Uyirottam

· Pustaka Digital Media
ई-बुक
118
पेज

इस ई-बुक के बारे में जानकारी

என்னுடைய சிறுகதைகள் சிலவற்றைத் தொகுத்து இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு வெளியிடும் யோசனை இருந்ததை என் தந்தை எழுத்தாளர் அமரர் ரஸவாதியின் நெருங்கிய நண்பரும் மூத்த எழுத்தாளர், பத்திரிகையாளருமான திரு. பால்யூ அவர்களிடம் தெரிவித்தேன். ஆர்வத்தோடு கதைகளை வாங்கிப் படித்த அவர் மிகுந்த அக்கறையோடு மூத்த எழுத்தாளர் ஆர். சூடாமணி அவர்களிடம் என்னை அறிமுகம் செய்வித்து இந்தத் தொகுதிக்கு ஒரு முன்னுரை எழுதித் தரும்படி கேட்டுக் கொண்டார்.

சிறுகதைகளைப் படித்து சிலாகித்து, மிகுந்த அன்புடன் ஆர். சூடாமணி அவர்கள் எழுதிக் கொடுத்த முன்னுரை இந்தத் தொகுதிக்கும் பெருமை சேர்த்து என்னையும் கௌரவிக்கிறது.

- ரேவதி பாலு

लेखक के बारे में

சென்னை தொலைபேசி அலுவலகத்தில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றிருக்கும் ரேவதி பாலு முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக சிறுகதை, நாடகம், குறுநாவல், ஆன்மிகம் என்று எல்லா துறைகளிலும் தடம் பதித்து பல்வேறு பரிசுகளை வென்றிருக்கிறார். இதுவரை நான்கு சிறுகதைத் தொகுப்பு நூல்கள், ஒரு ஆன்மிகக் கட்டுரைத் தொகுப்பு நூல் மற்றும் ஒரு பல்சுவை கட்டுரை தொகுப்பு நூல் வெளியாகியுள்ளன. இவருடைய நாடகங்கள் சென்னை வானொலி, பொதிகை தொலைக்காட்சியில் ஒலி, ஒளி பரப்பாகியுள்ளன. சென்னை வானொலியில் ஐந்து வருடங்கள் தொடர்ந்து 'நகர்வலம்' நிகழ்ச்சியில் பங்கு பெற்றிருக்கிறார்.

பரிசுகள்:

1) இலக்கிய சிந்தனை அமைப்பின் சிறந்த சிறுகதைக்கான மாதப் பரிசினை, இரு முறை வென்றிருக்கிறார்.
2) ஆனந்தவிகடன் வாரப் பத்திரிகையின் வைரவிழாப் போட்டியில் இவருடைய நகைச்சுவை ஓரங்க நாடகம் முதல் பரிசு வென்றிருக்கிறது.
3) கலைமகள் சிறுகதைப் போட்டியில் இரண்டாவது பரிசு.
4) கலைமகள் 'குறுநாவல்' போட்டியில் இரண்டாவது பரிசு.
5) 'இலக்கிய பீடம்' மாத இதழ் வருடந்தோறும் நடத்தும் சிறுகதைப் போட்டியில் மூன்று முறை ஆறுதல் பரிசு கிடைத்துள்ளது.
6) மங்கையர் மலர் இதழ் நடத்திய சிறுகதைப் போட்டியில் ஆறுதல் பரிசு கிடைத்துள்ளது.
7) நெய்வேலி புத்தக கண்காட்சியில் 2016ஆம் வருடத்திற்கான சிறந்த எழுத்தாளர் பரிசு கிடைத்துள்ளது.

इस ई-बुक को रेटिंग दें

हमें अपनी राय बताएं.

पठन जानकारी

स्मार्टफ़ोन और टैबलेट
Android और iPad/iPhone के लिए Google Play किताबें ऐप्लिकेशन इंस्टॉल करें. यह आपके खाते के साथ अपने आप सिंक हो जाता है और आपको कहीं भी ऑनलाइन या ऑफ़लाइन पढ़ने की सुविधा देता है.
लैपटॉप और कंप्यूटर
आप अपने कंप्यूटर के वेब ब्राउज़र का उपयोग करके Google Play पर खरीदी गई ऑडियो किताबें सुन सकते हैं.
eReaders और अन्य डिवाइस
Kobo ई-रीडर जैसी ई-इंक डिवाइसों पर कुछ पढ़ने के लिए, आपको फ़ाइल डाउनलोड करके उसे अपने डिवाइस पर ट्रांसफ़र करना होगा. ई-रीडर पर काम करने वाली फ़ाइलों को ई-रीडर पर ट्रांसफ़र करने के लिए, सहायता केंद्र के निर्देशों का पालन करें.