ஓர் இளங்காதல் ஜோடி, திருமணமான நான்கு வருடங்களில், ஒரு நிமிடத் தவறான புரிதலால், தங்கள் வாழ்க்கை என்னும் சிங்கார வனத்தையே தொலைத்துவிட்டு, அன்பு, ஆசை, காதல், நட்பு, உறவுகள் அனைத்திற்காகவும் ஏங்கி நிற்க, அவர்களைப் போலவே இவை அனைத்திற்காகவும் ஏங்கி நிற்கும் குழந்தைகள் என மிகச் சிறிய புள்ளியில் சுழளும் கதை இது. உயிருக்குயிரான இரண்டு நண்பர்கள், அவர்கள் வாழ்க்கையில் வீசும் எதிர்பாராத புயல்; மூன்று கதை மாந்தர்கள்; விதி வசத்தால் வாழ்க்கையைத் தொலைத்தவர்கள். வசந்த காலைத்தை இழந்து தங்களுடைய சந்தியா காலத்தில் சூரியன் உதிக்காதா என்று காத்திருக்கிறார்கள். அழகான மூன்று குழந்தைகள், பிரிந்த தங்கள் பெற்றோரை இணைக்கும் வேள்வியில் போராடுகிறார்கள். கதை முழுவதும் ஒரு மருத்துவமனையின் பின் புலத்தில் நகர்கிறது. பல வகையான நோய்களும் அவற்றிற்கான சிகிச்சைகளும் கதை முழுவதும் நகைச்சுவையுடன் அள்ளித் தெளிக்கப்பட்டுள்ளது. கதையின் கிளைமாக்ஸ் ஓர் உணர்ச்சிக் குவியலாக அமைந்துள்ளது. தேவதைக் கதைகளின் முடிவு போன்று ஓர் அழகான முடிவு. இந்த நாவல், குடியால் விளையும் தீமைகளையும் அதிலிருந்து மனிதன் வெளியே வர வேண்டும் என்பதையும் அடிநாதமாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது.