புலவர் கு. இரவீந்திரன் அவர்கள் தமது நீண்ட நெடுங்காலக் கல்விப் பணிக்குப் பிறகு முழுமையாக படைப்புப் பணியில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டு புதினம், ஆன்மீகம், இலக்கியம், ஆய்வு சார்ந்த பல நூல்களைப் படைத்து, குமரிமாவட்ட சாதனை எழுத்தாளர் பட்டியலில் முந்தியிருக்கிறார். வானொலி தொலைக்காட்சிகளில் இலக்கிய உரைகள் நிகழ்த்தி மக்கள் நெஞ்சங்களில் நீங்காத இடம் பிடித்தவர். எழுத்தாலும் பேச்சாலும் வாசகர் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் எனப் பல பன்முகத்தன்மைகளைக் கொண்டு தமிழுக்குத் தொண்டாற்றி வருபவர்