Kavithai Kadambam: கவிதைக் கதம்பம்

· Saba Vadivelu
4,8
4 ta sharh
E-kitob
97
Sahifalar soni

Bu e-kitob haqida

 

                        கதம்ப மணம்

எண்ணங்களின் இசைப்பே கவிதைகளாம். சிந்தனைக் கருவை வளர்த்தெடுத்து, எழிலுருவம் பெற்றிடத் துணை நிற்பவையே கவி தொடுக்கும் சொற்களாம்.  சக்தி தரும் உணவிற்குச் சுவையூட்டுதல் போன்றதே கவிதை வடிவம் .  இலக்கணம் கடந்து, இன்னோசை தேர்ந்து, எளிமையுடன் வடிக்கப்பெறுவதே மரபுசாராக் கவிதை யெனலாம். வரிகளை ஒடித்து, மடித்து எழுதுதல் அன்று புதுக்கவிதை.  கேட்பவர் விழைந்து கேட்கும் வண்ணம்   பழகு தமிழில் சொல்லும் பாங்கே புதுக்கவிதை. யாப்புச் சுதந்திரம் கவிதையை எண்ணற்றவர்களிடம் எடுத்துச்செல்ல உதவுகிறது. பண்டிதர்களுக்கும் அப்பால் கவிதாரசனை இருப்பது கணக்கில் கொள்ளப்படுகிறது.

               கருத்துவானில் கடிவாளமின்றி கற்பனைத்தேரில் சொல்லேருழவர்கள் பவனி வருவர். எத்துணை எத்துணை கவியுள்ளங்கள் நாளும் தமிழ் வளர்க்கின்றன. எவ்வளவு இயல்பாகவும் எளிதாகவும் வலைகளிலும் வலைப்பூக்களிலும் தளங்களிலும் இணையங்களிலும் மின்னூல்களிலும் உலகளாவிய தமிழ் வாசிப்புகள் ! புத்தம்புதிய எண்ணங்கள், கருத்துருக்கள், ஆக்கங்கள், வார்ப்புகள் சொல்லோவியங்களாய், கலைச் சிற்பங்களாய் நாளும் உயிர்க்கின்றன! வளர்தமிழின் புதுப்புதுப் பரிமாணங்கள் வைகலும் வளர்த்தெடுக்கப் பெறுகின்றனவே !

         இச்சூழல்தந்த துணிவின் விளைவே நானும் கவிதை எழுதத்தொடங்கியது. பலபொழுதில் பல்வகைச் சூழலில் கருக்கொண்ட கருத்துகளைக் கவிதையாக்கிப் பார்த்தேன்;  நம்மைச்சுற்றி நிகழ்வன, நாம் துய்க்கும் சுற்றுச்சூழல், மென்மையான மனித  உணர்வுகளின் ஆளுமை, உறவுகளின் மென்மையும் வன்மையும், வாழ்வின் வசந்தமான இளமையும், கோடையாகிய முதுமையில் தனிமையும், பழைமையும், புதுமையும்,  ஒளிரும் பன்முக மனித ஆற்றல் எனப் பல்சுவை கொண்ட பாக்களைத்தான் வார்த்துள்ளேன்.

            புறநிகழ்வுககளைக் காண்பதையும் கேட்பதையும் உள்ளுவதையும் உணர்வுகளாய் வடித்துள்ளேன். அரசியல், சமுதாய, தனிமனித ஒழுக்கங்களின் வீச்சும் தாக்கமும் எளிய தமிழில் கவிதைகளாய்ப் பதிவுபெற்றுள்ளன. இவற்றின் தொகுப்பே  கவிதைக் கதம்பமாய் உங்கள் கைகளில் தவழ்கிறது. மணம்வீசி உங்கள் கருத்தையும் கவரும் என நம்புகிறேன்.   

கவிதைக் கதம்பத்தின் சுகந்தத்தைச் சுவாசிப்பீர் !

கவிதைகளை வாசியுங்கள் ;

என்போன்ற எளியோர்க்கும் வசமாகும்

வண்டமிழை வாழ்த்துங்கள் !                            

 சபா வடிவேலு

திருச்சிராப்பள்ளி

                                                                                                                                                                                                                                                                                                                                                                                   


Reytinglar va sharhlar

4,8
4 ta sharh

Muallif haqida

  

   நூலாசிரியர்:

   சபா வடிவேலு -                                                மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில்  தொலைநிலைக் கல்வி இயக்குநராகவும்,  முதுநிலை வணிகவியல் பேராசிரியராகவும்  பணி புரிந்து ஓய்வு பெற்றவர். உயர்கல்வித்  துறையில் 37 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர்.  தமிழ் ஆர்வலர், இலக்கியச் சுவைஞர்,   மரபுசாராக் கவிதை புனைபவர்.                                

குறள் தரும் சிந்தனைகள்     நூலின் ஆசிரியராவார்..

  இவரது  பிற எழுத்துகளை வாசிக்க :-

  இணைய தளம்      : www.sabavadivelu.com  

  இவரைத் தொடர்பு கொள்ள  : -

  மின்னஞ்சல்         : sabavadivelu@gmail.com

  கைபேசி                : 91 + 94422 06051

Bu e-kitobni baholang

Fikringizni bildiring.

Qayerda o‘qiladi

Smartfonlar va planshetlar
Android va iPad/iPhone uchun mo‘ljallangan Google Play Kitoblar ilovasini o‘rnating. U hisobingiz bilan avtomatik tazrda sinxronlanadi va hatto oflayn rejimda ham kitob o‘qish imkonini beradi.
Noutbuklar va kompyuterlar
Google Play orqali sotib olingan audiokitoblarni brauzer yordamida tinglash mumkin.
Kitob o‘qish uchun mo‘ljallangan qurilmalar
Kitoblarni Kobo e-riderlar kabi e-siyoh qurilmalarida oʻqish uchun faylni yuklab olish va qurilmaga koʻchirish kerak. Fayllarni e-riderlarga koʻchirish haqida batafsil axborotni Yordam markazidan olishingiz mumkin.