பியாண்ட் தி கிளவுட்ஸ்

2018 • 120 நிமிடங்கள்
இந்த வீடியோ கிடைக்கவில்லை

இந்தத் திரைப்படத்தைப் பற்றி

பியாண்ட் தி கிளவுட்ஸ் என்பது 2018 ஆண்டைய இந்திய நாடகத் திரைப்படம். இதை எழுதி, இயக்கியவர் மசித் மசிதி ஆவார். படமானது ஜீ ஸ்டுடியோஸ் பதாகையின் கீழ் தயாரிக்கப்பட்டது. படத்தில் நட்சத்திரமாக இஷான் காதிர் என்பவர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளார். இவர் மும்பை நகரில் போதை மருந்து விற்கும் ஆமிர் என்ற பாத்திரத்தில் நடித்துள்ளார் ஆமிரின் சகோதரியான தாரா என்னும் பாத்திரத்தில் மாளவிகா மோகனன் நடித்துள்ளார். தாரா ஒரு கண்டிப்பான வணிகரிடம் பணிபுரிகிறார். இந்தத் திரைப்படத்தின் கதையானது உடன்பிறப்புகளுக்கு இடையே உள்ள பிணைப்பை மையமாகக் கொண்டதாக உள்ளது.
இப்படத்தின் தயாரிப்புத் திட்டப் பணிகள் 2016 ஆகத்தில் துவங்கியது. படத்தின் முதன்மைப் படப்பிடிப்புப் பணிகள் 2017 சனவரி மாதம் முதல் மும்பை நகரில் தொடங்கி, செய்பூருக்கு அருகில் உள்ள சம்பாரில் தொடர்ந்து, 2017 மே 6 அன்று மும்பையில் முடிவடைந்தது. வணிக வெளியீட்டுக்கு முன்பு, திரைப்படமானது 2017 அக்டோபர் முதல் 2018 பெப்ரவரிவரை சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டது. மேலும் இது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் 2017 நவம்பர் 20 அன்று திரையிடப்பட்டது. பியாண்ட் தி க்ளவுட்ஸ் படமானது மஷித் மஜிதி இயக்கிய முஹம்மத்: மெஸென்ஜர் ஆஃப் காட் திரைப்படத்துக்கு அடுத்து இசையமைப்பாளர் ஏ. ஆர். ரகுமானுடன் கூட்டணி சேர்ந்த இரண்டாவது படம் ஆகும்.