இந்த ஷோவைப் பற்றி

இசுக்விட் கேம் அல்லது ஸ்க்விட் கேம் என்பது தென்கொரிய நாட்டு அதிரடி பரபரப்பு நாடகத் தொடர் ஆகும். இந்த தொடரை கவாங் டோங்யுக் என்பவர் எழுதி மற்றும் இயக்க, லீ ஜங் ஜே, பார்க் கே சூ, வி கா ஜோன், ஹோயோன் ஜங், ஓ யோங்சு, கியோ சங் டே, அனுபம் திரிபாதி, கிம் ஜோரியோங் போன்ற பலர் நடித்துள்ளார்கள். இந்த தொடர் நெற்ஃபிளிக்சு என்ற ஓடிடி தளத்தில் செப்டம்பர் 17, 2021 இல் ஒன்பது அத்தியாயங்களுடன் வெளியானது.
இந்தத் தொடர் 456 பில்லியன் பரிசுத் தொகைக்காக வெவ்வேறு குடும்ப சூழ்நிலையில் இருந்து பங்குபெறும் 456 வீரர்கள், அங்கு கொடுக்கப்படும் குழந்தைகளுக்கான விளையாட்டு போட்டி மூலம் பல சவால்களை கடந்து அதில் ஒருவர் மாட்டும் உயிர் தப்பித்து அந்த பரிசு தொகையை வெல்வதற்க்கான வாய்ப்பு ஆகும்.
இசுக்விட் கேம் தொடர் வெளியாகி விமர்சன ரீதியான பாராட்டைப் பெற்றது மற்றும் சர்வதேச கவனத்தை ஈர்த்தது. வெளியான ஒரு வாரத்திற்குள் நெற்ஃபிளிக்சில் அதிகம் பார்த்த நிகழ்ச்சிகளில் ஒன்றாக மாறியது. ஆரம்பத்தில் இது 111 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை ஈர்த்தது. இது வலைப்பின்னல் வரலாற்றில் இன்றுவரை அதிகம் பார்க்கப்பட்ட தொடராக பிரிட்ஜெர்டன் என்ற தொடரை முந்தியது என்பது குறிப்பிடத்தக்கது.