பராக் ஒபாமா

· SIBI PATHIPPAGAM
Ebook
208
Pages

About this ebook

அடிமை ராஜா?


அடிமைப்படுவது இரண்டு வகை.

அன்னியப் படையெடுப்பில் தோற்று அடிமைப்படுவது.

தோற்றவர்கள் ஜெயித்தவர்களின் சொந்த நாட்டுக்குப் போய், அங்கே அவர்களுக்கு சேவகம் செய்வது.

அடிமைப்படுத்துவதிலும் இரண்டு வகை உண்டு. 

படையெடுத்து நேருக்கு நேர் சந்தித்து தோற்கடித்து அடிமைப் படுத்துவது.

வர்த்தகம் செய்வதற்காக அனுமதி வாங்கி, ஆள்வோரைக் கடனாளியாக்கி அவர்களுடைய நாட்டை மறைமுகமாக விழுங்குவது.

அமெரிக்கா என்ற மிகப்பெரிய நிலப்பரப்பை கண்டு பிடித்தவர்கள், அந்த மண்ணின் பூர்வகுடிகளை துப்பாக்கிகளால் அடிமைப் படுத்தினார்கள்.

அவர்களைக் கொண்டே அவர்களுடைய மண்ணின் வளங்களைக் கொள்ளையடித்தார்கள்.

பூர்வகுடிகள் அழிந்தபிறகு, ஆப்பிரிக்க காடுகளில் வசித்த கறுப்பு இன மக்களை விலங்குகளைப் போல வேட்டையாடி பண்ணைகளிலும் வீடுகளிலும் சவட்டி எடுத்தனர்.

200 ஆண்டுகளுக்கு மேலாக அவர்கள் விலங்குகளிலும் கேவலமாக நடத்தப்பட்டனர்.

நமக்காக உழைக்கும் மாடுகளுக்குக் கூட அதன் உழைப்புக்குத் தகுந்தபடி இரை போடுவோம். ஒரு நோய் வந்தால் மருத்துவம் பார்ப்போம்.

ஆனால், கறுப்பின மக்களுக்கு சரியான உணவு கூட கொடுக்கமாட்டார்கள். அவர்கள் உயிரோடு இருந்தால்தானே தொடர்ந்து தனக்காக உழைக்க முடியும் என்ற குறைந்தபட்ச சிந்தனை கூட வெள்ளைக்காரர்களுக்கு இருக்காது.  

கொடுத்த விலைக்கு மேல் அந்த அடிமை உழைத்தால் போதும். அவனுக்கு எதற்காக உணவுச் செலவு, வைத்தியச் செலவு என்கிற மனப்பான்மைதான் வெள்ளைக்காரர்களுக்கு இருந்தது.  

கறுப்பின மக்களுக்கு வெள்ளைக்காரர்கள் செய்த கொடுமைகள் கொஞ்சநஞ்சமல்ல.  

இனி அடிமைகள் யாரும் இங்கில்லை என்று பெயரளவுக்கு சட்டம் இயற்றுவதற்கு 200 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது.  

ஆப்ரகாம் லிங்கன்தான் அந்தச் சட்டத்தை இயற்றினார். ஆனால், சட்டத்தை தூக்கி அலமாரியில் வைத்துவிட்டு மீண்டும் தங்கள் எஜமான் மனப்பான்மையுடன்தான் வெள்ளைக்காரர்கள் நடந்துகொண்டார்கள்.  

ஆட்சி அதிகாரம் பற்றியெல்லாம் அவர்கள் நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஏனென்றால், வாக்குரிமைகூட அவர்களுக்கு இல்லை.

ஆனால், காலம் செல்லச் செல்ல கறுப்பின மக்களுடன் வெள்ளை இனத்தவரில் சிலரும் கலக்கவேண்டிய சூழல் ஏற்பட்டது. இந்த கலப்பின மக்களும், கறுப்பின மக்கள்தான் என்று முத்திரை குத்தப்பட்டார்கள்.  

நீக்ரோ என்று அழைக்கப்பட்ட அவர்கள், தங்களை நீக்ரோ என்று அழைக்கக்கூடாது. கறுப்பர்கள் அல்லது ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் என்றுதான் அழைக்க வேண்டும் என்று வற்புறுத்தும் நிலைக்கு உயர்ந்தார்கள்.  

அடிமைப்படுத்திய தேசத்தின் கவுரவம் உலக அளவில் எல்லாத் துறைகளிலும் உயர்ந்து நிற்க காரணமானார்கள்.

இருந்தாலும், ஆட்சி அதிகாரத்தில் வெள்ளையர்கள் மட்டுமே அமரமுடியும் என்ற நிலை நீடித்தது.  

எப்போது ஒருமுறை அமெரிக்க நாடாளுமன்றத்தின் நூறு செனட் உறுப்பினர்களில் ஒருவர் இடம்பெற முடிந்தது. சமீப காலத்தில் கறுப்பு இனத்தைச் சேர்ந்த ஓரிருவர் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டார்கள். அவர்கள்கூட மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள் அல்ல.  

இதோ, காலம் புரண்டு படுத்திருக்கிறது. அடிமை படுத்தப்பட்ட வம்சத்திலிருந்து வந்த ஒபாமா அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.  

ஆனால், அவர் வெள்ளையரை மீறி எதை சாதிக்கமுடியும் என்கிற கேள்வி எழுந்துள்ளது. நாடாளுமன்றத்தின் கீழ் சபையிலும், மேல் சபையிலும் முழுக்க முழுக்க வெள்ளையரே இடம் பெற்றுள்ள நிலையில், இவர் எந்த காரியத்தை தன்னிச்சையாக நிறைவேற்ற முடியும்? 

அடிமைப்படுத்திய தேசத்தின் ராஜாவாக பொறுப்பேற்று இருப்பது வரவேற்கக் கூடியதுதான்.  ஆனால், வெள்ளைக்காரர் களின் கைப்பாவையாக செயல்படவேண்டிய நிலை நீடிக்கும் போது இவரை அடிமை ராஜா என்றுதானே கருதமுடியும்.

ஒபாமா அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப் பட்டவுடன் அவரைப் பற்றிய விவரங்களை சேகரித்தேன். அப்போது பல புதிய தகவல்கள் கிடைத்தன. ஆட்சிக்கு வருவதற்கு முன்பே, கென்யா நாட்டின் அரசியல் விவகாரங்களில் தலையிட்டார். தனது உறவினர் ஒருவருக்கு பிரதமர் பதவி தரும்படி அந்த நாட்டின் ஜனாதிபதியை மிரட்டினார் என்ற விஷயம் அதிர்ச்சியளித்தது.   

ஏழைப்பங்காளன் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட ஒபாமாவின் தேர்தல் நிதி வசூல் மட்டும் சுமார் 500 கோடி ரூபாய் என்கிற விவரம் மலைக்க வைத்தது.  தவிர, ஒபாமா தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் உள்ள சிரமங்களும் புரிந்தன.  

முழுக்க முழுக்க வெள்ளைக்காரர்கள் மட்டுமே நிறைந்த நாடாளுமன்றத்தில் இவர் எதை தன்னிச்சையாக நிறைவேற்றப் போகிறார்? தான் நினைத்ததை நிறைவேற்ற முடியாத ராஜாவை, அடிமை ராஜா என்றுதானே அழைக்க முடியும். 

புதிய தகவல்களுடன் இந்த நூல் உங்களுக்கு புதுவிதமான அனுபவத்தை தரும் என்பது நிச்சயம்.

நன்றி!

அன்புடன்

சோழராஜன்

About the author

ஆதனூர் சோழன். நிஜப் பெயர் சோழராஜன். மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள ஆதனூர் எனது கிராமம். 1959 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 22 ஆம் தேதி பிறந்தேன்.


சிறுவயதில் இருந்தே நிறைய படிப்பேன். எழுத்தாளராக வேண்டும் என்பதுதான் எனது கனவு.


அலங்காநல்லூர் அரசு தொடக்கப்பள்ளி, ஆதனூர் கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி, மதுரை தத்தனேரியில் உள்ள வைத்தியநாதய்யர் நினைவு நடுநிலைப்பள்ளி, காந்திகிராமத்தில் உள்ள தம்பித்தோட்டம் உயர்நிலைப்பள்ளி, அலங்காநல்லூர் அரசு உயர்நிலைப்பள்ளி ஆகியவற்றில் படித்தேன். மதுரை வக்ஃப் போர்டு கல்லூரியில் பி.ஏ., பொருளாதாரம் படித்தேன்.


அதன்பிறகு, தினமலர், தினமணி, முரசொலி, தீக்கதிர், மாலைமுரசு, ஜனசக்தி, மக்கள் தொலைக்காட்சி உள்ளிட்ட பல்வேறு ஊடகங்களில் பணி புரிந்திருக்கிறேன்.


தற்போது, நக்கீரன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பாவை உள்ளிட்ட புகழ்பெற்ற பதிப்பகங்களுக்கு நூல்கள் எழுதி வருகிறேன். வாழ்க்கை வரலாறு, அறிவியல், குழந்தைகளுக்கான நூல்கள் என்று 100க்கு மேற்பட்ட நூல்கள் வெளிவந்துள்ளன.


பிரபாகரன் வரலாற்றை “தலைவன் - ஒரு இனப்போராட்டத்தின் எழுச்சிமிகு வரலாறு” என்ற தலைப்பில் எழுதியிருக்கிறேன்.


ஹிட்லர், நெப்போலியன், சேகுவேரா, பிடல் காஸ்ட்ரோ, நேபாளம் மன்னராட்சி டூ மாவோயிஸ்ட், நேதாஜி, இ.எம்.எஸ்.. ஜோதிபாசு, ஒபாமா, பெனாசிர், உள்ளிட்ட வரலாற்று நூல்களையும்,


ஸ்புட்னிக் முதல் சந்திராயன் வரை, பூமியின் புதிர்கள், உள்ளங்கையில் உலகம், மிஸ்டர் மனிதன், நீங்கள் நல்ல அம்மாவா?, கண்டுபிடிப்புகள் 2008 வரை, கி.மு. முதல் கி.பி. வரை..., பனி மனிதன், உங்கள் குழந்தைகளை நல்லவர்களாக வளர்ப்பது எப்படி? உள்ளிட்ட அறிவியல் மனநல நூல்களையும் எழுதி இருக்கிறேன்.


இப்போது, சிபி பதிப்பகம், ராதை பப்ளிகேஷன்ஸ் என்ற இரண்டு பதிப்பகங்களை சொந்தமாக நடத்தி வருகிறேன்.


ஆங்கிலத்திலிருந்து எளிமையான தமிழில் மொழிபெயர்க்கும் திறமை இருக்கிறது. டைப்பிங், லே அவுட், அட்டை வடிவமைப்பு ஆகியவையும் தெரியும். எனது நூல்களை நானே டைப் செய்து, வடிவமைத்து பதிப்பகங்களுக்கு தருகிறேன்.


முற்றிலும் இளைஞர்களுக்கான இணையதளம் ஒன்றை உருவாக்கி இருக்கிறேன். இந்த இணைய தளம் தமிழ்ச் சமுதாயத்துக்கு நல்லது செய்வது என்ற ஒரே குறிக்கோளை லட்சியமாக கொண்டது. எனது தொடர்பு எண்கள், 9840496702..

அன்புடன், 

ஆதனூர்சோழன்

Rate this ebook

Tell us what you think.

Reading information

Smartphones and tablets
Install the Google Play Books app for Android and iPad/iPhone. It syncs automatically with your account and allows you to read online or offline wherever you are.
Laptops and computers
You can listen to audiobooks purchased on Google Play using your computer's web browser.
eReaders and other devices
To read on e-ink devices like Kobo eReaders, you'll need to download a file and transfer it to your device. Follow the detailed Help Center instructions to transfer the files to supported eReaders.