அவருடைய பெயரில் நாகனார் என்பது இயற்பெயராகவும் விளம்பி என்பது ஊர் பெயர் என்று சொல்லப்படுகிறது. பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் நாலடியாரைப் போல நான்கு அடிகளைக் கொண்டது நான்மணிக்கடிகை.
ஆனால், இந்த நான்கு அடிகளில் ஒவ்வொரு அடியும் ஒவ்வொரு கருத்தைச் சொல்லுகின்றது. நான்கு நான்கு கருத்துக்களாக கோர்க்கப்பட்டதால் இந்த நூலுக்கு நான்மணிக்கடிகை என்று பெயர் வந்தது.
கடிகை என்று சொன்னால் பொருள்களின் துண்டம் என்று அர்த்தமாகும். எனவே, நான்மணிக்கடிகை என்பது நான்கு ரத்தின துண்டங்கள் என்று பொருள்படுகிறது.
இந்த நூலில் வரும் ஒவ்வொரு பாடலிலும் ஒருமித்த சிறந்த நான்கு கருத்துக்களை தேர்வு செய்து அழகிய சொல்லாடலில் தொடர்களாக வைத்து பாடப்பட்டுள்ளது.
இது படிப்பவர்களுக்கு சொற்சுவையும், பொருட்சுவையும் நிறைந்த பாடல்களாக அமைந்துள்ளது. சொல்பவருக்கும் கேட்பவருக்கும் இன்பத்தை அள்ளித் தரும் விதமாக இந்த நான்மணிக்கடிகை அமைந்துள்ளது.