Ainthaam Vedham

· Pustaka Digital Media
كتاب إلكتروني
185
صفحة

معلومات عن هذا الكتاب الإلكتروني

“ரிக்வேதம், யஜீர்வேதம், சாமவேதம், அதர்வன்னவேதம் ஆகிய நான்கு வேதங்களைவிட அதிக சக்தி வாய்ந்தது காதல் என்கிற ஐந்தாவது வேதம்! மணவை பொன் மாணிக்கத்தின் இந்த ஐந்தாம் வேதம் தொகுப்பு ஒரு காகித தாஜ்மஹால். மொத்தம் பதின்மூன்று மும்தாஜ்கள், இதில் வருகின்றனர். எல்லோருக்கும் மணவையே ஷாஜகானாக இருந்து அவர்களின் அழகை தீட்டியிருக்கிறார். ஆக்ராவில் அல்ல இந்த ஐந்தாம் வேதத்தில்.

نبذة عن المؤلف

திருச்சி மாவட்டம், மணப்பாறை தாலுகா, தவிட்டுப்பட்டி கிராமத்தில் எனது பெற்றோர் லட்சுமி பொன்னன் தம்பதிக்கு (நான் ஐந்தாவது பிள்ளை). அப்பா தியாகேசர் ஆலை மில் தொழிலாளி.

நான் தியாகேச ஆலை உயர்நிலைப் பள்ளியில் படிக்கும்போதே ஈ.வே.ரா எனக்கு கதை, கவிதை எழுத வந்தது. தந்தை பெரியார் கல்லுாரியில் படித்து முடித்தவுடன், புதுக்காலணி கம்பன் கலைக் குழு நண்பர்களின் முயற்சியில் "மனிதன்" என்ற போர்வையில் நாடகத்துக்கு கதை வசனம் எழுதி இயக்கினேன். அதைத் தொடர்ந்து மனப்பாறை பொத்தமேட்டுப்பட்டி பாஸ்காவில் எனது நாடகம் அரங்கேறியது.

சென்னை வந்தேன், சென்னை வானொலியில் எனது தகுதி என்ற நாடகம் ஒலிப்பரப்பாகியது. அதைத் தொடர்ந்து திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சபாவில் "பத்தினிக்கும் புசிக்கும்" நாடகமும், சோவியத் கல்சுரல் அரங்கத்தில் எனது கர்ப்புகிரகம் நாடகமும், சில ஆண்டுகள் சென்சஸ் ஆப் இந்தியா அலுவலகத்தில் தற்காலிக பணியாளராக பணியாற்றியபோது DMS அலுவலகத்தில் நடந்த நாடகப் போட்டியில் எனது "கர்ப்புக்கிரகம்" நாடகம் எனக்கு நல்ல முகவரியை கொடுத்தது.

தினசரி மற்றும் ராணி தாய், ஆனந்த விகடன் வார இதழ்களில், கவிதைகளும், சிறுகதைகளும் எழுதினேன். பிறகு திரைச்சுவை, தாய் திலகம், பாக்யராஜ் கீதம், இதழ்களில் பணியாற்றிவிட்டு இறுதியில் பல்கலை வேந்தர் எனது ஆசான் டைரக்டர் பாக்யராஜ் சார் அவர்களின் பாக்யா வார இதழில் 1988-ஆம் ஆண்டு பணியாற்ற தொடங்கி, முப்பது ஆண்டுகளுக்கு மேலாக ஒரே பத்திரிக்கையில் பணியாற்றும் பாக்யம் பெற்றேன். எனது ஆசான் தான் என்னை சினிமாவில் அவசர போலிஸ், ஆராரோ ஆரிராரோ, படங்களில் ஒரே நேரத்தில் முகம் காட்டும் நடிகனாக அறிமுகப்படுத்தி இன்று வரை 25 படங்களில் முகம் காட்டியுள்ளேன். கற்பகம் புத்தகாலாயம் நான் எழுதிய காதலும் வீரமும் - எட்டாவது வள்ளல் எம்.ஜி.ஆர் - ஐந்தாம் வேதம் - வந்தாங்க ஜெயிச்சாங்க - வாரியாரை கவர்ந்த புராண கதாபாத்திரங்கள் - அன்புள்ள அம்மா - MGR THE ULTIMATE PHILANTHROPST என்ற பெயரில் வெளிவந்தது இதில் எட்டாவது வள்ளல் எம்.ஜி.ஆர் 25 பதிப்புகள் வெளிவந்து வரவேற்பை பெற்றது.

டைரக்டர் ராஜகுமாரன் அவர்கள் இயக்கிய விண்ணுக்கும் மண்ணுக்கும் படத்தில் பாடலாசிரியனாக அறிமுகமாகி தொடர்ந்து டைரக்டர் ரவிசங்கர் இயக்கிய வருஷமெல்லாம் வசந்தம் போன்ற படங்களில் எட்டு பாடல்களை எழுதியுள்ளேன்.

تقييم هذا الكتاب الإلكتروني

أخبرنا ما هو رأيك.

معلومات القراءة

الهواتف الذكية والأجهزة اللوحية
ينبغي تثبيت تطبيق كتب Google Play لنظام التشغيل Android وiPad/iPhone. يعمل هذا التطبيق على إجراء مزامنة تلقائية مع حسابك ويتيح لك القراءة أثناء الاتصال بالإنترنت أو بلا اتصال بالإنترنت أينما كنت.
أجهزة الكمبيوتر المحمول وأجهزة الكمبيوتر
يمكنك الاستماع إلى الكتب المسموعة التي تم شراؤها على Google Play باستخدام متصفح الويب على جهاز الكمبيوتر.
أجهزة القراءة الإلكترونية والأجهزة الأخرى
للقراءة على أجهزة الحبر الإلكتروني، مثل أجهزة القارئ الإلكتروني Kobo، عليك تنزيل ملف ونقله إلى جهازك. يُرجى اتّباع التعليمات المفصّلة في مركز المساعدة لتتمكّن من نقل الملفات إلى أجهزة القارئ الإلكتروني المتوافقة.