"சரியான அணுகுமுறைகள், அதன் மூலம் நிலையான வெற்றி" இதுதான் இந்த புத்தகம்.
16 வருட விற்பனை மற்றும் விற்பனைக் குழு மேலாண்மை அனுபவம், 9 வருட பயிற்சி அனுபவம் மற்றும் 8 புத்தகங்களை எழுதிய அனுபவம் ஆகியவற்றைக் கொண்டு எழுதப்பட்டு இருக்கிறது இந்த புத்தகம்.
பிரசன்னா வெங்கடேசன் ஒரு அடிமட்ட விற்பனையாளராக தனது பணியை 1994ம் வருடம் துவங்கி, அன்றாட உபயோகப்பொருட்கள் முதல் ஆயுள் காப்பீடு வரை விற்பனை செய்துள்ளார். மேலும், ஆயிரக்கணக்கான நபர்களை விற்பனைத்துறையில் வழிநடத்தும் பதவியிலும் இருந்துள்ளார்.
பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிந்த சமயம், பல்வேறு விற்பனை நுணுக்கங்களை அனுபவப்பூர்வமாக கற்று, அவற்றை தனது பயிற்சி மற்றும் புத்தகங்கள் வாயிலாக மற்றவர்களுக்கும் கற்றுத தருகிறார்.
இவர் ஒரு வெற்றிப் பயிற்சியாளர், எழுத்தாளர் மற்றும் வழக்கறிஞர்.