ஆஷிக்கி 2

2013 • 134 நிமிடங்கள்
இந்த வீடியோ கிடைக்கவில்லை

இந்தத் திரைப்படத்தைப் பற்றி

ஆஷிக்கி 2 என்பது 2013 இல் வெளியான இந்தி திரைப்படம் ஆகும். இதை மோகித் சூரி இயக்கியுள்ளார். ஆதித்யா ராய் கபூர், சாரதா கபூர் ஆகியோர் முன்னணி வேடங்களில் நடித்துள்ளனர். இதை பூஷன் குமார் தயாரித்தார். ராகுல் என்ற பாடகனுக்கும், ஆரூகி என்ற பாடகிக்கும் இடையேயான காதலை மையமாகக் கொண்டது கதை.
இது இதற்கு முன்னர் வெளியான ஆஷிக்கி என்ற திரைப்படத்தின் தொடர்ச்சி.
எ ஸ்டார் இஸ் பார்ன் என்ற அமெரிக்கத் திரைப்படத்தின் சாயலைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஒன்பது கோடி ரூபாயில் தயாரிக்கப்பட்டு, மொத்தம் நூறு கோடி ரூபாய் வருமானத்தைப் பெற்றது. அதிக வருவாய் ஈட்டி இந்தி திரைப்படங்களின் பட்டியலில் முன்னணி இடத்தைப் பெற்றுள்ளது. இந்த திரைப்படத்தில் வெளியான தும் ஹி ஹோ, சுன் ரஹா ஹே ஆகிய பாடல்கள் அதிக வரவேற்பைப் பெற்றன.