ஜோதா அக்பர்

2008 • 213 நிமிடங்கள்
இந்த வீடியோ கிடைக்கவில்லை

இந்தத் திரைப்படத்தைப் பற்றி

இக்கட்டுரை, Jodhaa Akbar எனும் விக்கிபீடியா கட்டுரையிலிருந்து மொழி பெயர்க்கப்பட்டது. குறிப்பாக, இந்தப் பதிப்பிலிருந்து மொழி பெயர்க்கப்பட்டது.
ஜோதா-அக்பர் பிப்ரவரி 15, 2008 அன்று வெளிவந்த ஒரு இந்திய வரலாற்றுத் திரைக்காவியம். இதனை இயக்கி, தயாரித்தவர் 2001 ஆம் ஆண்டின் அகாடமி விருதிற்கு தேர்வுசெய்யப்பட்ட படமான லகானை' இயக்கிய
அஷுதோஷ் கோவரீகர். ரித்திக் ரோஷனும், ஐஷ்வர்யா ராய் பச்சனும் இப்படத்தில் முக்கியமான பாத்திரங்களில் நடித்துள்ளனர். அபீர் அப்ரார் இப்படத்தில் புதுமுகமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளார். நீண்ட ஆய்விற்குப்பின் துவக்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு கர்ஜத்தில் ஆரம்பமானது.
முகலாய மன்னரான பேரரசர் அக்பராக வலம் வரும் ரித்திக் ரோஷனுக்கும் அவரது இந்து சமய மனைவியான ஜோதாபாயாக நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராய் பச்சனுக்கும் இடையே நிகழும் காதலைப் பற்றிய கதை இது. இப்படத்திற்கு இசை அமைத்தவர் பிரபல இசைஅமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். ஜனவரி 19, 2008 இல் இப்படத்தின் இசைத்தட்டு வெளியிடப்பட்டது. சா பாலோ சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த வெளிநாட்டு படத்திற்கான பார்வையாளருக்கான விருதையும் கோல்டன் மின்பார் சர்வதேச திரைப்பட விழாவில் இரண்டு விருதுகளையும், ஏழு ஸ்டார் ஸ்க்ரீன் விருதுகளையும் ஐந்து பிலிம்பேர் விருதுகளையும் பெற்றதோடல்லாமல் மூன்றாவது ஆசிய திரைப்பட விருதுக்கு இருமுறை பரிந்துரைக்கப்பட்டது.