Karbam Muthal Pirasavam Varai

· Bhuvaneswari
4.2
10 reviews
Ebook
174
Pages

About this ebook

அம்மா..!

ஒவ்வொரு பெண்ணுக்கும் இதைவிட உற்சாகம் தரும் சொல் வேறு எதுவும் இருக்கமுடியாது. கேட்ட உடனே மனம் குளிரும் சொல் இது. மனதெல்லாம் ஆனந்தம் பொங்கி வழிந்து, முகத்தில் சந்தோஷம் தாண்டவமாடும் ஒரு உன்னத வார்த்தை.


பெண்ணிற்கு மட்டுமே அந்த கடவுள் அளித்திருக்கும் ஈடு இணையற்ற வரம் தாய்மை! தனக்கு பின் தனது குடும்பத்தின் வாரிசை உருவாக்கி அதற்க்கு உயிரும் உருவமும் கொடுத்து உருவாக்குவது பெண்கள் மட்டுமே.


ஆனால், இந்த தாய்மை என்னும் மிக பெரும் பெருமையை அணு அணுவாக ரசிக்க விடாமல் பெண்களை பயத்தோடு வைத்திருக்க நம் சமுகத்தில் ஏராளமான கட்டுக்கதைகள் உலா வருகின்றன. இவற்றை எல்லாம் கேட்டு தாய்மை என்பதே மிகவும் பயமான அனுபவம் என நம்பி பயத்துடனும் குழப்பதுடனும் பிரசவ நாட்களை நினைத்து கவலைபடுகிறார்கள் நம் பெண்கள்.


உண்மையில் தாய்மை ரொம்ப இலகுவான விஷயமில்லைதான். கருவில் உருவான உயிரை பத்து மாதங்கள் பத்திரமாக வயிற்றில் சுமந்து, மனதளவிலும், உடலளவிலும் பற்பல மாற்றங்களை எதிர்கொண்டு, குழந்தையை பிரசவிக்கும் வரை பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் அதிகம்தான். ஆனால் அந்த பிரச்சனைகள் எதனால் ஏற்படுகிறது, அதை எவ்வாறு சரி செய்வது என்பதை தெரிந்து கொண்டால் தாய்மை என்பது ஒரு பெரும் வரமாகவே இருக்கும்.


உண்மையில் பிரசவம் என்பது ஒரு பெண்ணுக்கு மறுஜென்மம் போன்றதுதான். தாய்மைப்பேறு என்பது ஒவ்வொரு பெண்ணும் அனுபவித்து மகிழவேண்டிய அற்புதமான விஷயம்! கஷ்டப்பட்டு பத்து மாதங்கள் சுமந்து பிரசவித்த குழந்தையை பார்த்த அந்த நிமிடம், தான் அனுபவித்த கஷ்டமெல்லாம் மறந்து ஆனந்த கண்ணீர் எட்டிபார்க்கும் தருணம் அது.


கரு உருவான நாளில் இருந்து பிரசவம் ஆகும் நாள் வரை கருவுற்ற பெண்களுக்கு தோன்றும் சந்தேகங்கள் ஏராளம். இது ஏன், எதனால் ஏற்படுகிறது என அம்மா, மாமியார், அக்கா, மற்றும் தெரிந்தவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்டாலும். வெளிப்படையாக கேட்க முடியாத சில கேள்விகள் அவர்களை மிகுந்த குழப்பத்துக்கு உள்ளாக்கும்.


மனதை அரிக்கும் அது போன்ற கேள்விகள் அனைத்துக்கும் முடிந்தவரை முழுமையான விளக்கங்கள் தருவதும், தாய்மைப் பேறு பற்றிய கட்டுக்கதைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதும் தான் இந்த பதிப்பின் உன்னத நோக்கம்.


இன்றைய நவீன யுகத்தில் உள்ள கர்ப்பம் தரித்த அல்லது தரிக்க போகிற பெண்கள் அனைவருக்கும் நல்லபடியாக குழந்தை பெற்று கொள்ள வேண்டும் என்ற ஆசை நிறைய இருக்கும். ஆனாலும் பிரசவ காலத்தில் தன் உடலில் என்னென்ன மாற்றங்கள் நிகழும், அதை எப்படி எதிர்க் கொள்ள வேண்டும் என்ற குழப்பங்களும், சந்தேகங்களும் எழாமல் இல்லை. சிலவற்றை நம் வீடு பெரியோர்கள் சொன்னாலும், பலவற்றை அவர்களிடம் நம்மால் வாய் விட்டு கேட்க முடிவதில்லை. அதற்கு நமது சமுக அமைப்பும் ஒரு காரணம். அந்த விடை தெரியாத கேள்விக்கு யாரிடம் கேட்டு பதிலை தெரிந்து கொள்வது என்ற குழப்பமே மேலோங்கி இருக்கும். அந்த விடை தெரியாத கேள்விகளுக்குகான பதிலளிக்கும் புத்தகமே இது. உங்கள் மனதில் எழும் அனைத்து கேள்விகளுக்கும் பதில்கள் இங்கே கேள்வி பதில் வடிவில் தரப்பட்டுள்ளன. உங்களின் அனைத்து சந்தேகங்களையும் இந்த புத்தகம் தீர்த்து விடும் என நம்புகிறேன். எனவே அவற்றை படித்து பயன்பெறுமாறு கேட்டு கொள்கிறேன். 


வாருங்கள் தாய்மைப்பேறின் மகத்துவத்தை அறிவோம்!

Ratings and reviews

4.2
10 reviews
E KARTHIKEYAN
July 16, 2021
Very useful msg
1 person found this review helpful
Did you find this helpful?
Dhivya Shalini
August 18, 2019
அருமையான புத்தகம்
2 people found this review helpful
Did you find this helpful?

Rate this ebook

Tell us what you think.

Reading information

Smartphones and tablets
Install the Google Play Books app for Android and iPad/iPhone. It syncs automatically with your account and allows you to read online or offline wherever you are.
Laptops and computers
You can listen to audiobooks purchased on Google Play using your computer's web browser.
eReaders and other devices
To read on e-ink devices like Kobo eReaders, you'll need to download a file and transfer it to your device. Follow the detailed Help Center instructions to transfer the files to supported eReaders.