மாற்றான்

2012 • 165 நிமிடங்கள்
இந்த வீடியோ கிடைக்கவில்லை

இந்தத் திரைப்படத்தைப் பற்றி

மாற்றான் கே. வி. ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்து அக்டோபர் 12, 2012ல் வெளிவந்த திரைப்படமாகும். இதில் சூரியா ஒட்டிப்பிறந்த இரட்டையராக நடித்துள்ளார். இதில் நடிப்பதாக இருந்த பிரகாஷ்ராஜ் விலக்கப்பட்டு அவருக்கு பதில் சச்சின் ஹெடேக்கர் நடித்தார். இவர் தெய்வத்திருமகன் படத்தில் அமலா பாலுக்கு தந்தையாகவும் யாவரும் நலம் என்ற படத்தில் மருத்துவர் பாலுவாகவும் நடித்துள்ளார்
இதன் தெலுங்கு மொழிபெயர்ப்பு டூப்ளிகேட் என்ற பெயரில் வருவதாக இருந்தது. அப்பெயர் தெலுங்கு உரிமையை வாங்கிய தயாரிப்பாளர் பெல்லம்கொண்ட சுரேசுக்கு பிடிக்காததால் பிரதர்சு என மாற்றப்பட்டது இதன் தெலுங்கு பதிப்பும் அக்டோபர் 12, 2012 அன்றே வெளியானது. தெலுங்கில் சூரியாவின் பல படங்கள் மொழிமாற்றம் செய்யப்பட்டிருத்தாலும் இதிலேயே முதல் முறையாக குரல் கொடுத்தார்.