அக்ரிசென்ட்ரல் ஒரு தொழில்நுட்பம் சார்ந்த செயலி. இதில் இந்திய விவசாயிகள் தங்களது லாபத்தை அதிகரிக்கவும் சிறந்த முடிவுகளை எடுக்கவும் உதவுகிறது. உலக இடவாக்கமைவு, செயற்கைக்கோள் உருவப்படபிடிப்பு, பெருந்தரவு பகுப்பாய்வு, இயந்திர வழி கற்றல், புகைப்பட பகுப்பாய்வு போன்ற நவீன தொழில்நுட்பங்களின் உதவியோடு விவசாயிகளை டிஜிட்டல் விவசாயத்தின் சகாப்தத்திற்கு கொண்டு செல்கிறது.
முற்றிலும் இலவசமான இந்த புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட செயலியில் உள்ள முக்கிய அம்சங்கள்:
பார்ம் வாய்ஸ்: இது உங்கள் கேள்விகளுக்கு தீர்வு காண நாட்டில் உள்ள முற்போக்கான விவசாயிகள் மற்றும் வேளாண் நிபுணர்களுடன் இணைவதற்கான இடம். உங்கள் பயிர் பற்றிய கேள்விகளை கேட்கலாம், புதிய விவசாய நுட்பங்களை அறிந்து கொள்ளலாம், வெற்றிக் கதைகளை பகிர்ந்துக்கொள்ளலாம் மற்றும் விவசாயம் தொடர்பான எந்தவொரு தலைப்பையும் விவாதிக்கலாம்.
கிராப் கேர்: உங்கள் பயிரை எந்த பூச்சி/நோய் தாக்கியுள்ளது என்பதை அறிய இது பட அடையாளம் மற்றும் அறிகுறி அடிப்படையிலான நோயறிதலை பயன்படுத்துகிறது. எளிய நடவடிக்கைகளின் மூலம், உங்கள் பயிரை பாதுகாக்க அல்லது குணப்படுத்த ஒரு நிபுணர் தீர்வை பெறுவீர்கள், மேலும் சரியான அளவோடு மிகவும் செலவு குறைந்த இரசாயனங்கள் பற்றிய பரிந்துரைகளையும் பெறுவீர்கள்.
கிராப் பிளான்: உங்கள் நடவு தேதி மற்றும் சாகுபடியின் வகையை மட்டும் வைத்து, குறைந்த செலவில் அதிக மகசூலைப் பெறுவதற்கான செயல்பாடுகளின் காலெண்டரை கிராப் பிளான் வழங்குகிறது. உரங்கள், பூச்சிக்கொல்லிகள், உயிரி-ஏஜண்டுகள் மற்றும் வேளாண் இரசாயனங்களின் சிறந்த பிராண்டுகளையும் நீங்கள் அறிந்து கொள்ளலாம்.
மார்க்கெட் வியூ: 25,000-க்கும் மேலான விலை புள்ளிகளுடன், உங்கள் பயிர்களின் தினசரி விலைகளின் சேகரிப்பை அக்ரிசென்ட்ரல் கொண்டுள்ளது. புதிய சந்தை விலைகளை நம்பகமான மூலங்களிலிருந்து பெறுகிறோம். மார்க்கெட் வியூ அருகிலுள்ள மற்றும் இந்தியா முழுவதும் உள்ள சந்தைகளில் பயிர் விலைகளையும் பார்க்க உதவுகிறது. உங்கள் பயிர்களின் சந்தைப் போக்கை பார்த்து, உங்கள் விளைபொருட்களை எப்போது, எங்கு விற்க வேண்டும் என்பதை நீங்கள் தீர்மானிக்கலாம்.
வானிலை: வானிலை பிரிவு உங்கள் பண்ணை நடவடிக்கைகளை திட்டமிடுவதற்கும், நஷ்டத்திலிருந்து பயிரை காப்பாற்றுவதற்கும் 15 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பை வழங்குகிறது.
ப்ரொபைல்: உங்கள் பண்ணை அளவை தானாக கணக்கிடலாம் மற்றும் வரைபடத்தில் உங்கள் பண்ணையின் எல்லைகளை குறிக்கலாம்.
புல்லட்டின்: வேளாண் வணிகத்தில் உள்ளூர், தேசிய மற்றும் உலகளாவிய முன்னேற்றங்களை அறிந்துகொள்ளுங்கள். திட்டப்பிரிவு நீங்கள் பயன்பெறக்கூடிய அரசாங்க திட்டங்களைப் பற்றி உங்களுக்கு சொல்கிறது மற்றும் அதை எவ்வாறு பெறுவது குறித்து ஆலோசனையையும் வழங்குகிறது. திட்டங்கள் குறித்த கூடுதல் தகவலின் குறிப்பிட்ட ஆதாரங்கள் தொடர்புடைய கட்டுரைகளில் குறிப்பிடப்பட்டுள்ளன.
வாருங்கள்!! அக்ரிசென்ட்ரலில் வேகமாக வளர்ந்து வரும் ஸ்மார்ட் விவசாயிகளின் சமூகத்தில் சேருங்கள்!
அரசு சார்பின்மை குறித்த பொறுப்புத் துறப்பு:
செயலியில் காட்டப்படும் தகவல்கள் அதிகாரப்பூர்வ அரசாங்க இணையதளங்கள், பிரஸ் இன்பர்மேஷன் பீரோ (https://pib.gov.in), மற்றும் வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சகம் (https://agriwelfare.gov.in/) வெளியீடுகளில் இருந்து பெறப்பட்டவை என்பதை அறிவுறுத்துகிறோம். இருப்பினும், அக்ரிசென்ட்ரல் செயலி எந்தவொரு மத்திய/மாநில அரசு(கள்) அல்லது அவற்றின் துறைகள் அல்லது ஏஜென்சிகளுடனும் எந்த வகையிலும் இணைக்கப்படவில்லை. வேறு வார்த்தைகளில், அக்ரிசென்ட்ரல், அவ்வப்போது பெறப்படும் அரசாங்க தகவல் மற்றும் ஆலோசனைகளை தெரிவிக்கலாம், ஆனால் எந்த அரசு நிறுவனத்துடனும் இணைக்கப்படவில்லை. நாங்கள் எந்த மத்திய அல்லது மாநில அரசுகளையோ அல்லது அதன் துறைகளையோ சார்புக்கொண்டு இல்லை எனவும் இதனின் எதேனும் தவறான விளக்கங்களிலிருந்து பொறுப்புத் துறக்கிறோம்.
அக்ரிசென்ட்ரல் மொபைல் செயலியை பதிவிறக்குவதன் மூலமோ பயன்படுத்துவதன் மூலமோ, இந்த பயன்பாட்டு விதிமுறைகளுக்கும், பொறுப்புத் துறப்புக்கும் உங்கள் ஒப்புதலைக் குறிக்கிறீர்கள். இந்த செயலியின் உள்ளடக்கங்கள், வரம்பற்ற அனைத்து தரவு, தகவல், உரை, கிராபிக்ஸ், இணைப்புகள் மற்றும் பிற பொருட்கள் உட்பட, எங்கள் செயலி பயனர்களுக்கு வசதியாக வழங்கப்படுகின்றன, மேலும் அவை தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன.
புதுப்பிக்கப்பட்டது:
12 செப்., 2024