Tamilar Veeram: தமிழர் வீரம்

Mukil E Publishing And Solutions Private Limited
5

 திரு. நாவலர் ச. சோமசுந்தர பாரதியார் அவர்கள் எழுதிய முதற் பதிப்பின் முகவுரை


"தமிழர் வீரம்" என்னும் நல்லுரைத் தொகுதி வரப்பெற்றேன்; படித்து உவகையுற்றேன். இவ் வினிய உரைச் செய்யுள் எழுதிய புலவர், சென்னைப் பல்கலைக் கழகத் தலைவராம் திரு. ரா.பி. சேதுப்பிள்ளை அவர்கள் "சொல்லின் செல்வர்" என வளமலி புலமை இளந்தமிழுலகு பாராட்டும் இப் பேராசிரியர் இனிய எழுத்தாளர்; இன்சொற் பேச்சாளர். இவர்கள் உரை கேட்டு மகிழாத தமிழர் இரார். இவர்கள் இயற்றும் நூல் எதுவும் தமிழகம் முழுவதும் செல்லும் நாணயம்;  இந் நூலுக்கு முகவுரை எழுதித் தகவுபெறுமாறு என்னைத் தூண்டியது என்பால் இவர்கள் கொள்ளும் அன்பைக் காட்டும். தமிழில் சிறந்த செய்யுட்கள் எல்லாம் அகம், புறம் என்னும் பொருட்செல்வக் கருவூலங்களாகும. அகப் பொருள் நூல்கள் அனைத்தும் காதற் களஞ்சியங்கள். புறப்பொருள் நூல்களில் பழந் தமிழரது பேராண்மையும் அவரது போர் அறத்துறையும் பேசப்படும். தமிழ்ப் பொருநா் வீரம், இகலார் மேற் படையெடுக்கும் இழிவை இகழும்; வெற்றி வெறியிலும் வீழ்வாரை நலியும் சிறுமையை வெறுக்கும். தமிழர் போர் அற ஒழுக்கம், வெட்சி-வஞ்சி-உழிஞை-தும்பை-வாகை என்றைந் திறப்படும். பகைவரை எச்சரியாமல் மெய்வீரர் போர் தொடங்கார். அவ் வெச்சரிப்பின் பொதுவகையே வெட்சித் திணை(ஒழுக்கம்) ஆகும். படையெடுப்பு வஞ்சி எனப்படும். பகைவர் அரணழித்தல் உழிஞை. பொருகளத்தில் எதிர்த்துப் போர் புரிதல் தும்பை. முடிவில் வெற்றி மாலை மிலைவது வாகை. இப்போர் ஒழுக்கம் ஒவ்வொன்றும் இடங் காலங்களுக் கேற்பப் பலதிறத் துறை வகுத்து நடக்கும்.

இத்தகைய தமிழர் செந்திறப் போர்த்துறை அனைத்தும் முறைபடத் தொகுத்து, வரிசைப்படுத்தி, எளிதில் எல்லோரும் தெளியுமாறு சிறிய இவ்வுரை நூலில் விளக்கிய ஆசிரியர் புலமைத் திறம் பாராட்டற்பாலது. போர்க் கொடியேற்றம், படைத்திறம், போர்க்களம், மறமானம், தானைவகை, நிலப்படை, கடற்படையாட்சி, கோட்டை கொத்தள மாட்சி, பேராண்மை, மாதர் வீரம், வீரக்கல், விருதுவகை எல்லாம் நிரல்படத் தொகுத்து திறம்பட வகுத்து இந்நூலில் விளக்கப்பட்டுள்ளன. புறநானூறு, திருக்குறள், பெருந்தொகை, புறத்திரட்டு முதலிய பெரு நூல்களும், அவை கூறும் அருந்திறற் செய்திகளும் இதில் அழுகுற எடுத்து ஆளப்படுகின்றன. பண்டைத் தமிழர் போர் மரபும், மற மாண்பும் வீரர் அறப் பரிசும் எல்லாம் சிறிய இவ்வொரு நூலே செரிய விளக்கும் பெற்றியும், இதன் பொருள் நிறைவும் சொல்வளமும் வியப்பொடு நயப்பும் விளைவிக்கின்றன. இந்நூலை அறிஞரெல்லாம் பாராட்டி வரவேற்று ஆதரிப்பார் என நம்புகிறேன். நூலுக்கு வாழ்த்தும், நூலசிரியருக்குப் பல்லாண்டு கூறுகிறேன்.


பசுமலை, நாவலன் - இளசைகிழான்

ச. சோ. பாரதி


Read more

Reviews

4.6
5 total
Loading...

Additional Information

Publisher
Mukil E Publishing And Solutions Private Limited
Read more
Published on
Jan 23, 2016
Read more
Pages
90
Read more
Language
Tamil
Read more
Genres
History / Ancient / General
Read more
Content Protection
This content is DRM protected.
Read more
Read Aloud
Available on Android devices
Read more

Reading information

Smartphones and Tablets

Install the Google Play Books app for Android and iPad/iPhone. It syncs automatically with your account and allows you to read online or offline wherever you are.

Laptops and Computers

You can read books purchased on Google Play using your computer's web browser.

eReaders and other devices

To read on e-ink devices like the Sony eReader or Barnes & Noble Nook, you'll need to download a file and transfer it to your device. Please follow the detailed Help center instructions to transfer the files to supported eReaders.
 முன்னுரை


இது என்னுடைய இரண்டாவது சரித்திர நாவல். நான் முதலாவது என்று மனப்பூர்வமாக நினைக்கக் கூடிய இந்த நாவல் படைத்த முறைப்படி வருகிற எண்ணிக்கையில் இரண்டாவது வரிசையில் நிற்கிறது. இந்த நாவலை எழுதத் திட்டமிடுவதற்கு முன்பே சில கொள்கைகளைச் சிறப்பாகவும் சிரத்தையாகவும் வகுத்துக் கொண்டேன் என்பதை நான் இப்போது மீண்டும் நினைவு கூர்கிறேன். வரலாற்றையே முழு நிலைக்களனாக எடுத்துக் கொள்ளாமல் வரலாற்றுப் பின்னணியையும், சூழ்நிலைகளையும் அமைத்துக் கொண்டு அழகும் ஆழமும் மிகுந்த ஒரு கதையைப் புனைய வேண்டுமென்று நான் எண்ணியிருந்த எண்ணம் இந்த நாவலில் ஓரளவு நன்றாகவே நிறைவேறியிருக்கிறது.


      நமது இலக்கியங்களில் வரலாற்றுக் காலத்துப் பூம்புகார் நகரம் கம்பீரமான வருணனைகளால் போற்றிப் புகழப்பட்டிருப்பதைப் பலமுறை படித்திருக்கிறோம். பத்தொன்பதாம் நூற்றாண்டின் இலண்டன் மாநகரத்தைக் காட்டிலும் நகர்ப் பரப்பினாலும் பிற பெருமைகளாலும் பூம்புகார் நகரம் சிறப்புற்றிருந்ததாகச் சொல்லுகிறார்கள். இலக்கியங்களிலும் காவியங்களிலும் படித்துப் படித்து மனக்கண்ணால் கண்டிருந்த பூம்புகார் நகரம் என்னை ஏற்கெனவே மயக்கியிருந்ததென்றுதான் சொல்ல வேண்டும். இந்தக் கதையை எழுதியதனால் அந்த மயக்கம் இன்னும் வளர்ந்ததே ஒழியக் குறையவில்லை.


     போர்க்களங்களில் வில்லும் வேலும் வாளும் கேடயமும் ஏந்திச் செய்கிற போரைப் போலவே வரலாற்றுக் காலத்துப் பூம்புகாரின் சந்திகளிலும் சதுக்கங்களிலும் பல்வேறு சமயவாதிகள் அறிவுப் போர் நடத்திக் கொண்டிருந்ததாக நூல்களில் படித்திருக்கிறோம். புகழும் பெருமையும் மிக்க அந்த அறிவுப் போரில் இந்தக் கதாநாயகனும் ஈடுபடுகிறான். வெற்றி பெறுகிறான்.


     இந்தக் கதாநாயகனின் வாழ்க்கை ஓர் அழகிய தத்துவம். சுரமஞ்சரியிலிருந்து முகுந்தபட்டர் வரை எல்லாரும் கதாநாயகனாகிய இளங்குமரனுக்குத் தோற்றுப் போவதாக அவனிடமே சொல்கிறார்கள். அவனோ யாரையுமே வென்றதாக ஒப்புக் கொள்ள மாட்டேனென்கிறான். இறுதிவரை பிடிவாதமாக அன்பு செய்து அவனை வென்றவளாகிய சுரமஞ்சரியும் கூட தான் வெற்றி பெற்றதை மறந்து அவனுக்குத் தோற்றதாகவே அவனிடம் சொல்கிறாள். உடம்பினாலும் தோற்றத்தாலும் மட்டுமல்லாமல் குணங்களாலும் மிக அழகியவன் இந்தக் கதாநாயகன். குணங்களாலும் அழகுடையவர்கள் காதலிக்கத் தகுந்தவர்கள். இந்தக் கதையில் எல்லாக் கதாபத்திரங்களுமே இளங்குமரனுடைய குண அழகை ஏதோ ஒரு வகையில் ரசிக்கிறார்கள். வீரத்தையே ஒரு தவமாகச் செய்யும் நீலநாகர், பிடிவாதமாக அன்பு செய்து தளரும் முல்லை, தீமைகளின் எல்லையில் போய் நிற்கும் பெருநிதிச் செல்வர் நகைவேழம்பர், இளங்குமரனுடைய முழு வாழ்க்கையையுமே தன்னையறியாமல் தற்செயலாக வரைந்து முடித்து விடுகிற ஓவியன் மணிமார்பன், நல்லவற்றுக்குப் பாதுகாப்பு அளிப்பதே ஒரு தவம் என்று எண்ணும் அருட்செல்வர் எல்லாரும் இதில் உயிர்க்களையோடு நன்கு உரம்பெற்று நடமாடுகிறார்கள்.


     ஆனாலும் இந்தக் கதையில் படிப்பவர்கள் எல்லாரையும் ஒருங்கே கவர்கிற கதாபாத்திரம் சுரமஞ்சரியாகத்தான் இருப்பாள். இளங்குமரனுக்காக ஏங்கி ஏங்கி உருகி அவள் எல்லாவற்றையும் இழந்து விட்டுக் கடைசியாக அவனைப் பற்றிய விருப்பத்தை மட்டும் இழக்க இயலாமல் அவன் பாதங்களில் வீழ்ந்து கண்ணீர் பெருக்கி - "இந்தப் பாதங்களைத் தொழுவதைத் தவிர எனக்கு வேறு செல்வங்கள் வேண்டியதில்லை" - என்று அவனோடு கீழிறங்கி நடக்கும் இடம் மெய்சிலிர்க்கச் செய்வது இந்தக் கதைக்கும் கதாநாயகனுக்கும் சுரமஞ்சரி என்ற கதாபாத்திரம் இத்தனை முழுமையாகக் கனிந்த நிலையில் கிடைத்ததற்காக வாசகர்களும், எழுதியவனும் நிச்சயமாகப் பெருமைப்பட முடியும். அவளுடைய பரிசுத்தமான மனச்சாட்சியை மதிப்பதற்கு மண்ணுலகத்து மதிப்பீடுகள் போதாதென்றாலும் முடிந்தவரை மதித்தாக வேண்டிய கடமை நமக்கு உண்டு. "பிறருக்காக நம்மை இழந்து விடுவதில் ஒரு சுகம் இருக்கிறது" என்று இளங்குமரன் தன் கல்வி, தவம் எல்லாவற்றையும் பொருட்படுத்தாது சுரமஞ்சரிக்குத் தன்னைக் கொடுக்கிறான். இவ்வளவு நல்ல கதாபாத்திரமாக வாய்த்ததற்காக இந்தக் கதாசிரியனும் அவளுக்கு ஏதோ ஒரு விதத்தில் நன்றி செலுத்தியாக வேண்டும். இந்த நாவலை அந்த அழகிய கதாபாத்திரத்திற்குச் சமர்ப்பணம் செய்வதைத் தவிர வேறெந்த வகையிலும் அந்த நன்றியைச் செலுத்த முடியாது என்பதால் இந்த நாவலைச் சுரமஞ்சரி என்ற கதாபாத்திரமே அடைவதாகப் பாவித்துக் கொள்கிறேன். கல்கியில் படிக்கும்போது, பல்லாயிரக்கணக்கான வாசகர்களும் இதையே வரவேற்றார்கள். புத்தகமாகப் படிக்கும் பேறு பெற்றவர்களும் இப்படியே வரவேற்பார்கள் என்று நினைக்கிறேன்; நம்புகிறேன்.


  


அன்புடன்


நா. பார்த்தசாரதி


சென்னை


1-6-1970

 பதிப்புரை


காதலை வெளிப்படுத்த , காதலை உணர்த்த , காதலைப் புரிய வைக்க ஆகச் சிறந்த ஒரு வழி கவிதை.

காதல் கொண்ட எவரும்; கவிஞராகி விடுகிறார்; எனும் போது , கவிஞர்களால் எழுதப்படும் காதல் கவிதைகள் சிறப்பானவை.

வெறும் அபத்தம், மயக்கம் என்ற நிலைகளைத் தாண்டிய ஒரு உணர்வுபூர்வமான நிலை காதலுக்கு உண்டு.

அந்த நிலையை வெளிப்படுத்தும் கவிதைகளை வாசிக்கும் வாசகரின் மனதில் , எப்போதோ முகிழ்த்த காதலின் நினைவுகள் உயிர்த்தெழுவதை தடுக்க முடியாது.

அத்தகையை கவிதைகளின் தொகுப்பு தான், கவிஞர்.க.ஆனந்த் எழுதிய “நாணத்தின் மறுபக்கம்” என்ற தலைப்பிலான இந்தக் கவிதைகள்.

இந்தக் கவிதைகள் காதல் கொண்டவர்களுக்கு மட்டுமல்ல, காதலைக் கொண்டாடும் மனம் கொண்டவர்களுக்கும் உரித்தானவை.

வாசியுங்கள். காதலின் புனிதத்தை சுவாசியுங்கள்…


 முன்னுரை


நம் நாட்டு வைத்தியம் என்று பொதுவாகக் கூறப் படுவது மூன்று. அவை சித்தமருத்துவம் யூனானி, ஆயுர் வேதம் எனப் பெயர் பெறும் யூனானி உருதுமொழிக்கும், ஆயுர்வேதம் வடமொழிக்கும் சித்த மருத்துவம் தமிழ் மொழிக்கும் உரியவை. ஆயுர்வேத மருந்துகள் பெரும் பாலும் பஸ்பமும் திராவகமுமாகவும், யூனாணி மருந்து கள் பெரும்பாலும் அல்வாவும் இலேகியமுமாகவும், சித்த மருத்துவ மருந்துகள். பெரும்பாலும் எண்ணெயும் கியாழமுமாகவும் இருக்கும். r -


சித்தர்கள் நம் நாட்டுப் பேரறிஞர்கள்; நமது முன் னோர்கள். அவர்கள் துருவி ஆராய்ந்து, கண்டுபிடித்துக் கையாண்டு கொடுத்துப்போன செல்வமே சித்த மருத்துவ மாகும். இவ்வைத்தியம் தோன்றிய காலத்தை எவராலும் குறிப்பிட்டுக் கூற இயலாது. கூறவேண்டுமானால் தமிழகத்து மண்ணில் செடி கொடிகள் தோன்றிய காலம் என்றே கூறவேண்டும். -


தமிழ் மருத்துவம், தமிழ் நாட்டில், தமிழ் அறிஞர் களால், தமிழ் மொழியில் கூறப்பெற்றவை என்ற சிறப்பை மட்டும் பெறவில்லை. அது தமிழகத்தின் தட்ப வெப்ப நிலைக்கு ஏற்பத் தமிழகத்தில் வாழும் மக்களுக்கு வருகின்ற நோய்களைப்போக்க, தமிழகத்தில் முளைக்கும் செடி கொடிகளையே மூலிகைகளாகக் கொண்டிருக்கிறது என்ற பெருஞ் சிறப்பையும் பெற்றிருக்கிறது.

தமிழ் மருந்துகள், காலத்தால் முந்தியும், திறமையால் மிகுந்தும், விலையால் குறைந்தும், கையாள்வதில் சிறந்தும் இருந்தும், அது தமிழ் மன்னர்கள் இறந்தும், தமிழரசு அழிழ்ந்தும், தமிழ் உணர்ச்சி குறைந்தும்விட்ட காரணத்தால், தன் சிறப்பை இழந்து வருகிறது. தமிழ் மருத்துவர்களும் வறுமை வாய்ப்பட்டுத் தவறு செய்கின் றனர். தோன்றிய தமிழ் மருத்துவ உயர்நிலைப் பள்ளி யும் எடுபட்டுப் போயிற்று. இருக்கும் ஒரு கல்லூரியும் தவறான பாதையில் திருப்பிவிடப்பட்டிருக்கிறது. தாய் வழி மகள் காதுவழிக் கேட்டு, கைவைத்தியமாகச் செய்து வந்த பிள்ளை வைத்தியம், குடும்ப வைத்தியம் அருகி மறைபட்டு வருகிறது. இது நாட்டின் தீமையே யாகும்.


தமிழ் மக்களுக்கு உணர்ச்சி வராதா? தமிழ் நாடு தன்னரசு பெறாதா? தமிழ் மருத்துவம் தன்னிடத்தை அடையாதா? வரும், பெறும், அடையும் என்று நான் நம்புவதுண்டு. அதற்குரிய முதற்படியும் சிறுபணியுமே இந் நூல். இந் நூலிற் கூறப்பெற்றுள்ள அனைத்தும் எங்கள் பெரும் குடும்பத்திற் கையாண்ட 100-க்கு 80-ம் 90-ம், 100-க்கு 100-ம் வெற்றிபெற்ற அனுபவ உண்மை களாகும். தமிழக மக்கள் இதனைப் பயன்படுத்திப் பயன் அடைவார்களாக! 

வாழ்க தமிழகம்

 கி. ஆ. பெ. விசுவாாதம்


 பதிப்புரை


காதலை வெளிப்படுத்த , காதலை உணர்த்த , காதலைப் புரிய வைக்க ஆகச் சிறந்த ஒரு வழி கவிதை.

காதல் கொண்ட எவரும்; கவிஞராகி விடுகிறார்; எனும் போது , கவிஞர்களால் எழுதப்படும் காதல் கவிதைகள் சிறப்பானவை.

வெறும் அபத்தம், மயக்கம் என்ற நிலைகளைத் தாண்டிய ஒரு உணர்வுபூர்வமான நிலை காதலுக்கு உண்டு.

அந்த நிலையை வெளிப்படுத்தும் கவிதைகளை வாசிக்கும் வாசகரின் மனதில் , எப்போதோ முகிழ்த்த காதலின் நினைவுகள் உயிர்த்தெழுவதை தடுக்க முடியாது.

அத்தகையை கவிதைகளின் தொகுப்பு தான், கவிஞர்.க.ஆனந்த் எழுதிய “நாணத்தின் மறுபக்கம்” என்ற தலைப்பிலான இந்தக் கவிதைகள்.

இந்தக் கவிதைகள் காதல் கொண்டவர்களுக்கு மட்டுமல்ல, காதலைக் கொண்டாடும் மனம் கொண்டவர்களுக்கும் உரித்தானவை.

வாசியுங்கள். காதலின் புனிதத்தை சுவாசியுங்கள்…


 முன்னுரை


"சீவகன் காவியத் தலைவன்; அவனைச் சிந்தா மணியே என்று அவன் தாய் அவன் பிறந்தபோது அழைத்தாள்; அதனால் இந்நூலுக்கு 'சீவக சிந்தாமணி என்று பெயர் வழங்குகிறது.


இதன் ஆசிரியர் திருத்தக்க தேவர் ஆவார். அவர் ஒரு சமணத் துறவி என்று அவருக்கு முத்திரை குத்தப்பட்டி ருக்கிறது. இந்தக் காவியத்தைப் பொருத்தவரை அவர் இளங்கோவடிகள் போல ஒரு மாபெருங் கவிஞர் எனவே கொள்ள வேண்டி இருக்கிறது. அவர் துறவு பற்றிக் கூறுவதால் அவரைத் துறவி என்று கூறிவிட்டனர் என்று தோன்றுகிறது.


இந்த நூல் கம்பராமாயணத்துக்கும், பெரிய புராணத்துக்கும் முன்பு தோன்றியது. வைணவ ஆழ்வார்களும் சைவப் பெரியார்களும் கடல் மடை திறந்தது போன்று பாமாலைகள் பாடிவிட்டுச் சென்று இருக்கின்றார்கள்.


அவர்களுக்குப் பின் தோன்றிய மதிக்கத்தக்க நூல்களுள் இது தலையாயது ஆகும்.


கல்வியில் பெரியவர் கம்பர் என்று கூறுவர்; காவியத்தில் திருத்தக்கர் முன்னோடி என்று கூற வேண்டி யுள்ளது. கம்பருக்கும் இவர் முன் மாதிரியாக விளங்கி யுள்ளார். இதன் தனிச் சிறப்பு ஏற்கனவே வழங்கி வந்த கதையை இவர் தன் கவிதையாற்றலால் அழகுபடுத்தி

யுள்ளமை, சங்க இலக்கியப் பாடல்கள் அவற்றின் உவமை மரபுகள் வருணனைகள் இதில் மிகுதியும் இடம் பெற்றுள்ளன.


எனவே சீவக சிந்தாமணி பழந்தமிழ் இலக்கிய மரபுகளைக் காத்துத்தரும் ஒரு பெட்டகம் என்று கூறலாம். காலத்தில் முற்பட்டது என்பதால் மொழி நடை சற்றுப் பொருள் உணர அரியதாக இருக்கிறது. நச்சினார்க்கினியர் விளக்கவுரை தந்துள்ளார்.


நச்சினார்க்கினியர் தரும் செய்திகள் மிகவும் அரியன. பத்துப்பாட்டுக்கு உரை எழுதிய இப்பேராசிரியர் இதற்கும் உரை தந்திருப்பது பல அரிய வழக்குகளை அறிய உதவுகிறது.


இதனை உரைப்படுத்தி இதன் கதையை மற்றவர்களும் அறியச் செய்ய வேண்டும் என்று எடுத்துக் கொண்ட முயற்சியே இது.


கதை சுவை மிக்கது; வீரகாவியம், இதில் கூறப்படும் நீதிக் கருத்துக்கள் அருமையானவை; வாழ்க்கைக்குப் பயன் படுபவை: பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள், திருக்குறள் தரும் நீதிகளை இந்நூல் ஆங்காங்குத் தருகின்றது. அவற்றில் இல்லாத நீதிக் கருத்துகளும் புதுமையாக இதில் தரப்படு கின்றன.


எனவே இது உரைநடையாக்கம் செய்வதால் தமிழ்ப் புதையலை வெளிக் கொணரும் பணி செய்ததாக ஒரு மன நிறைவு ஏற்படுகிறது.


இதனை நேர் கவி பெயர்ப்பாக எழுதினால் அது பொழிப்புரையாகுமே அன்றி உரை நடையாக்கம் ஆகாது. எனவே இதன் உள்ளடக்கமும் செய்திகளும் சிதையாமல் அதற்கு வடிவம் தரவேண்டிய தேவை ஏற்பட்டது.

அதனால் இதை நேர் கவிபெயர்ப்பாக அமைக்காமல் இக்காலப் போக்கிற்கு இயையச் சுவையும் அழகும் நயமும் மிக்க உரை நடை வடிவம் தரப்பட்டுள்ளது.


மூல நூலினின்று இது அடிப்படையில் மாறுபட வில்லை; மாற்றும் உரிமையை எடுத்துக் கொள்ளவில்லை; அதன் உள்ளடக்கம் சிறிதும் வழுவாமல் புதிய வடிவம் தந்திருக்கிறேன்; அவ்வளவுதான்.


கதையின் இயக்கத்திற்குச் சில கூட்டல் கழித்தல்கள் தேவையாயின. முன்பின் இணைத்துக் கூற வேண்டுவதாக ஆயிற்று.


இருபதாம் நூற்றாண்டு இலக்கிய உரைநடைத் தமிழ் வேறு: அக்காலத் தமிழ் வேறு; ஆயிரம் ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு திருத்தக்கதேவர் சொல்நடையை இன்று எடுத்து எழுத இயலாது. உவமைகளும் ஒரு சில புதிது தேவைப்பட்டன. அந்த வகையில் மூல நூலினின்று சற்று வேறுபடுகிறது.


இது சமண நூல் என்று முத்திரை குத்தப்பட்டு விட்டது. எந்தச் சமயமும் மனித தர்மத்தையே கூறுகிறது. அதைக் கூறும் முதல் மனிதன் வழிபடும் கடவுள் ஆகிவிடு கிறார். அவர் பெயரில் இக்கருத்துகளுக்கு ஒரு சமய நெறி என்ற முத்திரை தரப்படுகிறது. அதன் கருத்துக்கள் கொள்கைகள் மானிட சமுதாயம் முழுவதும் ஏற்றுக் கொள்ளத் தக்கவையாக இருப்பதால் அவற்றை வேறு புதிய போக்கில் விளக்க வேண்டியது ஆயிற்று.


காலத்துக்கேற்ற வகையில் அறிவுக்கு ஏற்கக் கூடிய வகையில் அவை இங்குக் கூறப்பட்டுள்ளன. அவற்றை எடுத்துக் கூறப் புதிய உத்திமுறைகள் கையாளப்பட்டு இருக்கின்றன.

ஏற்கனவே பாரதம் இராமாயணம் இவற்றை உரை நடையாக்கம் செய்திருக்கிறேன். அவை மூல நூலினின்று எந்த வகையிலும் மாற்றம் பெறாத வகையில் அடியொற்றி எழுதப்பட்டன. இதனை அவ்வாறு எழுத முடியவில்லை. இதில் இருக்கின்ற இன்பச்சுவைப் பாடல்கள் மூலநூலில் உள்ள வடிவத்தில் படிப்பதுதான் தகும்; உரை நடையாக்கம் செய்தால் இழிசுவையாக அமையும்.


இதுவரையில் யாரும் இதன் கதையை உரைநடையில் தர முன்வரவில்லை; அந்தக் குறையை இது நிறைவு செய்கிறது; அவ்வகையில் இது ஓர் உரைநடைக் காவிய மாகத் திகழ்கிறது.


ரா. சீனிவாசன்

©2018 GoogleSite Terms of ServicePrivacyDevelopersArtistsAbout Google
By purchasing this item, you are transacting with Google Payments and agreeing to the Google Payments Terms of Service and Privacy Notice.