இந்த ஷோவைப் பற்றி

ஹார்ட்ஸ்ட்ரிங்ஸ் இது ஒரு தென் கொரியா நாட்டு காதல் மற்றும் நகைச்சுவை கலந்த தொலைக்காட்சி தொடர் ஆகும். இந்த தொடரை பயோ மின்-சூ என்பவர்இயக்கியுள்ளார். இந்த தொடரில் கதாநாயகியாக பார்க் ஷின்-ஹே மற்றும் கதாநாயகனாக யுங் யோங்-ஹ்வா நடித்துள்ளனர்.
இந்த தொடர் 29 ஜூன் 2011ஆம் ஆண்டு முதல் 19 ஆகஸ்ட் 2011ஆம் ஆண்டு வரை எம்பிசி என்ற தொலைக்காட்சியில் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் தென் கொரியா நாட்டு நேரப்படி இரவு 9:55 மணிக்கு ஒளிபரப்பாகி 15 அத்தியாயங்களுடன் நிறைவடைந்தது.