தன்னை நாத்திகர் என்று சொல்லிக்கொண்டிருந்த ஒருவர் இறைவனின் நேரடி பார்வையின்கீழ் விழித்தெழுந்து ஆன்மீக குருமார்கள் சென்ற பாதையில் சென்று பல அதிசயமான ஆன்மீக அனுபவங்களைப் பெற்றுவருகின்றார் . முருகப்பெருமான் அறிவுறுத்திய வகையில் பல்வேறு உயரிய ஆன்மீக பணிகளைச் செய்துவருகின்றார் . அவர் செய்த மற்றும் செய்யப்போகின்ற அரும்பெரும் பணிகள் குறித்தும் இதில் விவரிக்கப்பட்டுள்ளது.
பண்டைய குமரிக்கண்டத்தின் ஆன்மாக்களை ஒன்றிணைத்து புதிதாக வரவிருக்கும் முருக யுகத்தை வரவேற்பதற்கான பல செயல்கள் இப்புவியில் நடைபெற்றுவருகின்றது. இதனைக் குறித்த சுவாரசிய தகவல்கள் இப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. கார்த்திகை ஆற்றல்கள் அல்லது ப்ளேடியன், காலப்பயணம், சுவஸ்திகா ஆற்றல்கள் ,முருகரின் நவபாஷாண சிலை, குமரிக்கண்டம் போன்றவை குறித்த அறியத் தகவல்கள் இந்த புத்தகத்தின் வாயிலாக உலக மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
ரா. ரெஜித் குமார் ஒரு ஆன்மீகவாதி, குணப்படுத்தும் தன்மையினை பரிசாகப் பெற்றவர் மற்றும் உலகெங்கும் பயணிக்கும் ஒரு நவீனக்கால யோகி. கடந்த 18 ஆண்டுகளாக முருகப்பெருமான் மற்றும் பல சித்தர்களால் வழிநடத்தப்பட்டு வருபவர். அதன் மூலம் பெற்ற அனுபவங்களையும், ஞான ரகசியங்களையும் அனைவருக்கும் தொடர்ந்து பகிர்ந்து வருகின்றார். இவை அனைத்தும் உலகின் ஆன்மீக விழிப்புணர்வுடன் தொடர்புடையவை.
ஸ்ரீ ரெஜித் குமார் அவர்கள் 2017ல் லயன் மயூரா ராயல் கிங்டம் (LMRK) என்ற உலகளாவிய இயக்கத்தை நிறுவினார். உலக அமைதிக்காகவும், உலகின் செழிப்பிற்காகவும் முருகப்பெருமானால் வழங்கப்படும் கடமைகளை, சேவை மனப்பான்மை உள்ள தன்னார்வலர்கள் ஒன்றிணைந்து செயல்படுத்துவதற்கான இயக்கமாக LMRK உள்ளது.