அப்படி தன்னை அறிமுகம் செய்து கொண்ட அவரது மூலமாக எனக்கு சில வருத்தமான உண்மைகள் புலனாகிறது. அவை என்னவென்றால், இலக்கியம் வளம் மிகுந்த நாகரீகம் உள்ள தமிழினம் வீழ்ந்து கொண்டிருக்கிறது. கொடுமையினும் கொடுமையாக யார் யாரெல்லாம் வாழ வைக்க வேண்டும் என்று சொல்கிறார்களோ அவர்களே விழ வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இவைகளை இச்சிறுகதை எடுத்துக் காட்டுகின்றன.
இக்கதாசிரியர் 1950 களின் நடுவில் சிறுகதைகளை எழுதத் தொடங்கி 2003 வரை 'ஹரஹர சங்கரா' என்ற குறுநாவலுடன் தனது இலக்கிய பயணத்தை முடித்துக் கொண்டார் என்றே சொல்லலாம்.
அவரது கதைகள் அனைத்தையும் படித்ததில்லை என்றாலும், ஒருசில கதைகள் மற்ற கதைகளுக்கு வழிகாட்டியாக அமைந்து குழப்புவதை களையும் வல்லமை உள்ளதாக கருகிறேன்.
உதாரணமாக, இன்றைய சமூகத்தில் வர்க்கப் போர் ஏற்படுத்தும் அதிர்வலைகளின் சதி வலையில் வருங்கால மானுடகுலம் சிக்கிக் கொள்ளாமல் இருக்க அவர் எழுதிய 'ஆயுத பூஜை' அத்தாட்சியாகும். அந்த கதையில் குடும்பம், காமக்களிப்பு, தேங்காய் உடைப்பு இவற்றுக்கெல்லாம் விடை தரும் ஒரு புதிய மனிதனை உருவாக்கியிருந்தார்.
பொழுது போக்குப் பத்திரிகைகள் அத்தகைய புனித மனிதர்களின் புதிய படைப்புக்கு எக்காலத்திலும் இடம் தரா என்றும் சொல்லவும் வேண்டுமோ? அதைப்போலவே இவற்றில் இடம் பெற்றுள்ள பல கதைகளும் அத்தகைய வெகுஜனங்களின் விருந்து ஆகா!
- ஜெ.ஜெயஸிம்ஹன்