எம். எஸ். தோனி

2016 • 100 நிமிடங்கள்
இந்த வீடியோ கிடைக்கவில்லை

இந்தத் திரைப்படத்தைப் பற்றி

எம். எஸ். தோனி என்பது 2016 ஆண்டு வெளியான ஒரு இந்திய, தன்வரலாற்று விளையாட்டுக் கதைத் திரைப்படம். இதை எழுதி இயக்கியவர் நீரஜ் பாண்டே. இப்படம் இந்திய தேசிய துடுப்பாட்ட அணியின் தலைவராக இருந்த மகாந்திரசிங் தோனியின் வாழ்க்கை வரலாறை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டத் திரைப்பட்ம். இத்திரைப்படத்தின் முதன்மைப் பாத்திரமான தோனியாக சுஷாந்த் சிங் ராஜ்புத் நடித்துள்ளார் பிற பாத்திரங்களில் திஷா பட்டனி, கெய்ரா அத்வானி, அனுபம் கெர், பூமிகா சாவ்லா ஆகியோர் நடித்துள்ளனர். படத்தின் கதை தோனியின் இளம் வயது வாழ்க்கையில் இருந்து துவங்கி, வாழ்க்கை நிகழ்வுகள் தொடர்ச்சியாக காட்டப்பட்டு, இறுதியாக துடுப்பாட்ட உலகினில் அவர் நட்சத்திர அந்தஸ்து பெறுவதில் முடிவடைகிறது.
இதுதொடர்பான நொடர்பான யோசனை தோனியிடம் அவரது மேலாளர், அருண் பாண்டேவால், 2011 உலகக் கோப்பை துடுப்பாட்ட இறுதிப் போட்டிக்குப் பிறகு சொல்லப்பட்டது. தோனியின் சம்மதத்துடன் இரண்டு ஆண்டுகள் அதற்கான வேலைகள் தொடர்ந்தன. பின்னர் இயக்குநர் நீரஜ் பாண்டே தனது பேபி திரைப்படத்தின் வேலை செய்து கொண்டிருந்த போது படம் குறித்து, அணுகினார். தோனியிடம் ஆலோசித்த, பாண்டே தோனியின் பின்னணி மற்றும் அவரது வாழ்க்கை நிகழ்வுகளை ஆராய்வதற்கு பலரை சந்தித்தார்.
இந்தப் படம் 2016 செப்டம்பர் 30 அன்று பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோவால் வெளிடப்பட்டது. இப்படம் 61 நாடுகளில் அப்போது வெளியிடப்பட்டது.