித்த கவிதையினையும், கவிதைக்கான உரைகளையும் ஒரே செயலியில் இந்தச் செயலி உலகில் என்னால் பார்க்க முடியவில்லை. அதை நிவர்த்தி செய்ய தன்னார்வம் கொண்டதன் விளைவே இந்தச் செயலி.
இதில் எட்டுத்தொகை நூல்களான நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை, அகநானூறு, பதிற்றுப்பத்து, புறநானூறு, பரிபாடல் ஆகியனவும்,
பத்துப்பாட்டு நூல்களான குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, முல்லைப்பாட்டு, திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, மலைபடுகடாம், மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை ஆகியனவும்,
பதினெண் கீழ்கணக்கு நூல்களான நாலடியார், நான்மணிக்கடிகை, இனியவை நாற்பது, இன்னா நாற்பது, திரிகடுகம், ஆச்சாரக்கோவை, சிறுபஞ்சமூலம், முதுமொழிக் காஞ்சி, பழமொழி நானூறு, ஏலாதி, திருக்குறள், கார் நாற்பது, ஐந்திணை ஐம்பது, திணைமொழி ஐம்பது, ஐந்திணை எழுபது, திணைமாலை நூற்றைம்பது, கைந்நிலை, களவழி நாற்பது ஆகியனவும் எழுத்துரு வடிவில் உரையுடன் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.
இந்தச் செயலி முழுக்க முழுக்க சங்கத்தமிழ் சார்ந்த பதிவுகளையும், கவிதைகளையும் உள்ளடக்கியதாக இருக்கும்.
மேலும் செயலி உலகில் சங்கத்தமிழுக்கென்று செயலிகள் மிகச் சொற்ப அளவிலே வலம்வந்துகொண்டு இருக்கின்றன அவைகளுக்கு வலுச்சேர்க்க ஒரு தனித்துவம் வாய்ந்த செயலியாக இதை மெருகேற்றிக்கொண்டு இருக்கவேண்டும் என்பதே எங்களது கனவு...