இந்த ஷோவைப் பற்றி

லோகி என்பது 2021 ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க நாட்டு குற்றப்புனைவு அறிவியல் மீநாயகன் தொலைக்காட்சி குறுந்தொடர் ஆகும். இந்த தொடர் மார்வெல் காமிக்ஸ் கதாபாத்திரமான லோகி என்ற பாத்திரத்தை அடிப்படையாக கொண்டு டிஸ்னி+ ஓடிடி தளத்திற்காக 'மைக்கேல் வால்ட்ரான்' என்பவர் உருவாக்கியுள்ளார்.
இது மார்வெல் திரைப் பிரபஞ்சத்தில் அமைக்கப்பட்டுள்ளது. மற்றும் மார்வெல் திரைப் பிரபஞ்சத் திரைப்படங்களின் தொடர்ச்சியைப் பகிர்ந்து கொள்கிறது. இந்த தொடர் 2019 ஆம் ஆண்டு வெளியான அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் படத்தின் நிகழ்வுகளுக்குப் பிறகு லோகியின் மாற்று பதிப்பில் ஒரு புதிய காலவரிசை பயணத்தில் நடைபெறுகிறது.
மார்வெல் திரைப் பிரபஞ்ச திரைப்படத் தொடர்களில் நடித்த டாம் ஹிடில்ஸ்டன் என்பவரே மறுபடியும் லோகி என்ற பாத்திரத்தை மறுபரிசீலனை செய்கிறார். இவருடன் ஓவன் வில்சன், சோபியா டி மார்டினோ, குகு ம்பதா-ரா, சாஷா லேன் வுன்மி மொசாகு ஆகிய நடிகர்களும் நடிக்கிறார்கள். லோகி 9 மே 2021 முதல் ஒளிபரப்பானது, மேலும் இது ஆறு அத்தியாயங்களைக் கொண்டிருக்கிறது. இது மார்வெல் திரைப் பிரபஞ்சத்தின் நான்காம் கட்டத்தின் ஒரு பகுதி தொடர் ஆகும்.