பிளாக் பான்தர்

2018 • 120 நிமிடங்கள்
PG-13
ரேட்டிங்
இந்த வீடியோ கிடைக்கவில்லை

இந்தத் திரைப்படத்தைப் பற்றி

பிளாக் பான்தர் என்பது 2018 ஆம் ஆண்டு திரைக்கு வந்த அமெரிக்க நாட்டு மீநாயகன் திரைப்படம் ஆகும். இது மார்வெல் வரைகதை கதாபாத்திரமான பிளாக் பாந்தர் என்ற கதாபாத்திரத்தை மையமாக வைத்து மார்வெல் ஸ்டுடியோஸ் என்ற நிறுவனம் தயாரிக்க வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் மோஷன் பிக்சர்ஸ் என்ற நிறுவனம் விநியோகம் செய்தது.
இது மார்வல் திரைப் பிரபஞ்சத்தின் பதினெட்டாவது திரைப்படம் ஆகும். கேவின் பிகே என்பவர் தயாரிக்கும் இந்த திரைப்படத்தை ரையன் கூக்லர் என்பவர் இயக்க, ரையன் கூக்லர் மற்றும் 'ஜோ ராபர்ட் கோல்' ஆகியோர் கதை எழுதியுள்ளார்கள். இப்படத்தில் சட்விக் போஸ்மேன், மைக்கேல் பி. ஜோர்டான், லுபிடா நியாங்கோ, டானாய் குரைரா, மார்ட்டின் பிறீமன், தானியேல் கலுயா, லெட்டிடியா ரைட், வின்ஸ்டன் துயூக், அங்கெலா பாசெட், பாரஸ்ட் விடேக்கர், மற்றும் ஆண்டி செர்கிஸ் ஆகியோர் நடித்துள்ளனர்.
பிளாக் பாந்தர் லாஸ் ஏஞ்சல்ஸில் ஜனவரி 29, 2018 அன்று ஒளிபரப்பப்பட்டது, பிப்ரவரி 16, 2018 இல் அமெரிக்காவின் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.இப்படம் விமர்சகர்களிடமிருந்து பெரும் வரவேற்பை பெற்றது. பல விமர்சகர்கள் இது மார்வலின் சிறந்த திரைப்படங்களில் ஒன்று எனக் குறிப்பிடுகின்றனர்.
இந்த திரைப்படம் பல விருதுகளைப் பெற்றது.
மதிப்பீடு
PG-13