Live Transcribe & அறிவிப்பு

267ஆ கருத்துகள்
உள்ளடக்க மதிப்பீடு
அனைவருக்குமானது
1பி+
பதிவிறக்கியவை
உள்ளடக்க மதிப்பீடு
அனைவருக்குமானது
மேலும் அறிக
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்

இந்த ஆப்ஸ் பற்றி

Live Transcribe & Sound Notifications ஆப்ஸ் மூலம் காது கேளாதவர்களும் செவித்திறன் குறைபாடு உள்ளவர்களும் தங்கள் Android மொபைலைப் பயன்படுத்தியே அன்றாட உரையாடல்களையும் சுற்றியுள்ள ஒலிகளையும் எளிதாகத் தெரிந்துகொள்ளலாம்.

பெரும்பாலான சாதனங்களில் இந்தப் படிகளைப் பின்பற்றி நீங்கள் Live Transcribe & Sound Notifications ஆப்ஸைத் திறக்கலாம்:
1. சாதனத்தின் அமைப்புகள் ஆப்ஸைத் திறக்கவும்
2. மாற்றுத்திறன் வசதி என்பதைத் தட்டவும்
3. நீங்கள் பயன்படுத்த விரும்பும் அம்சத்தைப் பொறுத்து, Live Transcribe அல்லது ஒலி அறிவிப்புகள் என்பதைத் தட்டவும்

Live Transcribe அல்லது ஒலி அறிவிப்புகளைத் தொடங்க மாற்றுத்திறன் பட்டன், சைகை அல்லது விரைவு அமைப்புகளையும் பயன்படுத்தலாம் (https://g.co/a11y/shortcutsFAQ).

நிகழ்நேர டிரான்ஸ்கிரிப்ஷன்கள்
• மறுவடிவமைக்கப்பட்ட உரையாடல் இடைமுகம் சீரான மற்றும் எளிமையான முறையில் தொடர்ச்சியான உரையாடலை வழங்குகிறது.
• 80க்கும் மேற்பட்ட மொழிகளிலும் வட்டார வழக்குகளிலும் நிகழ்நேர டிரான்ஸ்கிரிப்ஷன்களைப் பெறலாம். நீங்கள் அடிக்கடி பயன்படுத்தும் பெயர்கள், வீட்டுப் பொருட்கள் போன்ற பிரத்தியேக வார்த்தைகளைச் சேர்க்கலாம்.
• யாராவது உங்கள் பெயரைச் சொல்லும்போது உங்கள் மொபைல் அதிர்வுறும்படி அமைக்கலாம்.
• உரையாடலில் பதில்களை டைப் செய்யலாம்.
• தெளிவான ஆடியோவிற்காக வயர் ஹெட்செட்களிலும் புளூடூத் ஹெட்செட்களிலும் உள்ள வெளிப்புற மைக்ரோஃபோன்களையும் USB மைக்குகளையும் பயன்படுத்தலாம்.
• மடக்கத்தக்க மொபைல் ஃபோன்களில், டிரான்ஸ்கிரிப்ஷன்களையும் டைப் செய்யப்பட்ட பதில்களையும் வெளிப்புறத் திரையில் காட்டும். இதன் மூலம் மற்றவர்களுடன் இன்னும் எளிதாக உரையாடலாம்.
• டிரான்ஸ்கிரிப்ஷன்களை 3 நாட்களுக்குச் சேமிப்பதற்குத் தேர்வுசெய்யலாம். சேமித்த டிரான்ஸ்கிரிப்ஷன்கள் உங்கள் சாதனத்தில் 3 நாட்களுக்கு இருக்கும். இதனால் நீங்கள் அவற்றை நகலெடுத்து வேறு இடத்தில் ஒட்டி வைத்துக்கொள்ளலாம். இயல்பாகவே டிரான்ஸ்கிரிப்ஷன்கள் சேமிக்கப்படுவதில்லை.

ஒலி அறிவிப்புகள்
• உங்களைச் சுற்றி ஸ்மோக் அலாரம் ஒலிப்பது, குழந்தை அழுவது போன்ற முக்கிய ஒலிகள் பற்றிய அறிவிப்பைப் பெறலாம்.
• உங்கள் வீட்டு உபயோகச் சாதனங்கள் ஒலி எழுப்பும்போது அறிவிப்பைப் பெறுவதற்கு அவற்றின் பிரத்தியேக ஒலிகளைச் சேர்க்கலாம்.
• உங்களைச் சுற்றி என்ன நடந்தது என்பதைத் தெரிந்துகொள்ள கடந்த 12 மணிநேரத்தில் பெற்ற ஒலி அறிவிப்புகளை மீண்டும் கேட்கலாம்.

தேவைகள்:
• Android 12 மற்றும் அதற்குப் பிந்தைய பதிப்புகள்

காது கேளாதவர்கள், செவித்திறன் குறைபாடு உள்ளவர்களுக்கெனப் பிரத்தியேகமாக உள்ள அமெரிக்காவின் காலாடெட் பல்கலைக்கழகத்துடன் இணைந்து Live Transcribe & Sound Notifications ஆப்ஸ் உருவாக்கப்பட்டது.

உதவி & கருத்து
• கருத்தை வழங்குவதற்கும் தயாரிப்பு பற்றிய அறிவிப்புகளைப் பெறுவதற்கும் https://g.co/a11y/forum பக்கத்தில் உள்ள மாற்றுத்திறன் வசதி Google குழுவில் சேரலாம்
• Live Transcribe & Sound Notifications ஆப்ஸைப் பயன்படுத்துவதில் உதவி தேவைப்பட்டால் https://g.co/disabilitysupport பக்கத்தில் எங்களைத் தொடர்புகொள்ளலாம்

அனுமதிகளுக்கான அறிவிப்பு
மைக்ரோஃபோன்: உங்களைச் சுற்றி கேட்கும் பேச்சையும் ஒலிகளையும் எழுத்தாக்கம் செய்ய Live Transcribe & Sound Notifications ஆப்ஸுக்கு மைக்ரோஃபோன் அணுகல் தேவை. டிரான்ஸ்கிரிப்ஷன்களோ கண்டறியப்பட்ட ஒலிகளோ செயலாக்கப்பட்ட பிறகு அவற்றின் ஆடியோ சேமிக்கப்படுவதில்லை.
அறிவிப்புகள்: ஒலிகளைப் பற்றி உங்களுக்குத் தெரிவிக்க, ஒலி அறிவிப்புகள் அம்சங்களுக்கு அறிவிப்புகளுக்கான அணுகல் தேவை.
அருகிலுள்ள சாதனங்கள்: உங்கள் புளூடூத் மைக்ரோஃபோன்களுடன் இணைக்க, Live Transcribe ஆப்ஸுக்கு அருகிலுள்ள சாதனங்களுக்கான அணுகல் தேவை.
மாற்றுத்திறன் சேவை: ஒலி அறிவிப்புகள் அம்சம் பின்னணியில் அதன் ஒலி கண்டறிதல் சேவையை இயக்கவும், உங்கள் சாதனத்தின் மாற்றுத்திறன் பட்டன் மூலமோ சைகை மூலமோ விரைவு அணுகலை ஆன் செய்யவும் Accessibility Service APIயைப் பயன்படுத்துகிறது. திரை உள்ளடக்கத்தையோ தனிப்பட்ட தகவலையோ படிக்க, சேகரிக்க அல்லது சேமிக்க இந்த API பயன்படுத்தப்படுவதில்லை.
உங்களின் உரையாடல்கள், ஒலி நிகழ்வு அறிவிப்புகளின் நிகழ்நேர டிரான்ஸ்கிரிப்ஷன்கள்
புதுப்பிக்கப்பட்டது:
17 ஆக., 2026

தரவுப் பாதுகாப்பு

டெவெலப்பர்கள் உங்கள் தரவை எப்படிச் சேகரிக்கிறார்கள் பகிர்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வதிலிருந்தே 'பாதுகாப்பு' தொடங்குகிறது. உங்கள் உபயோகம், பிராந்தியம், வயது ஆகியவற்றின் அடிப்படையில் தரவுத் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் வேறுபடலாம். இந்தத் தகவலை டெவெலப்பர் வழங்கியுள்ளார். அவர் காலப்போக்கில் இதைப் புதுப்பிக்கக்கூடும்.
  • தரவு எதுவும் மூன்றாம் தரப்புடன் பகிரப்படாது
    பகிர்தலை டெவெலப்பர்கள் எப்படி அறிவிக்கிறார்கள் என்பது குறித்து மேலும் அறிக
  • இந்த ஆப்ஸ் பயனரின் தரவு வகைகளைச் சேகரிக்கக்கூடும்
    தனிப்பட்ட தகவல், ஆடியோ மற்றும் 3 தரவு வகைகள்
  • தரவு அனுப்பப்படும்போது என்க்ரிப்ட் செய்யப்படும்
  • தரவை நீக்க முடியாது

மதிப்பீடுகளும் மதிப்புரைகளும்

261ஆ கருத்துகள்
Shanmugam C
8 ஆகஸ்ட், 2026
super ❤️
இது உதவிகரமாக இருந்ததா?
Nehah R Mrs. (Nehah)
29 ஜூலை, 2026
அருமையான ஆப்
இது உதவிகரமாக இருந்ததா?
தாவீது Seenipandian
11 டிசம்பர், 2025
awesome
இந்தக் கருத்து பயனுள்ளதாக இருந்தது என 5 பேர் குறித்துள்ளார்கள்
இது உதவிகரமாக இருந்ததா?

புதிய அம்சங்கள்

• மறுவடிவமைக்கப்பட்ட உரையாடல் இடைமுகம் சீரான மற்றும் எளிமையான முறையில் தொடர்ச்சியான உரையாடலை வழங்குகிறது.