காணும் விதத்தில் தெரியும் காணும் பொருள் யாவிலும் கவிதை. காணும் பொருள் ஒவ்வொன்றிலும் ஒளிந்திருக்கும் காண முடியா பொருள் ஒன்றினை கண்டெடுத்துத் தரும் நல்ல கவிதை.
ஒரு காட்சி.
அதற்கான ஒரு கவிதை.
இரண்டும் இணையும் இடத்தில் புதிய புரிதல்.
அதன் மூலமாய் ஒரு புரியாத பரவசம்.
இது தான் இந்தக் கவிதை நூல்
இப்படிப்பட்ட ஒரு கவிதை நூல் , தமிழ்க்கவிதை வரலாற்றில் ஒரு முதல் முயற்சி.
இடைவிடாமல் இயற்கை எழுதித் தள்ளிக் கொண்டிருக்கும் கவிதைளை , காட்சிகளாய் பிடித்துக் கொண்டுவரும் திரு.வரதராஜனின் ( திட்ட அலுவலர் , மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் , தஞ்சாவூர் ) புகைப்படங்களுக்கு , கவிஞர். க.ஆனந்த் ( உதவி செயற்பொறியாளர் , தமிழ்நாடு மின்சார வாரியம் , ஈரோடு ) தொடர்ந்து எழுதிய கவிதைகளை , ஒரு மின்புத்தகமாக , எங்களது Mukil E Publishing and Solutions Private Limited மூலம் வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம்.