வெற்றி பெறுவதன் இரகசியத்தை தெரிந்துகொள்ள துவங்கிய முயற்சி இது. உலகில் பல்வேறு நாடுகளில், வேறுபட துறைகளில் ,வெற்றி பெற்றவர்களில், பெரும் சோதனைகளை கடந்து, எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் வெற்றிபெற்ற , 34 நபர்களின் வாழ்க்கைச் சுருக்கமும், அவர்கள் எப்படி வெற்றிபெற்றார்கள் என்ற ஆய்வும் உள்ள புத்தகம் இது.
வெற்றிபெற்ற மனிதர்களை நாம் படிக்கும் சமயம், நமக்குள்ளும் வெற்றிபெறும் நம்பிக்கை பிறக்கும். சில சிக்கலான முடிவுகளை எடுக்க வேண்டிய நேரத்தில், இவர்கள் என்ன செய்தார்கள் என்பதை யோசித்தால், மிகச்சரியான, வெற்றிதரும் முடிவுகளை நாமும் எடுக்க முடியும். ஆகவே, வெற்றியும் உறுதியாக உங்களுக்கு கிடைக்கும்.
மிகச் சாதாரண குடும்பத்தில் பிறந்த புத்தக ஆசிரியர் திரு. பிரசன்னா வெங்கடேசன். பலரது வழிகாட்டுதல் மற்றும் தொடர் உழைப்பால் இன்று இவர், பயிற்சியாளர், எழுத்தாளர் மற்றும் வழக்கறிஞர். சென்னையில் வசிக்கும் இவர், 16 வருடங்கள்
கடந்த 2011 முதல் இந்தியா, மலேஷியா, கனடா போன்ற நாடுகளில் உள்ள, ஊழியர்கள், மேலாளர்கள், சுயதொழில் முனைவோர், வணிகத் தலைவர்கள் வரை, பல்வேறு பிரிவினர்களுக்கு பயிற்சி வழங்கி வருகிறார்.
பிறரையும் முன்னேற்ற பாதையில் செலுத்தும் இவர் முயற்சியின் வெளிப்பாடுதான் இந்த புத்தகம். இது ஒரு வாழ்க்கை வரலாற்று தொகுப்பு அல்ல. வெற்றி பெற்ற 34 மனிதர்களின் வாழ்க்கைச் சுருக்கம் மற்றும் அவர்கள் எப்படி வெற்றி பெற்றார்கள் என்ற ஆய்வு.
வாங்க ஜெயிக்கலாம்..!