சின்னா என்பது 2005 ஆம் ஆண்டு சுந்தர் சி.யின் எழுத்து இயக்கத்தில் வெளியான காதல் திரில்லர் திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் அர்ஜுன், சினேகா மற்றும் விக்ரமாதித்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படம் 15 சூலை 2005 இல் வெளியாகி, கலவையான விமர்சனத்தை பெற்றது.
இது பின்னர் தெலுங்கில் "கொடி" என்ற பெயரில் மொழி பெயர்க்கப்பட்டதுடன், ஒடியா மொழியில் "கிரிமினல்" என்ற பெயரில் மறு ஆக்கம் செய்யப்பட்டது.