Meta வழங்கும் WhatsApp Business
WhatsApp-இல் வணிக இருப்பை கொண்டிருப்பதற்கும், உங்கள் வாடிக்கையாளர்களுடன் இன்னும் செயல்திறனுடன் தகவல்தொடர்பை செய்வதற்கும், உங்கள் வணிகத்தை வளர்ப்பதற்கும் WhatsApp Business உங்களுக்கு உதவிடும்.
வணிகத்துக்காகவும், தனிப்பட்ட பயன்பாட்டுக்காகவும் தனித்தனி கைபேசி எண்களை நீங்கள் வைத்திருந்தால், ஒரே கைபேசியில் WhatsApp தூதர் மற்றும் WhatsApp Business இரண்டையும் நிறுவி, இரண்டு வெவ்வேறு எண்களை உங்களால் பதிவுசெய்து கொள்ளமுடியும்.
WhatsApp தூதரில் கிடைக்கப்பெறும் அம்சங்களுடன் கூடுதலாக, WhatsApp Business-இல் கிடைக்கப்பெறுபவை:
• வணிக விவரம்: உங்கள் இணையதளம், இருப்பிடம் அல்லது தொடர்பு விவரம் போன்ற - மதிப்புமிக்க தகவல்களை வாடிக்கையாளர்கள் கண்டறிய உதவுவதற்கு, வணிக விவரத்தை உருவாக்கிடுங்கள்.
• வணிக தகவலனுப்பும் கருவிகள்: வேலைநேரம் தவிர்த்த நேரங்களில் அருகிலில்லா தகவலை பயன்படுத்துவதன் மூலமும், வாடிக்கையாளர்கள் முதன்முதலாக உங்களுக்கு தகவலனுப்பும் போது வாழ்த்து தகவலை பயன்படுத்துவதன் மூலமும் உங்கள் வாடிக்கையாளர்களுக்கு உடனடி பதிலை வழங்கிடுங்கள்.
• லேண்ட்லைன்/நிலையான தொடர்புஎண் ஆதரவு: ஒரு லேண்ட்லைன் (அல்லது நிலையான தொடர்பு) எண்ணுடன் WhatsApp Business-ஐ பயன்படுத்த முடியும். மேலும் உங்கள் வாடிக்கையாளரால் அந்த எண்ணுக்கு தகவல் அனுப்பிடவும் முடியும். சரிபார்ப்பின்போது, தொலைபேசி அழைப்பின் மூலம் குறியீட்டை பெறுவதற்கு “என்னை அழை” என்ற தேர்வை தேர்ந்தெடுக்கவும்.
• WHATSAPP தூதர் மற்றும் WHATSAPP BUSINESS இரண்டையும் இயக்கிடுங்கள்: ஒரே கைபேசியில் உங்களால் WhatsApp தூதர் மற்றும் WhatsApp Business இரண்டையும் பயன்படுத்த முடியும். ஆனால் ஒவ்வொரு செயலிக்கும் தனித்தனி கைபேசி எண் தேவை.
• WHATSAPP WEB: கணினி பிரவுசரில் இருந்தும் வாடிக்கையாளர்களுக்கு உங்களால் செயல்திறனுடன் பதிலளிக்க முடியும்.
WhatsApp தூதர் செயலியின் மீது WhatsApp Business கட்டமைக்கப்பட்டுள்ளது. மேலும் இது பல்லூடக தகவலை அனுப்புதல், இலவச அழைப்புகள்*, இலவச சர்வதேச தகவல் பரிமாற்றம், குழு அரட்டை, ஆஃப்லைன் தகவல்களை அனுப்புதல் போன்ற நீங்கள் நம்பியிருக்கக்கூடிய இன்னும் பல அனைத்து அம்சங்களையும் உள்ளடக்குகிறது.
*தரவு கட்டணங்கள் பொருந்தலாம். மேலதிக விவரங்களுக்கு உங்கள் சேவை வழங்குநரை தொடர்பு கொள்ளுங்கள்.
குறிப்பு: WhatsApp தூதரில் இருந்து WhatsApp Business செயலிக்கு அரட்டை காப்பெடுப்பை நீங்கள் மீட்டெடுத்த பின்னர், WhatsApp தூதருக்கு உங்களால் அதை திரும்ப மீட்டெடுக்க முடியாது. நீங்கள் WhatsApp தூதருக்கு திரும்ப மீட்டெடுக்க விரும்பினால், WhatsApp Business செயலியை பயன்படுத்துவதற்கு முன்னர் கைபேசியில் இருந்து கணினிக்கு அந்த காப்பெடுப்பை நகல்செய்து வைத்துக்கொள்ளுமாறு பரிந்துரைக்கிறோம்.
---------------------------------------------------------
உங்கள் கருத்துகளை வரவேற்கிறோம்! உங்களுக்கு ஏதேனும் பின்னூட்டம், கேள்விகள் அல்லது கவலைகள் இருந்தால், பின்வரும் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள்:
smb@support.whatsapp.com
அல்லது Twitter-இல் எங்களை பின்தொடர்வதற்கு:
http://twitter.com/WhatsApp
@WhatsApp
---------------------------------------------------------
புதுப்பிக்கப்பட்டது:
1 நவ., 2024