அந்தேரி மேம்பாலத்தில் ஒரு சந்திப்பு / Andheri Membalathil Oru Santhippu: சுதா குப்தாவின் துப்பறியும் அனுபவங்கள்

காலச்சுவடு பதிப்பகம் / Kalachuvadu Publications
Free sample

பல சிறிய பெரிய ஊர்களிலிருந்து  நிதம் பல்லாயிரக்கணக்கான பேர்கள் வந்து குவியும் மகா நகரமான மும்பாயின் வாழ்க்கைப்போக்குடன் கலந்திருக்கும் பெண்-ஆண் உறவுச்சிக்கல்கள், மகிழ்ச்சி, குதூகலம், ஏமாற்றம், ஏக்கம், தீராத நாட்டம், சோகம், வக்கிரம், வன்முறை இவை எல்லாம் கலந்த  அன்றாட வாழ்க்கை ஓட்டத்தை, துப்பறியும் பெண் ஒருத்தியின் தொழில்முறை அனுபவங்கள் மூலமாகக் கூறும் மூன்று நீண்ட கதைகள்.

காலச்சுவடு பதிப்பகம் / Kalachuvadu Publications 


Read more

About the author

அம்பை (பி. 1944)

அம்பை (டாக்டர் சி.எஸ். லக்ஷ்மி) வரலாற்றாசிரியர். புது தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த நாற்பது ஆண்டுகளாகப் பெண்கள் வரலாறு, வாழ்க்கை பற்றிய ஆய்வில் ஈடுபட்டிருப்பவர். பெண் எழுத்தாளர்கள், பெண் இசைக் கலைஞர்கள், பெண் நடனக் கலைஞர்கள் குறித்து இவர் மேற்கொண்ட ஆய்வுகள் ‘The Face Behind the Mask’, ‘The Singer and the Song’, ‘Mirrors and Gestures’ என்னும் புத்தகங்களாக வெளிவந்துள்ளன.

இவரது சிறுகதைத் தொகுதிகள் ‘சிறகுகள் முறியும்’ (1976), ‘வீட்டின் மூலையில் ஒரு சமையலறை’ (1988), ‘காட்டில் ஒரு மான்’ (2000), ‘வற்றும் ஏரியின் மீன்கள்’ (2007), ‘ஒரு கறுப்புச் சிலந்தியுடன் ஓர் இரவு’ (2013). அம்பையின் கதைகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு ‘A Purple Sea’, ‘In a Forest, A Deer’, ‘Fish in a Dwindling Lake’ என மூன்று தொகுதிகளாக வெளிவந்துள்ளன. ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட இரோம் ஷர்மிலாவின் ‘Fragrance of Peace’ கவிதைத் தொகுப்பைத் தமிழில் ‘அமைதியின் நறுமணம்’ (2010) என மொழிபெயர்த்திருக்கிறார். அமெரிக்காவில் உள்ள விளக்கு அமைப்பின் புதுமைப்பித்தன் விருது (2005), கனடாவின் டொரான்டோ பல்கலைக்கழகத்தின் தமிழ் இலக்கியத் தோட்டத்தின் வாழ்நாள் இலக்கிய விருது (2008), தமிழக அரசின் கலைஞர் மு. கருணாநிதி பொற்கிழி (2011), சென்னைப் பல்கலைக்கழகத்தின் இலக்கியத்தில் உன்னதத்திற்கான விருது (2011) முதலானவற்றைப் பெற்றிருக்கிறார்.

SPARROW (Sound & Picture Archives for Research on Women) என்னும் பெண்கள் ஆவணக் காப்பகத்தை மும்பையில் 1988இல் நிறுவி அதன் இயக்குநராகச் செயல்பட்டுவருகிறார்.

Read more
Loading...

Additional Information

Publisher
காலச்சுவடு பதிப்பகம் / Kalachuvadu Publications
Read more
Published on
Mar 11, 2015
Read more
Pages
119
Read more
Features
Read more
Language
Tamil
Read more
Genres
Fiction / Short Stories (single author)
Read more
Content Protection
This content is DRM protected.
Read more
Read Aloud
Available on Android devices
Read more

Reading information

Smartphones and Tablets

Install the Google Play Books app for Android and iPad/iPhone. It syncs automatically with your account and allows you to read online or offline wherever you are.

Laptops and Computers

You can read books purchased on Google Play using your computer's web browser.

eReaders and other devices

To read on e-ink devices like the Sony eReader or Barnes & Noble Nook, you'll need to download a file and transfer it to your device. Please follow the detailed Help center instructions to transfer the files to supported eReaders.
நாஞ்சில் நாடனின் சிறுகதைகள் அக உலகைத் தேடும் முயற்சியில் இறங்காதவை. மனிதனுக்கும் – குறிப்பாக ஆணுக்கும் – அவனைச் சூழ்ந்திருக்கும் உலகத்திற்கும் இடையே, தொடர்ந்து, இடைவேளையே இல்லாமல் நடைபெறும் மோதல்களையும், உராய்வுகளையும், கொஞ்சல்களையும், சிணுங்கல்களையும், எல்லாவற்றிற்கும் மேலாக முயக்கங்களையும் நேரடியாக, பாசாங்குகள் இன்றிச் சித்திரிப்பவை. இச்சித்திரங்களின் வண்ணக் கலவைகள் அசாதாரணமானவை. எப்படி இவரால் முடிந்தது என நம்மை வியக்க வைப்பவை.

அனேகமாக எல்லாச் சிறுகதைகளிலும் மானுடம் வெல்கிறது. வெற்றியை நமக்குத் திகட்டாமல் செய்ய முடிந்ததே நாஞ்சில் நாடனின் வெற்றி.

பி.ஏ. கிருஷ்ணன்

காலச்சுவடு பதிப்பகம் / Kalachuvadu Publications  / Kalachuvadu Pathippagam

 

 நவீனத் தமிழ்ச் சிறுகதையில் மௌனி ஒரு தனிநபர் இயக்கம். அவர் கதைகளில் சொல் புதிது; பொருள் புதிது; அவர் சமைத்த உலகமும் புதிது.

மௌனியின் எழுத்துக்களுக்கு முன்னோடியும் வாரிசும் அவர் மட்டுமே. இந்தத் தன்மையை இனங்கண்டுதான் அவரைச் ‘சிறுகதையின் திருமூலர்’ எனப் புதுமைப்பித்தன் வியந்தார்.

தமிழின் முன்னோடிச் சிறுகதையாளர்கள் மனித மனத்தின் மையத்திலிருந்து வெளியுலகை நோக்கி நகர்ந்தபோது, மௌனி உள் உலகின் விளிம்புகளுக்குள் பயணம் செய்தார். மனத்தின் இருள், விநோதம், தத்தளிப்பு, குதூகலம் போன்ற வழிகளில் நிகழ்ந்த பயணங்கள்தாம் மௌனியின் பெரும்பான்மையான கதைகளும்.

சுருங்க எழுதிப் பெரும்புகழ் பெற்றவர் மௌனி. அவர் மொத்தம் எழுதியவை 24 கதைகள், 2 கட்டுரைகள். மௌனியின் மொத்த ஆக்கங்களையும் உள்ளடக்கியது இந்நூல்.

காலச்சுவடு பதிப்பகம் / Kalachuvadu Publications  / Kalachuvadu Pathippagam 

தி. ஜானகிராமனின் சிறுகதை ஆளுமை செவ்வியல்தன்மை கொண்டது. அவரது ஆரம்பகாலக் கதைகளில் ஒன்றான ‘பசி ஆறிற்று’ முதல் கடைசிக் கதை ‘சுளிப்பு’வரையிலும் இந்தத் தன்மையைக் காணலாம். வடமொழி இலக்கியங்களில் பெற்ற அறிமுகம், தமிழ் இலக்கியங்களிலிருந்து பயின்ற விரிவு, பிறமொழி இலக்கியங்களிருந்து அடைந்த செய்நேர்த்தி இவை கதைகளின் புற வடிவத்தையும் காலங்காலமாகப் போற்றப்பட்ட மானுட மதிப்பீடுகள்மீது கொண்ட நம்பிக்கை ஆழத்தையும் நிர்ணயித்திருக்கின்றன. இந்தக் கூறுகளால் ஆன படைப்பு மனம் இயல்பாகவே ஒரு பூரிதநிலையை எட்டியிருந்தது. அதில் மேலதிகமாக எதையும் சேர்க்கவோ அல்லது எடுக்கவோ அனுமதிக்காத முழுமையை அந்த மனம் கொண்டிருந்தது. காற்றிலிருந்து ஈரத்தை உறிஞ்சிக்கொள்வதுபோலக் காலத்தின் கசிவை அந்தப் படைப்பாற்றல் உள்ளிழுத்துக்கொண்டு தன்னை நிரந்தரப் புதுமையாகவும் வைத்துக்கொண்டிருந்தது. இன்று வாசிக்கும்போதும் தி. ஜானகிராமனின் கதைகள் புதுமை குன்றாதவையாகவும் வாசகனை ஈர்க்கும் வசீகரத்தை இழந்துவிடாதவையாகவும் இருப்பது இந்த குணத்தால்தான். 

காலச்சுவடு பதிப்பகம் / Kalachuvadu Publications 

©2018 GoogleSite Terms of ServicePrivacyDevelopersArtistsAbout Google
By purchasing this item, you are transacting with Google Payments and agreeing to the Google Payments Terms of Service and Privacy Notice.