Utharayanam

· Pustaka Digital Media
ਈ-ਕਿਤਾਬ
143
ਪੰਨੇ

ਇਸ ਈ-ਕਿਤਾਬ ਬਾਰੇ

ஒரு இளம் பெண் கையில் ஆயுதம் ஏந்தி மற்ற எல்லாப் பெண்களுடன் சேர்ந்து ஒரு 'டாஸ்மாக்' கடையை அடித்து நொறுக்குகிறாள். அந்த சூழ்நிலை ஏன் ஏற்பட்டது? ஒரு குடிகாரக் கணவனோடு வாழும் ஒரு இளம் பெண்ணின் வாழ்க்கைப் போராட்டத்தையும் அதனால் ஏற்படும் மனப்போராட்டத்தையும் விவரிக்கும் 'போராட்டம்' போன்ற சிறுகதைகள் இதில் இடம் பெற்றுள்ளதாலேயே இந்தத் தொகுப்பு நூல் பல்கலைக் கழகங்கள், கல்லூரிகளில் துணைப் பாடமாக வைப்பதற்கு உகந்தது. 'டிஜிட்டல் மயமாக்கமும் இழப்புகளும்' என்ற கதையில் 'டிஜிட்டல் மயமாக்கம்' 'ஆன்லைன் வர்த்தகமெல்லாம்' எப்படி ஒருவரையொருவர் முகம் பார்த்து பேசிப் பழகும் வாய்ப்பு இல்லாமல் போவது குறித்த வருங்கால யதார்த்தம் வெளிப்படுகிறது என்பதையும் சுட்டிக்காட்டி, பட்டிமன்ற மேடைகளில் பக்கம் பக்கமாய்ப் பேசும் கருத்துகளை ஒரு சிறுகதை உணர வைத்து விடுகிறது

ਲੇਖਕ ਬਾਰੇ

சென்னை தொலைபேசி அலுவலகத்தில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றிருக்கும் ரேவதி பாலு முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக சிறுகதை, நாடகம், குறுநாவல், ஆன்மிகம் என்று எல்லா துறைகளிலும் தடம் பதித்து பல்வேறு பரிசுகளை வென்றிருக்கிறார். இதுவரை நான்கு சிறுகதைத் தொகுப்பு நூல்கள், ஒரு ஆன்மிகக் கட்டுரைத் தொகுப்பு நூல் மற்றும் ஒரு பல்சுவை கட்டுரை தொகுப்பு நூல் வெளியாகியுள்ளன. இவருடைய நாடகங்கள் சென்னை வானொலி, பொதிகை தொலைக்காட்சியில் ஒலி, ஒளி பரப்பாகியுள்ளன. சென்னை வானொலியில் ஐந்து வருடங்கள் தொடர்ந்து 'நகர்வலம்' நிகழ்ச்சியில் பங்கு பெற்றிருக்கிறார்.

பரிசுகள்:

1) இலக்கிய சிந்தனை அமைப்பின் சிறந்த சிறுகதைக்கான மாதப் பரிசினை, இரு முறை வென்றிருக்கிறார்.
2) ஆனந்தவிகடன் வாரப் பத்திரிகையின் வைரவிழாப் போட்டியில் இவருடைய நகைச்சுவை ஓரங்க நாடகம் முதல் பரிசு வென்றிருக்கிறது.
3) கலைமகள் சிறுகதைப் போட்டியில் இரண்டாவது பரிசு.
4) கலைமகள் 'குறுநாவல்' போட்டியில் இரண்டாவது பரிசு.
5) 'இலக்கிய பீடம்' மாத இதழ் வருடந்தோறும் நடத்தும் சிறுகதைப் போட்டியில் மூன்று முறை ஆறுதல் பரிசு கிடைத்துள்ளது.
6) மங்கையர் மலர் இதழ் நடத்திய சிறுகதைப் போட்டியில் ஆறுதல் பரிசு கிடைத்துள்ளது.
7) நெய்வேலி புத்தக கண்காட்சியில் 2016ஆம் வருடத்திற்கான சிறந்த எழுத்தாளர் பரிசு கிடைத்துள்ளது.

ਇਸ ਈ-ਕਿਤਾਬ ਨੂੰ ਰੇਟ ਕਰੋ

ਆਪਣੇ ਵਿਚਾਰ ਦੱਸੋ

ਪੜ੍ਹਨ ਸੰਬੰਧੀ ਜਾਣਕਾਰੀ

ਸਮਾਰਟਫ਼ੋਨ ਅਤੇ ਟੈਬਲੈੱਟ
Google Play Books ਐਪ ਨੂੰ Android ਅਤੇ iPad/iPhone ਲਈ ਸਥਾਪਤ ਕਰੋ। ਇਹ ਤੁਹਾਡੇ ਖਾਤੇ ਨਾਲ ਸਵੈਚਲਿਤ ਤੌਰ 'ਤੇ ਸਿੰਕ ਕਰਦੀ ਹੈ ਅਤੇ ਤੁਹਾਨੂੰ ਕਿਤੋਂ ਵੀ ਆਨਲਾਈਨ ਜਾਂ ਆਫ਼ਲਾਈਨ ਪੜ੍ਹਨ ਦਿੰਦੀ ਹੈ।
ਲੈਪਟਾਪ ਅਤੇ ਕੰਪਿਊਟਰ
ਤੁਸੀਂ ਆਪਣੇ ਕੰਪਿਊਟਰ ਦਾ ਵੈੱਬ ਬ੍ਰਾਊਜ਼ਰ ਵਰਤਦੇ ਹੋਏ Google Play 'ਤੇ ਖਰੀਦੀਆਂ ਗਈਆਂ ਆਡੀਓ-ਕਿਤਾਬਾਂ ਸੁਣ ਸਕਦੇ ਹੋ।
eReaders ਅਤੇ ਹੋਰ ਡੀਵਾਈਸਾਂ
e-ink ਡੀਵਾਈਸਾਂ 'ਤੇ ਪੜ੍ਹਨ ਲਈ ਜਿਵੇਂ Kobo eReaders, ਤੁਹਾਨੂੰ ਫ਼ਾਈਲ ਡਾਊਨਲੋਡ ਕਰਨ ਅਤੇ ਇਸਨੂੰ ਆਪਣੇ ਡੀਵਾਈਸ 'ਤੇ ਟ੍ਰਾਂਸਫਰ ਕਰਨ ਦੀ ਲੋੜ ਹੋਵੇਗੀ। ਸਮਰਥਿਤ eReaders 'ਤੇ ਫ਼ਾਈਲਾਂ ਟ੍ਰਾਂਸਫਰ ਕਰਨ ਲਈ ਵੇਰਵੇ ਸਹਿਤ ਮਦਦ ਕੇਂਦਰ ਹਿਦਾਇਤਾਂ ਦੀ ਪਾਲਣਾ ਕਰੋ।