இந்த ஷோவைப் பற்றி

ஐரிஸ் என்பது தென் கொரிய நாட்டுத் தொலைக்காட்சி தொடர் ஆகும். இந்த தொடரை கிம் க்யு-டே மற்றும் யாங் யுன்-ஹோ என்பவர்கள் இயக்கியுள்ளார்கள். இந்த தொடரில் லீ பியுங் ஹுன், கிம் தா-ஹி, யுங் ஜோன்- ஹோ, கிம் சேயுங் வூ, கிம் சோ-யியான், டி.ஓ.பி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்த தொடர் 14 அக்டோபர், 2009ஆம் ஆண்டு முதல் 17 டிசம்பர் 2009ஆம் ஆண்டு வரை தென் கொரியா நாட்டு நேரப்படி புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் இரவு 09:55 மணிக்கு ஒளிபரப்பாகி 20 அத்தியாயங்களுடன் நிறைவடைந்தது.