பேராசிரியர் திரு ராமா சந்திரமௌளி தெலுங்கு இலக்கிய உலகில் புகழ்பெற்று விளங்குகிறார். நாவல், கதை, கவிதை, கட்டுரை என்று எல்லா வகை இலக்கியங்களிலும் முத்திரை பதித்துள்ளார். இந்தத் தொகுப்பில் இருபது சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. இவை மானுட விழுமியங்களின் மீதான ஆசிரியரின் அக்கறையை வெளிப்படுத்துகின்றன.
இவர் ஜெயகாந்தனின் தீவிர ரசிகர். அவரைச் சந்தித்து பேசியதை பெருமையாக நினைக்கிறார். தன்னை ‘தெலுங்கு மொழியின் ஜெயகாந்தன்’ என்று கூறிக் கொள்கிறார். பேராசிரியர் திரு ராமா சந்திரமௌளி 1950 ல் பிறந்தார். எம்டெக் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்தார். வாரங்கலில் உள்ள கணபதி இன்ஜினியரிங் கல்லூரியில் பிரின்ஸ்பால் ஆக பணிபுரிகிறார். சிறந்த கவிஞரும் எழுத்தாளரும் இலக்கிய ஆர்வம் உள்ளவருமான இவரது 78 நூல்கள் பிரசுமாகியுள்ளன. 32 நாவல்கள், 405 சிறுகதைகள் அடங்கிய பல சிறுகதை தொகுப்புகள், 14 கவிதை தொகுப்புகள், மூன்று நாடகங்கள், 4 விமர்சன நூல்கள், ஆங்கிலத்தில் ஏழு கவிதை நூல்கள் வெளிவந்துள்ளன. உலக கவிதைகள் மாநாட்டில் கவிதைகள் படித்த அனுபவம் உள்ளவர்.
மாநில அளவில் மிக உயர்ந்த இலக்கிய விருதான தெலுங்கு விஸ்வ வித்யாலயா கவிதை புரஸ்காரத்தை 2017 ல் பெற்றார். தெலங்காணா மாநில மிகச்சிறந்த இலக்கிய விருது 'காளோஜி' புரஸ்காரத்தை 2020ல் முதலமைச்சர் கே.சந்திரசேகர ராவின் கரங்களில் இருந்து பெற்றார்.