ஆன்ட்ராய்டுக்கான ஃபயர்ஃபாக்ஸ் பிரவுசர் தானாக தனிஉரிமையை காக்கக் கூடிய நம்பமுடியாத வேகமானது. தினமும் ஆயிரக்கணக்கான ஆன்லைன் டிராக்கர்கள் உங்களை பின்தொடர்கிறார்கள். நீங்கள் ஆன்லைனில் எங்கு செல்கிறீர்கள் என்ற தகவலை சேகரித்து, உங்கள் வேகத்தை குறைக்கிறார்கள். இதுபோன்ற 2000க்கும் மேற்பட்ட டிராக்கர்களை ஃபயர்ஃபாக்ஸ் இயல்பாகவே பிளாக் செய்கிறது. ஃபயர்ஃபாக்ஸுடன் பாதுகாப்பான மற்றும் உங்களுக்கு தேவையான வேகத்துடன் கூடிய பிரைவேட் மொபைல் பிரவுசரை பெறுங்கள்.
வேகம். தனிஉரிமை. பாதுகாப்பு.
முன்எப்போதையும் விட வேகமான ஃபயர்ஃபாக்ஸ், உங்கள் தனிஉரிமையை பாதுகாக்கும் சக்திவாய்ந்த வெப் பிரவுசரை வழங்குகிறது. இதற்காக, ஃபயர்ஃபாக்ஸில் உங்கள் பிரைவசி செட்டிங்சை தோண்டி துழாவ வேண்டியதில்லை. அனைத்தும் தாமாகவே அமைக்கப்பட்டிருக்கும். ஆனாலும் உங்கள் கட்டுப்பாட்டில் இருக்க விரும்பினால், பிரவுசரில் கிடைக்கக் கூடிய பல்வேறு ஆட் பிளாக்கர் ஆட்-ஆன்ஸ்-ல் இருந்து நீங்களே தேர்வு செய்யலாம். உங்கள் பிரைவசி, பாஸ்வேர்ட் மற்றும் புக்மார்க்குகளை பாதுகாப்பாக வைத்திருக்கும் ஸ்மார்ட் பிரவுசிங் ஃபீச்சர்ஸ்களுடன் ஃபயர்ஃபாக்ஸை நாங்கள் வடிவமைத்துள்ளோம்.
மேம்பட்ட டிராக்கிங் புரொடெக்ஷன் மற்றும் பிரைவசி கன்ட்ரோல்
ஃபயர்ஃபாக்ஸின் மேம்பட்ட டிராக்கிங் புரொடெக்ஷன் மூலம், இணையத்தில் உங்களை பின்தொடரும் தேவையற்ற விளம்பரங்கள் மற்றும் தேர்டு-பார்ட்டி குக்கீஸ்களை பிளாக் செய்யலாம். பிரைவேட் பிரவுசிங் மோடில் தேடும்போது,– தேடலை முடித்ததும் உங்களின் பிரைவேட் பிரவுசிங் ஹிஸ்டிரி தானாகவே அழிக்கப்படும்.
இணையத்தில் எங்கிருந்தாலும், உங்கள் வாழ்க்கையை சொந்தமாக்குங்கள்.
- பாதுகாப்பு மற்றும் தடையற்ற பிரவுசிங்குக்கு உங்கள் அனைத்து டிவைஸ்களிலும் ஃபயர்ஃபாக்சை இன்ஸ்டால் செய்யுங்கள்.
- நீங்கள் எங்கு சென்றாலும், உங்களுக்கு விரும்பமான புக்மார்க்குகள், சேவ் செய்த லாகின்கள் மற்றும் பிரவுசிங் ஹிஸ்டிரியை எடுக்க உங்கள் டிவைஸ்களை ஷிங்க் செய்யுங்கள்.
- மொபைல் மற்றும் டெஸ்க்டாப் இடையே திறந்த டேப்களை அனுப்பலாம்.
- அனைத்து சாதனங்களிலும் உங்கள் பாஸ்வேர்டை நினைவில் வைத்திருந்து, பாஸ்வேர்ட் நிர்வகித்தலை ஃபயர்ஃபாக்ஸ் எளிதாக்குகிறது.
- உங்கள் தனிப்பட்ட டேட்டா பாதுகாப்பானது, ஒருபோதும் லாபத்திற்காக விற்கப்படுவதில்லை என்பதை அறிந்து, உங்கள் இணைய வாழ்க்கையை எங்கும் எடுத்துச் செல்லுங்கள்.
புத்திச்சாலித்தனமாக தேடுங்கள் & விரைவாக பெறுங்கள்
- விக்கிபீடியா, டிவிட்டர், அமேசான் உள்ளிட்ட தேடல் வழங்குநர்களின் ஷார்ட்கட்டை எளிதாக அணுகலாம்
தனிஉரிமையின் அடுத்த கட்டம்
- உங்கள் தனிஉரிமை மேம்படுத்தப்பட்டுள்ளது. டிராக்கிங் புரொடெக்ஷனுடன் கூடிய பிரைவேட் பிரவுசிங் உங்கள் பிரவுசிங் செயல்பாட்டை கண்காணிக்கக் கூடிய வெப் பேஜ்களின் பகுதிகளை தடுக்கிறது.
விருப்பமான விஷுவல் டேப்கள்
- திறந்திருக்கும் வெப் பேஜ்களை இழக்காமல், நீங்கள் விரும்பும் பல டேப்களை திறக்கலாம்.
விரும்பும் சைட்களை எளிதில் அணுகுங்கள்
- உங்களுக்கு பிடித்த சைட்களை தேடுவதில் நேரத்தை செலவிடுதற்கு பதிலாக அதனை வாசிப்பதில் செலவிடுங்கள்.
வேகமான ஷேர்
- ஃபயர்ஃபாக்ஸ் வெப் பிரவுசர், நீங்கள் சமீபத்தில் பயன்படுத்திய பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிவிட்டர், வாட்ஸ்அப், ஸ்கை போன்ற ஆப்களை வெப் பேஜுடன் இணைப்பதால், அந்த பேஜ்கள், அதிலுள்ள அம்சங்களின் லிங்கை ஷேர் செய்வது எளிது.
பெரிய திரைக்கு எடுத்துச் செல்லுங்கள்
- உங்கள் ஸ்மார்ட் போன் அல்லது டேப்லெட்-ல் இருந்து வீடியோ மற்றும் வெப் கன்டென்ட்களை ஸ்ட்ரீமிங் திறன் கொண்ட எந்த டிவிக்கும் அனுப்பலாம்.
ஆன்ட்ராய்டுக்கான ஃபயர்ஃபாக்ஸ் பற்றி மேலும் அறிக:
- கேள்விகள் உள்ளதா, உதவி தேவையா? வாருங்கள் https://support.mozilla.org/mobile
- ஃபயர்ஃபாக்ஸ் அனுமதிகள் பற்றி படிக்க: https://mzl.la/Permissions
மொஸில்லா பற்றி
அனைவரும் பயன்படுத்தக்கூடிய பொது வளமாக இன்டர்நெட்டை உருவாக்க மொஸில்லா உள்ளது. ஏனெனில், அணுக முடியாத, கட்டுப்படுத்தப்பட்டதை விட திறந்த மற்றும் இலவசமானதே சிறந்ததென நாங்கள் கருதுகிறோம். தேர்ந்தெடுக்க, வெளிப்படைத்தன்மையை ஊக்குவிக்க, மக்கள் தங்கள் ஆன்லைன் வாழ்க்கையை கட்டுப்பாட்டில் வைத்திருக்க ஃபயர்ஃபாக்ஸ் போன்ற புராடெக்ட்களை நாங்கள் உருவாக்குகிறோம். மேலும் அறிய https://www.mozilla.org
பிரைவசி கொள்கை: https://www.mozilla.org/legal/privacy/firefox.html
புதுப்பிக்கப்பட்டது:
30 அக்., 2024