விருமாண்டி

2004 • 161 நிமிடங்கள்
இந்த வீடியோ கிடைக்கவில்லை

இந்தத் திரைப்படத்தைப் பற்றி

விருமாண்டி 2004ல் வெளிவந்த இந்திய தமிழ்த் திரைப்படமாகும். இதனை கமல்ஹாசன் எழுதி, இயக்கி, நடித்திருந்தார். இத்திரைப்படத்தில் அபிராமி, பசுபதி, நெப்போலியன் போன்றவர்கள் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இளையராஜா இப்படத்திற்கு இசை அமைத்திருந்தார்.
இத்திரைப்படம் தென்கொரியாவில் நடைபெற்ற உலக திரைப்பட விழாவில் 2004 ஆம் ஆண்டிற்கான சிறந்த ஆசிய திரைப்படம் என்ற விருதைப் பெற்றது. இத்திரைப்படம் ரஷோமோன் விளைவு என்றொரு திரைக்கதை வழியை இப்படம் கையாண்டது. கதையின் நாயகன் விருமாண்டியும், கொத்தாள தேவரும் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். மரணதண்டனைக் கைதிகள் குறித்து ஆவணப் படமெடுக்க வருகின்ற ஏஞ்சலியா காட்டமுத்து, இவர்களிடம் நடந்ததை குறித்து கேட்டு பதிவு செய்கிறார். அதன் படி, கொத்தாள தேவர் முதலில் தனக்கு என்ன நேர்ந்தது என்பதை விவரித்தும், அதன் பின் நாயகன் விருமாண்டி விவரிப்பதும் கதையாக அமைந்தது. இதில் மரணதண்டனை தேவையில்லை என்ற கருத்து வலியுறுத்தப்பட்டது.
வசுல்ரீதியாக வெற்றி பெற்றாலும்., சாதி அரசியல், மரணதண்டனை போன்ற விவாதப் பொருட்களால் இப்படம் நிறைய விமர்சனங்களை சந்தித்தது.