"மிகப்பெரும் பணக்காரக் குடும்பத்தில் பிறந்தவர். சின்ன வயதிலேயே ஏழைகளுக்கு உதவும் எண்ணமும் மனிதர்களை நேசிக்கும் குணமும் அவரிடம் இருந்õன. வெளி நாட்டுக்குச் சென்று பாரீஸ்டர் பட்டம் பெற்று வந்தாலும், வழக்கறிஞர் பணியில்
அவர் மனம் செல்லவில்லை. தந்தையுடன் சேர்ந்து விடுதலைப் போராட்டத்தில் ஆர்வத்துடன் கலந்துகொண்டார் நேரு.
நாட்டுக்காக அனைத்தையும் இழந்தார். போராட்டடும் சிறைவாசமுமே வாழ்க்கை ஆனது. அவரது அர்ப்பணிப்பும் உழைப்பும் தன்னலமின்மையும், சுதந்தர இந்தியாவின் முதல் பிரதம மந்திரியாக அவரை ஆக்கியது.
ஜந்தாண்டு திட்டங்கள் வரைந்து இந்தியாவை முன்னேற்றப்பாதைக்கு அழைத்துச் சென்றார். அண்டை நாடுகளுடன் நட்புறவை வளர்த்தார்.
இந்திய மக்கள், இந்தியத் தலைவர்கள் மட்டுமின்றி, உலகத் தலைவர்களும் நேரு மீது அன்பு வைத்திருந்தனர்."