இதில் கீழ்க்கண்ட ஐந்து நூல்கள் உள்ளன.
1. மூல நோய்களும் முறையான சிகிச்சைகளும்-வைத்திய கலாநிதி
இ. மங்களாம்பிகை அம்மாள்
2. வயித்தியாநுகூல ஜீவரட்சணி-அங்கமுத்துமுதலியார்
3. பலதிரட்டு வைத்தியம்-சரசுவதி மகால் நூலகம்
4. தற்கால வயித்தியபோதினி-மா.வடிவேலு முதலியார்
5. வைத்திய அரிச்சுவடி-செஞ்சி ஏகாம்பர முதலியார்
முதல் நூலில் மூல நோயைப் பற்றி விரிவான விவரங்களும், அதற்கான சிகிச்சை முறைகளும் கூறப்பட்டடுள்ளன.
மற்ற நான்கு நூல்களில், அநேக நோய்களுக்கான சிகிச்சை முறைகள் உள்ளன. அனைத்து நூல்களும் மிகப் பழையது. தற்போது கடைகளில் கிடைக்காது.
கிட்டத்தட்ட 50 சதவிகிதம் பேர் மூல நோயால் பாதிக்கப்பட்டாலும், வெட்கத்தின் காரணமாக நோய் முற்றி அறுவை சிகிச்சை தேவைப்படும் வரையில் அநேகர் இதைப் பற்றி கவலைப்படுவதில்லை. மற்றவர்கள் சிறு சிறு நோய்க் குறிப்புகளைக் கையாண்டு, நோயுடனே வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் அனைவரின் தேவையை பூர்த்தி செய்யும் ஒரே சித்தவைத்திய நூல் இது.
இந்நூலின் கண், அனைத்து விதமான மூல நோய்கள் வருவதின் காரணங்கள், அவைகளின் தடுப்பு முறை, வந்த பின் அவற்றிற்கு சிகிச்சை, சத்திர சிகிச்சைக்குப் பின் மீண்டும் வராமலிருக்க முன் யோசனை, பவுத்திரம் பற்றிய விளக்கம், சிகிச்சை, மற்றும் மூல நோய் ஆய்வு ஆகியவை அடங்கியுள்ளன. 80க்கும் மேற்பட்ட இலகு சிகிச்சைகளும், மேலும் நாட்பட்ட நோய்க்கு தீவிர சிகிச்சைக்காக பல்வேறு நெய், எண்ணெய், பற்பம் ஆகியவைகளும் உள்ளன.
மூலநோயை வெல்ல மருந்து மட்டுமில்லாமல் வாழ்க்கையை திருத்தி அமைத்துக் கொள்வதைப் பற்றியும் ஆலோசனைகள் கூறப்பட்டுள்ளன.
நோயுடன் அவதிப்படும் அனைவரும் இதை பின்பற்றி தங்கள் நோயைத் தீர்த்து ஆரோக்கியமான வாழ்கை வாழ நமது பிரார்த்தனைகள்.
Oxirgi yangilanish
2-dek, 2021