இந்திய சுதந்திரப் போராட்டம் சிப்பாய் கலகத்திலிருந்து தீவிரம் அடைந்தாலும், அதற்கு முன்பே தமிழகத்தில் விடுதலைக்கான விதைகள் தூவப்பட்டன. பூலித்தேவன், மருது சகோதரர்கள், வீரபாண்டிய கட்டபொம்மன் வரிசையில் தீரன் சின்னமலையும் விடுதலை வேள்வியில் பங்கேற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. வெள்ளையர்கள், இந்தியாவில் சிதறுண்டு கிடந்த அரசர்களையும் குறுநில மன்னர்களையும் பார்த்து வியாபார வலை வீசினார்கள். வெள்ளையர்கள் சூழ்ச்சி செய்து பின்னால் நம் தேசத்தையே சூறையாடப் போவது தெரியாமல் அரசர்களும் குறுநில மன்னர்களும் அவர்களுக்கு ஆதரவு தந்தனர். எந்தச் சூதும் அறியாத அப்பாவி இந்தியப் பிரஜைகள் கிழக்கிந்தியக் கம்பெனியிலேயே பணியில் சேர்ந்து, வெள்ளையர்களுக்கு மறைமுகமாக உதவினர். இதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்ட வெள்ளையர்கள், கொஞ்சம் கொஞ்சமாக நம்மை வளைத்து சுரண்டத் தொடங்கி, இறுதியாக நம்மையே அடிமைப்படுத்தினார்கள்.
இந்தச் சூழலை உணர்ந்து, பொறுக்க முடியாமல் ஆர்ப்பரித்த வீரர்களில் ஒருவன் தீரன் சின்னமலை. கொங்கு நாட்டில் எண்ணற்ற வீர இளைஞர்கள் வளர வித்திட்டவர் தீரன் சின்னமலை.
Ilisasishwa tarehe
27 Nov 2013