ஜெர்மனியிலிருந்து எப்பொழுது இந்தியா போகலாம், எப்பொழுது அஞ்சலியை பார்க்கலாம் என்று மனக்கோட்டைக் கட்டிக் கொண்டிருந்தவனின் தலையில் இடி விழுந்தது போல் அந்தச் செய்தியை அவனுடைய அம்மா கூறினார். எந்த அஞ்சலியை ஆசையாக பார்க்க வேன்டும் என்று எண்ணிக் கொண்டிருந்தானோ அந்த அஞ்சலிக்கு பழைய நினைவுகள் வந்து அவனையும், அவன் காதலையும் அடியோடு மறந்து விட்டாள் என்பது தான் அந்த துயரச் செய்தி. இந்தியாவுக்கு எப்பொழுது போகலாம் என்று ஏங்கிக் கொண்டிருந்தவனுக்கு இந்தியா திரும்பி போகத்தான் வேண்டுமா என்ற எண்ணம் எழுந்தது. எப்படி இருந்தாலும் போய்த்தானே ஆக வேண்டும் என்று நினைத்து கனத்த மன்துடன் இந்தியா வந்து செர்ந்தான்.