'கவியரசு வைரமுத்து' இந்தப் பெயருக்கு அறிமுகம் தேவை இல்லை. நிழல்கள்(1980) எனும் திரைப்படத்தில் 'பொன்மாலைப் பொழுது' எனும் பாடலை முதன் முதலில் எழுதிய இவர் ஜனவரி 2009 வரை 5800 பாடல்களை எழுதியுள்ளார். முன்பு இளையராஜாவுடனும், பின்னர் ஏ.ஆர்.ரஹ்மானுடனும் இவர் இணைந்து வழங்கியப் பாடல்கள் புகழையும் பல விருதுகளையும் பெற்றுள்ளன.
தண்ணீர் தேசம் (Thanneer Desam) கவிஞர் வைரமுத்து எழுதிய நாவல். இது 1996 ல் தமிழ் வார இதழான ஆனந்த விகடனில் 24 தொகுதிகளாக வெளிவந்தது. கடல், தண்ணீர் மற்றும் உலகம் பற்றிய பல அறிவியல் உண்மைகள் இப்புத்தகத்தில் எளிய கவிதை நடையில் விவரிக்கப் பட்டுள்ளன.
இக்கதையின் கதாநாயகன் கலைவண்ணன், நாயகி தமிழ்ரோஜா ஆகியோர்கள் ஆவர். கலைவண்ணன் ஒரு புரட்சிகரமான பத்திரிகை நிருபராகவும், தமிழ்ரோஜா ஒரு பணக்கார குடும்பத்து பெண்ணாகவும், இவர்களின் காதலையும், ஊடலையும் சொல்லும்போது கடல், தண்ணீர் பற்றிய அறிவியல் விவரங்களும் எடுத்துரைக்கப் பட்டுள்ளன. மீனவர்கள் வாழ்வியல் பற்றியும் பல விவரங்கள் தொகுக்கப் பட்டுள்ளன.
இந்த அருமையான கதையை இலவசமாக உங்கள் கைப்பேசியில் பதிவிறக்கம் செய்து அனைவரும் படித்துப் பயன் அடையும் படிக் கேட்டுக் கொள்கின்றோம்.
இந்தப் பயன்பாட்டில் இருக்கும் சிறப்பு அம்சங்கள் பின்வருமாறு,
1. பகல் பொழுதுக்கும் இரவுப் பொழுதுக்கும் தகுந்தார் போல உங்கள் கைப்பேசியின் பின்னணியையும், எழுத்துக்களையும் மாற்றி அமைத்துக் கொள்ளலாம்.
2. அதுபோல எழுத்துக்களின் தோற்றத்தை தேவைப்பட்டால் அதிகரித்தோ, குறைத்தோ வைத்துக் கொள்ளலாம்.
3. நீங்கள் விட்ட பகுதியில் இருந்து மீண்டும் தொடரும் வசதி கொடுக்கப்பட்டு உள்ளது.
4. உங்களுக்கு பிடித்த பக்கத்தை குறிப்பில் (புக் மார்க்) சேர்த்துக் கொள்ளலாம்.
5. திரைக்குத் தகுந்தபடி பக்கங்களை சரி செய்து கொள்ளலாம்.
தங்களது மேலான கருத்துக்களை தயை கூர்ந்து நட்சத்திரக் குறியீட்டுடன் எங்களுக்கு தெரிவிக்கவும்.
புதுப்பிக்கப்பட்டது:
2 ஜன., 2023