எவரிதிங் எவரிவேர் ஆல் அட் ஒன்சு

2022 • 139 நிமிடங்கள்
R
ரேட்டிங்
இந்த வீடியோ கிடைக்கவில்லை

இந்தத் திரைப்படத்தைப் பற்றி

எவரிதிங் எவரிவேர் ஆல் அட் ஒன்சு என்பது 2022 ஆம் ஆண்டு வெளியான ஐக்கிய அமெரிக்க நகைச்சுவை-நாடகத் திரைப்படமாகும். இத்திரைப்படம் டேனியல் குவான் மற்றும் டேனியல் செய்னர்ட் ஆகியோரால் எழுதப்பட்டு இயக்கப்பட்டுள்ளது. திரைப்படத்தின் கதை ஒரு சீன-ஐக்கிய அமெரிக்க குடியேற்றவாசியினை மையமாகக் கொண்டுள்ளது, அவர் வருமான வரி தணிக்கை செய்யும்பொழுது, சக்திவாய்ந்த உயிரினம் ஒன்று பன்முகத்தன்மையை அழிப்பதைத் தடுக்க தன்னுடைய பிற பிரபஞ்ச பதிப்புகளுடன் இணைய கண்டுபிடித்தார். சுடெபனி சு, கே ஹுய் குவான், ஜென்னி சிலேட், ஹாரி சும் சூனியர், ஜேம்சு ஹாங் மற்றும் ஜேமி லீ கர்டிஸ் ஆகியோர் துணை வேடங்களில் தோன்றுகின்றனர். நியூயார்க் டைம்ஸ் இந்த திரைப்படத்தை கருப்பு நகைச்சுவை, அறிவியல் புனைகதை, கற்பனை, தற்காப்பு கலை படங்கள் மற்றும் அனிமேஷன் ஆகியவற்றின் கூறுகளுடன் "திரைப்பட வகை அராஜகத்தின் சுழற்சி" என்று அழைத்துள்ளது.
குவான் மற்றும் செய்னர்ட் 2010 ஆம் ஆண்டிலேயே பல்லண்டம் பற்றிய ஆராய்ந்து, 2016 ஆம் ஆண்டளவில் திரைக்கதையினை எழுதத் தொடங்கினர். திரைக்கதை முதலில் ஜாக்கி சானினை நினைவில் வைத்து எழுதப்பட்டது, முக்கிய பாத்திரம் பின்னர் மறுவேலை செய்யப்பட்டு மிசெல் யோவுக்கு வழங்கப்பட்டது. முதன்மை படப்பிடிப்பு சனவரி முதல் மார்ச்சு 2020 வரை செய்யப்பட்டது.
மதிப்பீடு
R