Thirumandhiram: Thirumandhiram

4.5
71 reviews
Ebook
858
Pages

About this ebook

 சைவ சமயத்திற்குப் பிரமாண நூல்களாகத் திகழ்பவை பன்னிரு திருமுறைகள். இவை தெய்வத்தன்மை வாய்ந்தவை. பல அற்புதங்களை நிகழ்த்தியவை. இறைவனுக்கே நித்தலும் தமிழ் கேட்கும் இச்சை ஏற்படுத்தியவை. இவற்றை நித்தலும் நியமத்துடன் ஓதுவோர் பெறும் பலன் அளவிடற்கரியது.


தெய்வத் திருமுறைகளை ஓலைச் சுவடிகளில் படி எடுத்து, வரும் தலைமுறைகளுக்காக உதவிய முன்னோர்களுக்குச் சைவ உலகம் நன்றி செலுத்தக் கடமைப் பட்டுள்ளது. அச்சுத் தொழில் வந்தவுடன் இவற்றைப் புத்தக வடிவில் அச்சேற்றத் தொடங்கினர். அண்மைக் காலமாகக் காகிதவிலையும் அச்சுக்கூலியும் கடுமையாக உயர்ந்துவிட்டதால் புத்தகங்களின் விலை சாமானியர்கள் வாங்கும் அளவிற்கு இல்லை. இதற்கிடையில் வலைத் தளங்களின் வாயிலாக நூல்களைப் படிக்கவும் பலர் வகை செய்துள்ளனர். ஒவ்வொரு முறையும் படி எழுதும்போது பிழைகள் நுழைந்து விடுவது இயற்கை. அவற்றைத் திருத்தி வெளியிடாவிட்டால் மூல நூல்களில் அவை நிரந்தரமாக நிலை பெற்று விடும்.


வலைத்தளத்தில் கூடுமானவரை பிழை இன்றித் திருமுறைகளை வெளியிட வேண்டும் என்ற நோக்கத்தில் அவற்றைக் கணினியிலும் கைப்பேசியிலும் புத்தகமாகப் படிக்க வகை செய்கிறோம். இதற்கு நமக்கு முன்னோடியாகவும் வழிகாட்டியாகவும் இருந்த வலைத்தளங்கள் , projectmadurai.org மற்றும் shaivam.org ஆகியவை. அன்னாருக்கு நமது நன்றிகள் உரித்தாகுக.


நமது இம்முயற்சியில் பிழைகள் இருப்பின் தயவு செய்து சுட்டிக்காட்ட வேண்டுகிறோம். உடனடியாக அப்பிழைகள் களையப்பெற்று பிழையற்ற மூல நூல் கிடக்க அது வகை செய்யும்.


இதனை வெளிக்கொணர அயராது உழைத்த அன்பு நெஞ்சங்களுக்கு நன்றி. அம்பலவர் திருவருளால் பிற திருமுறைகளும் விரைவில் வர இவ்வன்பர்கள் முன்னிற்பர் என்பதில் ஐயமில்லை. இதனைக் கண்ணுறும் அன்பர்கள் சிவனருள் பெற்றுச் சீரிய வாழ்வு பெற வேண்டுகின்றோம்.

4.5
71 reviews
K.jawahar K.jawahar
January 1, 2016
Very nice
3 people found this review helpful
DAMODARAN SWAMINATHAN
October 18, 2016
A great gift to the Tamil society. As per Thirumoolar ,one can defy ageing and death if he/she follow Thirumandhiram. It will be highly helpful, if GOOGLE upload meanings along with the verses , for easy understanding , since the information is highly cryptic.For smart phone users ,GOOGLE enabled the readers to read it even in offline , which will be highly useful to read during long journeys. Nobody on this earth ,except Thirumoolar, prescribed ways to defy ageing and death.A portion of humanity, started to reap the benefits of yoga and meditation and indirectly became the followers of Thirumoolar and THIRUMANDIRAM .i am fortunate enough to go through the pages of Thirumandhiram , as I am retired and have enough time and Google enabled it through its Apps and Google play Books . Thank you very much ,GOOGLE.
6 people found this review helpful
Senthil Kumar
May 29, 2017
Great
3 people found this review helpful

About the author

 திருமூலதேவ நாயனார் சரித்திரம்

அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவரான திருமூலரை , " நம்பிரான் திருமூலன் " என்று பரவுகிறார் சுந்தர மூர்த்தி நாயனார். திருக்கயிலாயத்தில் நந்திதேவரின் திருவருள் பெற்ற யோகிகளுள் ஒருவர் திருமூலர். அஷ்ட சித்திகளையும் ஒருங்கே பெற்ற இந்த சித்த புருஷர், அகத்திய முனிவரைத் தரிசிக்க வேண்டித் தென் திசையில் உள்ள பொதிகை மலையை நோக்கிப் பயணிக்கையில், வழியில் திருக்கேதாரம், நேபாளத்திலுள்ள பசுபதி நாதம், காசி, திருப்பருப்பதம் என்னும் ஸ்ரீ சைலம், காளத்தி, திருவாலங்காடு, காஞ்சி, திருவதிகை வீரட்டானம், சிதம்பரம் ஆகிய தலங்களைத் தரிசித்தவராகத் திருவாவடுதுறைக்கு அண்மையில் உள்ள சாத்தனூர் என்ற ஊரை அடைந்தபோது , பசுக்களை மேய்க்கும் மூலன் என்ற இடையன் ஒருவன் மாண்டு கிடப்பதையும் அவனைச் சுற்றி நின்று, அவன் மேய்த்த பசுக்கள் கண்ணீர் சிந்திக் கதறுவதையும் கண்டார்.


   பசுக்களின் துயரம் தீர்க்க வேண்டித் தனது உடலை ஓரிடத்தில் வைத்து விட்டு, மூலனது உடலில் புகுந்தார். உயிர் பெற்று எழுந்த மூலனைக் கண்டு பசுக்கள் துயரம் நீங்கி, மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தன. மூலனது மனைவியார் அவரைத் தனது கணவன் என்று எண்ணி , வீட்டுக்கு வரும்படி கூப்பிட, அதனை மறுத்த திருமூலர் அவளை நீங்கினார்.


   தனது பழைய உடலைக் காணாது போகவே, மூலனது உடலில் இருந்தபடியே திருவாவடுதுறையை அடைந்து அரச மர நீழலில் அமர்ந்து யோகத்திலிருந்து, ஆகம சாரமாகத் தமிழில் ஆண்டுக்கு ஒரு பாடலாக,மூவாயிரம் பாடல்கள் கொண்ட திருமந்திரத்தை அருளிச் செய்தார். பன்னிரு திருமுறைகளுள், இந்நூல் பத்தாம் திருமுறையாக அமைந்துள்ளது.


இந்நூலின் அமைப்பினைச் சுருங்கக் காண்போமாக:


பாயிரம் : கடவுள் வாழ்த்து, வேதாகமச் சிறப்பு, திருமூலர் வரலாறு ஆகியன.


முதல் தந்திரம: உபதேசம்,யாக்கை நிலையாமை,செல்வம் நிலையாமை, கொல்லாமை, கல்வி, கள்ளுண்ணாமை ஆகியன.


இரண்டாம் தந்திரம்: அட்ட வீரட்டம்,இலிங்க புராணம், பஞ்ச கிருத்தியம் கர்ப்பக் கிரியை, சிவ நிந்தை, குருநிந்தை ஆகியன.


மூன்றாம் தந்திரம் : அட்டாங்க யோகம்,அட்ட மாசித்தி ஆகியன.


நான்காம் தந்திரம் : திரு அம்பலச் சக்கரம்,நவகுண்டம்,வயிரவி மந்திரம் ஆகியன.


ஐந்தாம் தந்திரம் : சரியை,கிரியை,யோகம்,ஞானம்,சத்தினி பாதம் ஆகியன.


ஆறாம் தந்திரம் : குரு தரிசனம் , திருநீறு, துறவு, தவ வேடம், ஞான வேடம் ஆகியன.


ஏழாம் தந்திரம்: ஆறாதாரம், சிவ பூஜை, குரு பூஜை, சமாதிக் கிரியை, பசு இலக்கணம் ஆகியன.


எட்டாம் தந்திரம் : அவத்தைகள், வாய்மை, அவா அறுத்தல், பத்தி, முத்தி ஆகியன.


ஒன்பதாம் தந்திரம் : பஞ்சாட்சரம், சிவ தரிசனம், சூனிய சம்பாஷனை, தோத்திரம் ஆகியன.


ஒன்பதாம் தந்திரம் : பஞ்சாட்சரம், சிவ தரிசனம், சூனிய சம்பாஷனை, தோத்திரம் ஆகியன.


மூலன் உரை செய்த மூவாயிரம் தமிழ்

ஞாலம் அறியவே நந்தி அருளது ்

காலை எழுந்து கருத்தறிந்து ஓதிடின்

ஞாலத் தலைவனை நண்ணுவரன்றே.

-- திருமந்திரம்

குடிமன்னு சாத்தனூர்க் கோக்குல மேய்ப்போன் குரம்பைபுக்கு

முடிமன்னு கூனற் பிறையாளன் தன்னை முழுத் தமிழின்

படிமன்னு வேதத்தின் சொற்படியே பரவிட்டு எ(ன்)னுச்சி

அடிமன்ன வைத்த பிரான் மூலனாகின்ற அங்கணனே.

-- திருத்தொண்டர் திருவந்தாதி

Reading information

Smartphones and tablets
Install the Google Play Books app for Android and iPad/iPhone. It syncs automatically with your account and allows you to read online or offline wherever you are.
Laptops and computers
You can listen to audiobooks purchased on Google Play using your computer's web browser.
eReaders and other devices
To read on e-ink devices like Kobo eReaders, you'll need to download a file and transfer it to your device. Follow the detailed Help Center instructions to transfer the files to supported eReaders.