சியாம் சின்கா ராய்

2021 • 157 நிமிடங்கள்
இந்த வீடியோ கிடைக்கவில்லை

இந்தத் திரைப்படத்தைப் பற்றி

சியாம் சிங்கா ராய் என்பது 2021ஆம் ஆண்டு தெலுங்கு மொழியில் வெளியான வரலாற்று காதல் திரைப்படமாகும். ஜங்கா சத்யதேவ் எழுதிய கதையை இராகுல் சாங்கிரித்யன் இயக்கியுள்ளார். இப்படத்தில் நானி இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். இவருடன் சாய் பல்லவி, கிருத்தி ஷெட்டி, மடோனா செபாஸ்டியன் ஆகியோரும் நடித்துள்ளனர். இதன் கதை 1970களின் கொல்கத்தாவின் பின்னணியில் நடப்பது போன்று ஓரளவு அமைக்கப்பட்டது. இது மறுபிறவியின் கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டது.
படம் பிப்ரவரி 2020இல் தொடங்குவதாக அறிவிக்கப்பட்து. முதன்மை புகைப்படம் எடுக்கும் பணி திசம்பர் 2020 முதல் சூலை 2021 வரை ஐதராபாத்திலும் கொல்கத்தாவிலும் நடைபெற்றது. கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக தயாரிப்பும் வெளியீடும் தாமதமானது. பின்னர், 24 திசம்பர் 2021 அன்று திரையரங்கில் வெளியிடப்பட்டது. திரைக்கதையை விமர்சித்த விமர்சகர்கள் நடிகர்களின் நடிப்பைப் பாராட்டி நேர்மறையான விமர்சனங்களை அளித்தனர். இப்படம் திரையரங்கில் ₹47 கோடிக்கு மேல் வசூலித்து வெற்றி பெற்றது.