சயின்ஸ் 37 என்பது, மக்கள் தங்கள் வசதிக்கேற்ப வீட்டில் இருந்தபடியே மருத்துவ ஆராய்ச்சியில் பங்கேற்பதற்கான எளிய ஒரு செயலியாகும். ஆய்வு வருகைகளில் பங்கேற்க, சோதனை முயற்சியின் மதிப்பீடுகளை நிறைவு செய்ய, ஆய்வுக் குழுவினருடன் நேரடியாக தொடர்பு கொள்ள மற்றும் பலவற்றுக்கு எங்களுடைய நோயாளி செயலியை உபயோகிக்கவும், மேலும் —உங்களுக்குத் தேவையான அனைத்தையும் அணுகுவதற்கு வசதியாக ஒரே இடத்தில் உள்ளது.
சயின்ஸ் 37 நோயாளி செயலி இயக்குதளத்தினை உபயோகித்து, நீங்கள் செய்ய முடிபவை:
- உங்க சொந்த சாதனத்திலிருந்தே சோதனை முயற்சிக்கான மதிப்பீடுகளை நிறைவு செய்யலாம். உங்களுக்கென வரவிருக்கிற பணிகளைப் பார்வையிட்டு, ஒரு நாளுக்கான பணிகள் எவை என்று பார்த்து, முன்கூட்டியே திட்டமிடலாம்.
- உரைச்செய்தி அனுப்புதல், தொலைபேசி அழைப்புகள் மற்றும் வீடியோ அழைப்புகள் உள்ளிட்ட உங்களுக்கு விருப்பமான வழிமுறைகளை உபயோகித்து நீங்கள் ஆய்வுக்குழுவினரிடம் நேரடியாக உரையாடலாம்.
- சோதனை முயற்சியில் நீங்கள் இருக்கும் காலம் முழுவதுமாக உங்கள் முன்னேற்றம் பற்றிய தடம் அறியலாம். என்னென்ன மதிப்பீடுகளை நீங்கள் நிறைவேற்றியிருக்கிறீர்கள் என்று பார்த்து, முக்கியமான சோதனை முயற்சி சம்பந்தமான உங்களுடைய ஆவணங்களை பரிசீலனை செய்யலாம்.
சயின்ஸ் 37 பற்றி:
சயின்ஸ் 37 என்பது மெய்நிகர் சோதனை முயற்சிக்கான வாக்குறுதியை புதிதாக நிஜமாக்குகிறது. பாரம்பரியமாகவே, ஆய்வுத்தளம் அடிப்படையிலான வழிமுறைகளில் ஒருபோதும் அடைய முடியாதிருக்கும் நோயாளிகளுக்கு, அவரவர் வசதிக்கேற்ப வீட்டில் இருந்தபடியே ஈடுபடுத்தி, அவர்களுக்கு நாங்கள் அணுகல் வழங்குகிறோம். விரைவாகப் பதிவு செய்வது, அதிகமான எண்ணிக்கையிலான நோயாளிகளைத் தக்க வைப்பது மக்கள் தொகைக்கு ஏற்றபடியான பிரதிநிதித்துவம் அளிப்பது ஆகியவற்றை நாங்கள் நிரூபித்திருக்கிறோம். சயின்ஸ் 37 மற்ற எந்த நிறுவனங்களைக் காட்டிலும், அதிகப் பரவலாக்கப்பட்ட, குறுக்கீட்டு சோதனைகளை நடத்தியுள்ளது, இதற்காக பரந்து விரிந்த, டெலிமெடிசின் ஆய்வாளர்கள் மற்றும் வீட்டுச் சுகாதார செவிலியர்களின் விரிவான, உள்ளக வலையமைப்பைப் பயன்படுத்தி, இந்தத் தொழில் வகையில் விரிவான, முழுமையாக ஒருங்கிணைந்த, பரவலாக்கப்பட்ட மருத்துவச் சோதனை இயக்குதளத்தால் ஆதரிக்கப்படுகிறது.
புதுப்பிக்கப்பட்டது:
12 பிப்., 2025
ஆரோக்கியமும் உடற்கட்டுப்பாடும்