குமுதத்தில் 1963ஆம் ஆண்டு வால்கள் மூலம் அறிமுகமான ராஜேந்திரகுமாரின் 'ஙே' என்ற எழுத்து இன்று வரை வாசகர்களின் மனத்தில் இடம்பிடித்திருக்கிறது ஆச்சர்யமான உண்மை. நகைச்சுவை, குடும்பம், செக்ஸ், சினிமா, பேய் என்று பல ஜானர்களில் எழுதி அசத்தியவர். முன்னணி தமிழ் இதழ்கள் அனைத்திலும் சிறுகதைகள், தொடர்கதைகள், கட்டுரைகள் எழுதியவர். மாத நாவல்களின் விற்பனை கொடிகட்டி பறந்த நேரத்தில் ஒரே மாதத்தில் ஆறு நாவல்கள் எழுதி அசத்தியவர். இதுவரை 500-க்கும் மேற்பட்ட நாவல்கள், தொடர்கதைகள் 300-க்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியவரின் நான்கு நாவல்கள் மூடுபனி, வணக்கத்துக்குரிய காதலியே, கண்ணாமூச்சி, கெளரி என்கிற பெயரில் திரைப்படங்களாகி உள்ளன.