ஒரு யோகியின் சுயசரிதம் எனும் ஆன்மீக இலக்கியத்தை எழுதியருளிய பரமஹம்ஸ யோகானந்தரின் போதனைகள் ஆன்மாவின் அமைதி, மகிழ்ச்சி மற்றும் ஞானத்தின் மூலம் வாழ்க்கையை மாற்றும் விழிப்புணர்வை அனுபவிக்கவும்.
YSS/SRF செயலி அனைவருக்கும் பொதுவானதே —நீங்கள் பரமஹம்ஸ யோகானந்தரின் போதனைகளுக்குப் புதியவராக இருந்தாலும் சரி அல்லது பல வருடங்களாக இந்த மகானின் ஞானத்தில் மூழ்கி இருந்தாலும் சரி. தியானம், கிரியா யோகாவின் அறிவியல் மற்றும் ஆன்மீகரீதியில் சமநிலையான வாழ்க்கையை வாழ்வதற்கான நடைமுறை வழிகளைப் பற்றி மேலும் அறிய விரும்பும் எவருக்கும் இது பொருந்தும்.
தனிச் சிறப்புகள்:
- உங்களுக்கு ஏற்றாற்போல் 15 முதல் 45 நிமிடங்கள் வரை வெவ்வேறு கால அளவில் அமைதி, அச்சமின்றி வாழ்வது, ஒளியாக இறைவன், உணர்வுநிலையின் விரிவாக்கம் மற்றும் பல தலைப்புகளில் வழிகாட்டப்பட்ட தியானங்கள்
- நேரடி ஆன்லைன் தியானங்களுக்கான இலவச அணுகல்
- YSS/SRF செய்திகள் மற்றும் நிகழ்வு தகவல்கள்
YSS/SRF பாடங்களைப் பயிலும் மாணவர்களுக்காக, உங்கள் செயலியில் பாடங்கள் மற்றும் பலதரப்பட்ட ஒலி/ஒளி உள்ளடக்கங்கள் டிஜிட்டல் வடிவில் கிடைக்கபெரும். இவை உங்கள் அன்றாட வாழ்வில் YSS/SRF கிரியா யோகா போதனைகளைப் பயன்படுத்துவதற்கு மிகவும் உதவிகரமாய் இருக்கும்.
கூடுதல் அம்சங்கள்:
- பரமஹம்ஸ யோகானந்தரின் ஒலிப் பதிவுகள்
- YSS/SRF சன்னியாசிகளால் வழிநடத்தப்படும் தியானங்கள் மற்றும் மனக்காட்சிக் காணுதல்
- YSS/SRF தியான உத்திகளின் வகுப்புகள்
- YSS/SRF சக்தியூட்டும் உடற்பயிற்சிகளின் செயல்முறை விளக்கத்தின் வீடியோக்கள்
நீங்கள் YSS அல்லது SRF பாடம் படிக்கும் மாணவராக இருந்தால், செயலியில் உள்ள பாடங்களை உபயோகிக்க உங்கள் சரிபார்க்கப்பட்ட கணக்குத் தகவலைப் பயன்படுத்தவும்.
YSS/SRF பற்றி
யோகதா சத்சங்க சொஸைட்டி ஆஃப் இந்தியா மற்றும் ஸெல்ப்-ரியலைசேஷன் ஃபெலோஷிப் ஆகியவை வாழ்க்கையை மாற்றும் ஆன்ம-அனுபூதி அடைவதற்காக பயணிக்கும் அனைத்து ஆன்மீக நாட்டம் கொண்டவர்களுக்கான ஒரு அழைப்பு. இந்தப் பயணம் பரமஹம்ஸ யோகானந்தரின் """"எப்படி-வாழ-வேண்டும்"""" என்ற போதனைகளைத் தழுவுகிறது, இது நாம் உண்மையில் யார் என்பதை உணர்ந்து கொள்வதற்கான மிக உயர்ந்த உத்திகளை உள்ளடக்கியது மற்றும் நமது வாழ்க்கையிலும் உலகிலும் நீடித்த அமைதி, மகிழ்ச்சி மற்றும் அன்பை எவ்வாறு கொண்டு வருவது என்பதைக் காட்டுகிறது. YSS மற்றும் SRF-ன் குறிக்கோள், தத்துவ ஆய்வுப் படிப்பை வழங்குவது மட்டுமல்லாமல், நவீன உலகின் சிறந்த ஆன்மீக ஆசான்களில் ஒருவரின் உயிர் துடிப்புள்ள வார்த்தைகள் மூலம் புனிதமான ஞானத்தை பரிமாற்றம் செய்வதாகும்.
யோகதா சத்சங்க சொஸைட்டி ஆஃப் இந்தியா 1917-ல் பரமஹம்ஸ யோகானந்தரால் நிறுவப்பட்டது. கிரியா யோகாவின் போதனைகளை உலகம் முழுவதும் பரப்புவதற்காக 1920 ஆம் ஆண்டில் பரமஹம்ஸ யோகானந்தரால் ஸெல்ப்-ரியலைசேஷன் ஃபெலோஷிப் நிறுவப்பட்டது.
புதுப்பிக்கப்பட்டது:
17 ஜூன், 2024