ஸ்மார்ட்ஃபோன்கள் மற்றும் டேப்லெட்டுகள் போன்ற Android சாதனங்களுக்கான Zoho Sheet செயலியைப் பயன்படுத்தி உங்கள் விரிதாள்களை உருவாக்கலாம், திருத்தலாம், பகிரலாம் மற்றும் கூட்டுப்பணியாற்றலாம். ஆஃப்லைன் மற்றும் ஆன்லைன் இரண்டிலும் வேலை செய்யலாம்.
தனித்த விரிதாள் செயலியாக, உங்கள் கிரெடிட் அல்லது டெபிட் கார்டுகளை இணைக்குமாறு நாங்கள் உங்களிடம் கேட்பதில்லை, மேலும் மறைக்கப்பட்ட செலவுகளைப் பின்னர் அறிமுகப்படுத்துவதில்லை - இது முற்றிலும் இலவசம்.
நீங்கள் ஆன்லைனில் வேலை செய்ய விரும்பினால் பதிவுசெய்தால் மட்டும் போதும். ஆஃப்லைனில் வேலை செய்ய விரும்புகிறீர்களா? இப்போதே தொடங்கலாம்—பதிவுசெய்ய வேண்டியதில்லை.
Zoho Sheet மூலம் நீங்கள் இவற்றைச் செய்யலாம்:
செயலிக்குள்ளேயே புதிதாக விரிதாள்களை உருவாக்கி அவற்றை முழுமையாக நிர்வகிக்கலாம்.
கிளவுடில் உள்ள கோப்புகளை அணுகலாம் அல்லது தேவைப்பட்டால் உங்கள் சாதனத்திலிருந்தும் ஆஃப்லைனில் வேலை செய்யலாம்.
உங்கள் சாதனத்திலும், Box மற்றும் DropBox போன்ற கிளவுட் செயலிகளிலும் சேமிக்கப்பட்டுள்ள MS Excel கோப்புகளையும் (XLSX, XLS, XLSM மற்றும் XLTM), CSV, TSV, ODS மற்றும் பல வகைக் கோப்புகளையும் திறக்கலாம், திருத்தலாம்.
'படத்திலிருந்து தரவு' அம்சத்தைப் பயன்படுத்தி பில்கள், இன்வாய்ஸ்கள் மற்றும் ரசீதுகளுக்கான விரிதாள்களை உருவாக்கலாம். உங்கள் பேப்பர் ரெக்கார்டுகளை ஸ்கேன் செய்து, சில நொடிகளில் விரிதாள்களாக மாற்றலாம்.
எங்கள் ரெடிமேட் விரிதாள் டெம்ப்ளேட்டுகளைப் பயன்படுத்தி உங்கள் நேரத்தாள்கள், பட்ஜெட் விரிதாள்கள் மற்றும் பலவற்றை உடனடியாக அமைக்கலாம்.
உங்கள் விரிதாள்களை கூட்டுப்பணியாளர்களுடன் பகிரலாம், வெவ்வேறு அனுமதி நிலைகளை அமைக்கலாம், நிகழ்நேரத்தில் ஒன்றாக வேலை செய்யலாம்.
செல் அல்லது வரம்புகளில் கருத்துகளைச் சேர்க்கலாம், மேம்பட்ட குழுப்பணிக்காக கூட்டுப்பணியாளர்களைக் குறிப்பிட @mention அம்சத்தைப் பயன்படுத்தலாம்.
பல்வேறு தரவு சரிபார்ப்புக் கருவிகளைப் பயன்படுத்தி துல்லியமான தரவு உள்ளீட்டை உறுதிசெய்யலாம்.
அனைத்து அடிப்படைக் கருவிகளையும் பயன்படுத்தி உங்கள் செல்களை வடிவமைக்கலாம், வரிசைப்படுத்தலாம் வடிகட்டலாம், நிபந்தனை வடிவமைப்பைப் பயன்படுத்தலாம்.
VLOOKUP, XLOOKUP, IF உள்ளிட்ட 350க்கும் மேற்பட்ட செயல்பாடுகள் மற்றும் சூத்திரங்களைக் கொண்டு சிக்கலான கணக்கீடுகளைச் செய்யலாம்.
35க்கும் மேற்பட்ட வகையான விளக்கப்படங்களைப் பயன்படுத்தி உங்கள் கண்டுபிடிப்புகளைக் காட்சிப்படுத்தலாம்.
எங்கள் நிறுவனத்தில் உள்ள செயற்கை நுண்ணறிவான Zia, கடினமான வேலைகளைச் செய்யும் - ஸ்மார்ட் தரவுப் பகுப்பாய்வுப் பரிந்துரைகளைப் பெறலாம், தானாக விளக்கப்படங்கள் மற்றும் பைவட் அட்டவணைகளை உருவாக்கலாம், மேலும் குரல் கட்டளைகளைப் பயன்படுத்தி கேள்விகளைக் கூடக் கேட்கலாம்.
நீங்கள் செய்யும் ஒவ்வொரு வேலையும் தானாகவும் பாதுகாப்பாகவும் சேமிக்கப்படும் என்பதால் நீங்கள் கவலையின்றி இருக்கலாம்.
உங்கள் தரவை தளங்களுக்கு இடையே ஒத்திசைவில் வைத்திருங்கள்
Zoho Sheet வலை மற்றும் iOS-லும் கிடைக்கிறது. சிறப்பம்சம் என்னவென்றால்? தரவு உடனடியாகவும் தானாகவும் ஒத்திசைக்கப்படுகிறது, எனவே நீங்கள் எந்த நேரத்திலும் தளங்களுக்கு இடையில் மாறலாம்.
Zoho-இன் தனியுரிமை வாக்குறுதி
எங்கள் நிறுவனத்தின் தத்துவம் எப்போதும் உங்கள் தனியுரிமையை மதிப்பதை மையமாகக் கொண்டது. எங்கள் 25+ ஆண்டுகால வரலாற்றில், எங்கள் பயனர்களின் தகவல்களை விளம்பரத்திற்காக யாருக்கும் விற்றதில்லை; மூன்றாம் தரப்பு விளம்பரங்களைக் காட்டி வருவாய் ஈட்டியதில்லை. உங்கள் விரிதாள் தரவு உங்களுடையதாகவே இருக்கும்.
வணிகங்களுக்கு Zoho வழங்கும் சிறப்பு பலன்கள்
Zoho Sheet என்பது Zoho ஆஃபிஸ் தொகுப்பில் உள்ள விரிதாள் மென்பொருளாகும், இதில் சொல் செயலாக்கத்திற்கான Zoho Writer, விளக்கக்காட்சிகளுக்கான Zoho Show ஆகியவை அடங்கும். நீங்கள் Zoho Sheet-இல் பதிவுசெய்தால், உங்கள் தாள்கள், விளக்கக்காட்சிகள் மற்றும் word ஆவணங்களை ஒரே இடத்தில் உருவாக்கி நிர்வகிக்க பல்வேறு கருவிகளைப் பெறுவீர்கள். இது ஆன்லைன் கோப்பு சேமிப்பு, கூட்டுப்பணிக் கருவியான Zoho WorkDrive மற்றும் மின்னஞ்சல், கூட்டுப்பணித் தொகுப்பான Zoho Workplace ஆகியவற்றின் ஒரு பகுதியாகும்.
Zoho-இன் ஒற்றை உள்நுழைவுக் கணக்கு உங்களுக்குத் தேவையான அனைத்து Zoho செயலிகளையும் அணுகுவதை எளிதாக்குகிறது. எங்கள் எக்கோசிஸ்டம் தற்போது வணிக வகைகளில் விற்பனை, மார்க்கெட்டிங், மின்னஞ்சல் மற்றும் கூட்டுப்பணி, நிதி, HR போன்ற 55+ செயலிகளை வழங்குகிறது.
மேலும் விவரங்களுக்கு: https://www.zoho.com/sheet/mobile.html
செயலி சார்ந்த கேள்விகளுக்கு android-support@zohosheet.com என்ற முகவரியில் எங்களுக்கு அஞ்சல் அனுப்புங்கள்.
புதுப்பிக்கப்பட்டது:
17 டிச., 2025