கோணல் பக்கங்கள் 3 / Konal Pakkangal 3 (Tamil)

Free sample

ஐந்து முதலமைச்சர்களைத் தந்ததாக மார்தட்டிக் கொள்ளும் தமிழ் சினிமா, உலக சினிமா அரங்கில் பேசப்பட்டதேயில்லை.

இந்தியாவில் நடந்துகொண்டிருப்பது ஜனநாயகம் அல்ல என்பது என் முடிவான கருத்து. இது ஜனநாயகத்தின் பெயரால் நடக்கும் கேலிக் கூத்து.

உலக இலக்கியம் பற்றிப் பேசுபவன்தான் எல்லாவித சமரசத்துக்கும் தயாராக இருப்பவர்களின் கியூவில் முதல் இடம் பிடிக்கத் துடிப்பவனாக இருக்கிறான்.

நீங்கள் சினிமா நடிகனை நடிகையைப் பிரபலம் என்றும், ஒரு எழுத்தாளனைச் சாமான்யன் என்றும் மதிப்பீடு செய்கிறீர்கள்.

தமிழ்நாட்டுக்கு என்று ஒரு தனிச் சிறப்பு உள்ளது. அஃதாவது இங்கேதான் சிட்னி ஷெல்டன் மாதிரி எழுதுகிற ஒருவர் தன்னை இலக்கிய உலகம் இலக்கியவாதியாக அங்கீகரிக்கவில்லையே என்று அங்கலாய்ப்பதைப் பார்க்க முடியும்.

வெளிநாட்டில் உள்ள தமிழ்ச் சங்கங்களால் தமிழுக்கு இதுவரை சிறு துரும்புகூடப் பயன் இருந்ததில்லை.

நம்மூர் எழுத்தாளர்களுக்கு ஹிஸ்டரி மட்டுமே தெரியும். சபால்டர்ன் ஹிஸ்டரி தெரியாது. எனவே சமூகம் என்ன சொல்கிறதோ அதையே அட்சரம் பிசகாமல் திருப்பிச் சொல்வார்கள்.

கிழக்கு பதிப்பகம் | Kizhakku pathippagam

Read more

Reviews

4.6
9 total
Loading...

Additional Information

Publisher
Kizhakku
Read more
Published on
Jan 1, 2014
Read more
Pages
374
Read more
ISBN
9788184938548
Read more
Language
Tamil
Read more
Genres
Literary Collections / Essays
Read more
Content Protection
This content is DRM protected.
Read more
Read Aloud
Available on Android devices
Read more

Reading information

Smartphones and Tablets

Install the Google Play Books app for Android and iPad/iPhone. It syncs automatically with your account and allows you to read online or offline wherever you are.

Laptops and Computers

You can read books purchased on Google Play using your computer's web browser.

eReaders and other devices

To read on e-ink devices like the Sony eReader or Barnes & Noble Nook, you'll need to download a file and transfer it to your device. Please follow the detailed Help center instructions to transfer the files to supported eReaders.
சாருவின் கோணல் பக்கங்களை முழுக்கப் படிக்கையில் ஒன்று தோன்றுகிறது. சாருவுக்குள் ஒரு காட்டு மனிதன் இருந்து, சதா துரத்திக்கொண்டே இருக்கிறான். அவனுக்குள் காடுகளின் ஞாபகம் அலைபாய்ந்துகொண்டிருக்கிறது. உலகப் படங்கள், உலகப் பயணங்கள் எனப் பரிமாணங்கள் வந்தாலும் சாருவின் பார்வை காட்டுவாசியாகவே தொடர்கிறது. அங்கும் மீன்கள், நத்தைகள்

(திருவனந்தபுரத்தில் திரைப்பட விழாவில் ஒரு கள்ளுக்கடையில் சாரு எனக்கு நத்தைகளைப் பதப்படுத்தி உண்ணக்கொடுத்தார். நாக்கில் இன்னமும் நத்தைகளின் ருசி), பழங்கள், பன்றிக் கறி, இசை, இலக்கியம், குடி, நடனம், ஒழுக்க விதிகளை உடைத்தெறியும் பாலியல் என காட்டு ஞாபகமே இந்தப் பக்கங்களில் கிளை விரிக்கிறது.

சாருவின் எழுத்துக்குள் தமிழ் landscape அதன் கவுச்சி வாசத்துடன் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

சாருவின் எழுத்துக்குள் உள் நுழைந்தால் நூற்றாண்டுகளுக்கும் முன்பு கள் குடித்துக்கொண்டிருக்கும் சங்கப் புலவர்களில் சென்று முடியும். யாழிசைக்கும் பாணர்களும், நடனமாடும் விறலியர்களும் நிறைந்த தீ எரியும் கூடாரங்களின் மஞ்சள் வெளிச்சப் பின்புலத்திலிருந்து சாரு ஒரு modern text ஐ எழுதிக்கொண்டிருக்கிறார். இடைப்பட்ட நூற்றாண்டுகளில் வந்த அறவியல் அவர் குடித்து முடித்த காலி புட்டிகளில் அடைபட்டு மூச்சுத் திணறிக்கொண்டிருக்கிறது.

சாருவின் fictional worldல் இருந்து என்ன கிடைக்குமோ அதேதான் இந்தக் கோணல் பக்கங்களில் இருந்தும் கிடைக்கிறது.

- நா. முத்துக்குமார்

கிழக்கு பதிப்பகம் | Kizhakku pathippagam

அதிகாரத்தின் கட்டுமானத்தில் கற்பனை மொழி ஆற்றும் பங்கை நாம் குறைத்து மதிப்பிட முடியாது. கற்பனை என்ற அழகான சொல்லை நாம் கீறிப் பார்த்தால் அதற்குள் பொய்,  ஜோடனை, புனைவு, திரிபு போன்ற பல தந்திரங்களைப் பார்க்க இயலும். அதிகாரம் என்பது கூட்டு மனத்தின் செயல்பாடும்தான். கூட்டு மனத்தை இயங்க வைக்கும் முக்கியமான சக்தி மொழி. கூட்டு மனங்களின் செயல்பாட்டுக்குள் எண்ணற்ற ஊடுபாவுகள் இருக்கின்றன. வலைப்பின்னல்கள் இருக்கின்றன. இவற்றினுள் ஒரு இழை எந்தளவுக்கு முக்கியமோ அந்தளவுக்கு மற்ற இழைகளும் முக்கியமானவை. அதிகாரம் செயல்படும்போது அதைத் தலைமையின் செயல்பாடாகவோ அல்லது தலைவரின் செயல்பாடாகவோ (அனைத்திந்திய அளவிலும் மாநில அளவிலும் தலைவிகளின் அதிகாரங்களையும் சேர்த்து) மட்டுமே பார்க்கக்கூடிய பழக்கம் நம்மிடம் வேரூன்றிக் கிடக்கிறது. நாட்டுக்கு அரசன், கிராமத்துக்குத் தலைவன், வீட்டுக்குத் தந்தை என்று அதிகாரத்தைத் தனி மனிதனுடன் இணைத்துப் பார்க்கும் மரபு நம்முடையது. மனித மனம், மனிதச் செயல்பாடுகள், மனித உறவுகள் விரியும் சமூகம் இவற்றின் குணங்களைச் சிக்கல்களின் இருப்பும் கோலமும் அறியாத எளிய மொழி வழியாகப் புரிந்துகொள்ள இயலாது. ஒவ்வொன்றுக்குள்ளும் ஊடாடி நிற்கும் பல்வேறு குணங்களும் கூறுகளும் இன்று மனித அறிவு வென்றெடுத்திருக்கும் பலப்பல துறைகளுக்குள் வந்துவிட்டன. இத்துறைகள் வளர்த்தெடுத்திருக்கும் மொழியால் அதிகாரத்தின் உள்ளடுக்குகளையும் ரகசிய அறைகளையும் ஊடுருவ முடிகிறது. 

காலச்சுவடு பதிப்பகம் / Kalachuvadu Publications 

எண்பதுகளின் துவக்கத்தில் பெங்களூரிலிருந்து வெளிவந்த ‘இங்கே இன்று’ என்ற பத்திரிகையில்தான் ‘கோணல் பக்கங்கள்’ என்ற பத்தி தொடராக எழுதப்பட்டது. அதன் தொடர்ச்சி மீண்டும் தொண்ணூறுகளில் ‘குதிரை வீரன் பயணம்’ என்ற சிறு பத்திரிகையில் தொடர்ந்தபோது சிறு பத்திரிகை வட்டத்தில் இது பெரிதும் விவாதிக்கப்பட்டது.

இந்தக் கோணல் பக்கங்களின் கட்டற்ற சுதந்திரத்தைப்பற்றி அப்போது பலரும் குறிப்பிட்டார்கள். கோணல் பக்கங்களின் பளீரென்ற உண்மைத்தன்மை பலரையும் பலவிதத்தில் பாதித்தது. பல விதமான வசைகளையும், அதற்கு ஈடான பாராட்டுகளையும் குவித்தது.

சிறு பத்திரிகைகளுக்குப் பிறகு 2002 ஜனவரியிலிருந்து விகடன் இணைய தளத்தில் வெளிவந்தபோது, உலக அளவில் பரவலான கவனிப்பையும் பெற்றதால் இதற்கென்றே பிரத்தியேகமான இணையதளம் ஒன்றும் (www.charuonline.com) தொடங்கப்பட்டது இதன் சிறப்பாகும்.

விகடன் இணையதளத்தில் வெளிவந்த பக்கங்கள் மட்டுமே “புத்தக வடிவில்” மூன்று பாகங்களாக வெளிவந்திருக்கின்றன.

‘எங்கள் ஐயா’ வாசிக்கையில் உண்டான  புதுப் பரவசம் ஒருபக்கம்; நான் விடைபெற்று வெளியேறி வந்து ஆண்டு பலவான வகுப்பறையின் பழைய ஞாபகங்களின் தாக்கம் மற்றொரு பக்கம். நின்று நின்று வாசித்தேன். ‘எங்கள் ஐயா’ என்ன வகையான நூல்? ஆசிரியப் பயிற்சி பெறும் மாணவர்களுக்கு மிக அவசியமான பாடப்புத்தகம் இது. ‘உளவியலைச் செயல்முறை வடிவில் காட்டியவர் எங்கள் ஐயா’ என்று அவருடைய மாணவர்கள் சொல்வது மிகச் சரி. ஆசிரியர் மாணவர் உறவின் விசாலங்களை அறியவும் நுணுக்கங்களைக் கற்றுக்கொள்ளவும் வடிவமைக்கப்பட்ட ஒருவகைச் சிற்ப நூலும்கூட இது. அதுவும் எப்படிப்பட்ட வடிவில்? விழுங்கக் கடினமான தியரிகளின் வடிவிலா? இல்லை. அரைத்த விழுதாக அனுபவங்களின் வடிவில் கிடைக்கிறது. சாறு எடுத்துக் குடிப்பதில் என்ன சங்கடம்?

காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ் | காலச்சுவடு பதிப்பகம் | Kalachuivadu Publications | Kalachuvadu Pathippagam

எகனாமிக் டைம்ஸ் நாளிதழின் அகில் இந்தியப் பதிப்பில், 2001-2010 என்ற பத்தாண்டுகளின் சாதனையாளர் பட்டியலில் தமிழகத்திலிருந்து இடம்பெற்ற இரண்டு பேர்களில் ஒருவர்சாருநிவேதிதா. (மற்றோருவர் ரஜினிகாந்த்.)

இவரது நாவல் ஸீரோ டிகிரி jan michalski சர்வதேசப் பரிகக்குப் பரிந்துரைக்கப் பட்டது. ஹார்ப்பர் காலின்ஸ் தொகுத்த, இந்தியாவின் ஜம்பது முக்கிய புத்தங்களில் ஒன்றாகவும் தேர்ந் தெடுக்கப்பட்டது.
ஆங்கிலப் பத்திரிகைகளில் இவர் எழுதும் கட்டுரைகள் சர்வதேச அளவில் கவனம் பெற்றவை. லண்டனிலிருந்து வெளியாகும் P.S. publication-இன் Exotic Gothic தொகுதியில் இவர் ஆங்கிலத்தில் எழுதிய Diabolically Yours என்ற பேய்க் கதை வெளியாகி உள்ளது.

இவரது எழுத்தை ஆங்கிலவிமர்சகர்கள் விளதிமீர், வில்லியம் பர்ரோஸ், கேத்தி ஆக்கர் போன்ற எழுத்தாளர்களோடு ஒப்பிடுகிறார்கள். உலகில் முக்கியமான transgressive வகை எழுத்தாளர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார் சாரு நிவேதிதா.

ப்ளாட்டிங் பேப்பரிலிருந்து மறைவது போல் இங்கே பல கலைஞர்களின், எழுத்தாளர்களின், சாதனையாளர்களின் பெயர்கள் மறைந்துகொண்டே இருக்கின்றன. சிலருடைய பெயர்கள் வெறும் பெயர்களாக மட்டுமே நம் ஞாபகத்தில் எஞ்சியிருக்கின்றன. அதிலும் இளைய தலைமுறைக்கு பெயர் கூடத் தெரியவில்லை.

உவேசா, கு. அழகிரிசாமி, தஞ்சை ப்ரகாஷ், அசோகமித்திரன், திருவிக என்று தொடங்கி தமிழ் படைப்புலகின் போக்கைத் தீர்மானித்த சில முக்கிய எழுத்தாளர்களையும் அவர்களுடைய படைப்புகளையும் இந்நூலில் அறிமுகப்படுத்துகிறார் சாரு நிவேதிதா.

தினமணி இணையப் பதிப்பில் வெளிவந்து பரவலான பாராட்டுகளைப் பெற்ற இந்தக் கட்டுரைகள் முதல்முறையாக இப்போது நூல் வடிவம் பெறுகின்றன.

பழுப்பு நிறப் பக்கங்கள் | கிழக்கு  பதிப்பகம்

அகதி முகாம்கள் உட்பட இன்று உலகளாவி பரந்து கிடக்கிறது தமிழ்ச் சமூகம். அதற்கும், ஒட்டுமொத்த மனித குலத்துக்கும் அளிக்கப்பட்ட கொடையே ஸீரோ டிகிரி.

ஆனால் இந்நாவலைப் பங்களிப்பென ஏற்பதோ சுற்றுப்புறச் சூழலை மாசுபடுத்தும் கழிவுப் பொருளாக ஒதுக்கித் தள்ளுவதோ சமூகத்தின் பிரச்னையே தவிர என்னுடையது அல்ல.

என் மூலமாக இக்காரியம் நடந்திருப்பதென்பது ஒரு தற்செயல் நிகழ்வு மட்டுமே. இதில் நான் ஒரு கருவியாகச் செயல்பட்டிருக்கிறேன் என்று சிறு உவகை மட்டுமே என்னளவில் மிஞ்சக் கூடியது.

ஸீரோ டிகிரி நாவலின் முதல் பதிப்பு வெளிவந்தபோது சில ‘பொதுநல விரும்பிகள்’ இதைத் தடை செய்ய வேண்டுமென தவளைச் சத்தம் எழுப்பினார்கள். அந்த வேளையில் அன்பான சில உள்ளங்கள் எனக்கு அளித்த தார்மீக ஆதரவும் அன்பும் என்னால் மறக்க இயலாதது.

ஸீரோ டிகிரி ஒரு Lipogrammatic நாவல். சர்வதேச அளவிலேயே ஒன்றிரண்டு நாவல்கள் மட்டுமே இந்த முறையில் எழுதப்பட்டுள்ளன. ஒரு நாவலில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வார்த்தைகளைத் தவிர்த்து விட்டு எழுதுவது லிப்போக்ராமடிக் எழுத்து. ஸீரோ டிகிரியில் ஒரே ஒரு அத்தியாயத்தைத் தவிர வேறு எந்த இடத்திலும் ‘ஒரு’ ‘ஒன்று’ என்ற இரண்டு வார்த்தைகளும், கமா, கேள்விக்குறி போன்ற நிறுத்தற்குறிகளும் பயன்படுத்தப்படவில்லை.
- சாரு நிவேதிதா

கிழக்கு பதிப்பகம் | Kizhakku pathippagam

Autofiction என்னும் வகையில் உலக அளவிலேயே ஒன்றிரண்டு பேர்தான் எழுதுகிறார்கள். இந்த நாவலில் அதனை வெற்றிகரமாகக் கையாண்டிருக்கிறார் சாரு. நடையும் விவரணங்களும் Baroque பாணியில் அமைந்திருக்கிறது. ஆடம்பரமும் நுணுக்கமான கலை வேலைப்பாடுகளும் படாடோபமும் கலந்தது பரோக் பாணி கட்டடக்கலை. உதாரணமாக, கைலாச மலையின் வடக்கே உள்ள மைநாக மலைக்கு அருகில் உள்ள பிந்து நதியின் கரையில் இருந்து ரத்தினங்களையும் தங்கத்தையும் எடுத்து வந்து பாண்டவர்களுக்காக மயன் கட்டிய மாளிகையைச் சொல்லலாம். இந்த நாவலின் கட்டமைப்பும் விவரணங்களும் பிரம்மாண்டமும் அந்த மயன் மாளிகைக்கு ஒப்பானவை.

சாரு நிவேதிதாவின் வழக்கமான பாணியில் இல்லாமல் செவ்வியல் மரபில் எழுதப்பட்ட இந்த நாவல் ஐயாயிரம் ஆண்டுகள் நீண்ட தமிழர்களின் ஞான மரபை அகத்தியர், தேரையர், தொல்காப்பியரிலிருந்து தொடங்கி இன்றைய முள்ளிவாய்க்கால் வரை ஆவணப்படுத்துகிறது.

மரம், செடி, கொடி, பாம்பு, யானை, எலி, பூனை, நாய், பல்லி, குரங்கு, மீன் என்று பல்லுயிர்களையும் பேசும் இந்த நாவலில் மனித வர்க்கத்தைப் பற்றி மிகக் குறைவாகவே காண முடியும். வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன் என்ற சித்தன் வாக்கு வெகு சுவாரசியமான நடையில் நாவலாக விரிந்திருக்கிறது இந்தப் பக்கங்களில். இதை ஒரு நாவலாகவும் ஒருவர் வாசிக்கலாம். வாழ்க்கை பற்றிய ஒரு வழிகாட்டி நூலாகவும் வாசிக்கலாம்.

கிழக்கு பதிப்பகம் | Kizhakku pathippagam
சாருவின் கோணல் பக்கங்களை முழுக்கப் படிக்கையில் ஒன்று தோன்றுகிறது. சாருவுக்குள் ஒரு காட்டு மனிதன் இருந்து, சதா துரத்திக்கொண்டே இருக்கிறான். அவனுக்குள் காடுகளின் ஞாபகம் அலைபாய்ந்துகொண்டிருக்கிறது. உலகப் படங்கள், உலகப் பயணங்கள் எனப் பரிமாணங்கள் வந்தாலும் சாருவின் பார்வை காட்டுவாசியாகவே தொடர்கிறது. அங்கும் மீன்கள், நத்தைகள்

(திருவனந்தபுரத்தில் திரைப்பட விழாவில் ஒரு கள்ளுக்கடையில் சாரு எனக்கு நத்தைகளைப் பதப்படுத்தி உண்ணக்கொடுத்தார். நாக்கில் இன்னமும் நத்தைகளின் ருசி), பழங்கள், பன்றிக் கறி, இசை, இலக்கியம், குடி, நடனம், ஒழுக்க விதிகளை உடைத்தெறியும் பாலியல் என காட்டு ஞாபகமே இந்தப் பக்கங்களில் கிளை விரிக்கிறது.

சாருவின் எழுத்துக்குள் தமிழ் landscape அதன் கவுச்சி வாசத்துடன் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

சாருவின் எழுத்துக்குள் உள் நுழைந்தால் நூற்றாண்டுகளுக்கும் முன்பு கள் குடித்துக்கொண்டிருக்கும் சங்கப் புலவர்களில் சென்று முடியும். யாழிசைக்கும் பாணர்களும், நடனமாடும் விறலியர்களும் நிறைந்த தீ எரியும் கூடாரங்களின் மஞ்சள் வெளிச்சப் பின்புலத்திலிருந்து சாரு ஒரு modern text ஐ எழுதிக்கொண்டிருக்கிறார். இடைப்பட்ட நூற்றாண்டுகளில் வந்த அறவியல் அவர் குடித்து முடித்த காலி புட்டிகளில் அடைபட்டு மூச்சுத் திணறிக்கொண்டிருக்கிறது.

சாருவின் fictional worldல் இருந்து என்ன கிடைக்குமோ அதேதான் இந்தக் கோணல் பக்கங்களில் இருந்தும் கிடைக்கிறது.

- நா. முத்துக்குமார்

கிழக்கு பதிப்பகம் | Kizhakku pathippagam

©2018 GoogleSite Terms of ServicePrivacyDevelopersArtistsAbout Google
By purchasing this item, you are transacting with Google Payments and agreeing to the Google Payments Terms of Service and Privacy Notice.