பாம்பன், ராமேசுவரம், ராமநாதபுரம், பரமக்குடி, மானாமதுரை, மதுரை, கும்பகோணம், சென்னை ஆகிய இடங்களில் சூறாவளிப் பயணம் மேற்கொண்டு சொற்பொழிவு நிகழ்த்தினார். இச்சொற்பொழிவுகளோடு தமிழ்நாட்டுச் சீடர்களுக்கு அவர் எழுதிய கடிதங்கள் மற்றும் பத்திரிகை பேட்டிகள் ஆகியவற்றிலிருந்து சில பகுதிகளைத் திரட்டி இந்நூலை வடிவமைத்துள்ளோம்.
மேலை நாடுகளிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியவை, நமது நாட்டின் முன்னேற்றத்திற்கான வழிமுறைகள் முதலிவற்றை இளைஞர்களின் சிந்தனைக்காக சமர்ப்பிக்கிறோம்.